கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 செப்
2013
00:00

கேள்வி: என்னிடம் சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட் போன் உள்ளது. இதில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி, நிறைய எண்ணிக்கையில் போட்டோக்களை எடுத்துள்ளேன். இதனை எப்படி நீக்குவது?
-ஆ. சிவராஜ், திருவண்ணாமலை.
பதில்:
மிக எளிது. குறிப்பிட்ட போட்டோவினை, போனின் காலரியில் திறந்து, ஸ்கிரீனில் தட்ட, நமக்கு மெனு ஒன்று கிடைக்கும். இதில் அதனை அழிக்க ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். அதனை அழுத்தி, பின் மீண்டும் அது கேட்கும் உறுதிக்கு ஓகே சொல்லி நீக்கலாம். அல்லது இன்னொரு எளிய வழி. கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி. கேபிள் மூலம் இணைத்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டர், உங்கள் போனையும், ஒரு கேமரா போல, அல்லது யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் போலக் காட்டும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, போனின் ட்ரைவைத் திறந்து, போட்டோக்கள் உள்ள போல்டருக்குச் சென்று, அதில் அழிக்க வேண்டிய போட்டோக்களை மொத்தமாகத் தேர்ந்தெடுத்து அழிக்கலாம்.

கேள்வி: நான் புதிதாகச் சேர்ந்த அலுவலகத்தின் கணிப்பொறி மையத்தில், சிஸ்டம் அப் டைம், ஒவ்வொருவரும் குறித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றனர். இது எதனைக் குறிக்கிறது? எங்கள் மையத்தில், விண்டோஸ் எக்ஸ்பி சர்வரும், கம்ப்யூட்டர்களும் இயங்குகின்றன.
சு. விநாயகம், திருப்பூர்.
பதில்:
கம்ப்யூட்டர் சிஸ்டம் ஒன்று, இறுதியாக செயல்படத் தொடங்கியதில் இருந்து, அப்போது கண்டறியப்படும் நேரம் வரையில் உள்ள காலத்தினை சிஸ்டம் அப் டைம் System Uptime என்கிறோம். இதனை எப்படி அறிவது? உங்களுடைய சிஸ்டம் எக்ஸ்பி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதில் Start பட்டன் அழுத்தி Run கட்டத்தைத் தேர்ந்தெடுங்கள். இதில் CMD என டைப் செய்து என்டர் அழுத்த கருப்பு திரையில் டாஸ் ப்ராம்ப்ட் என்று சொல்லப்படும் கட்டளைப் புள்ளி கிடைக்கும். இதில் systeminfo என இடைவெளி விடாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். இப்போது உங்கள் சிஸ்டம் படிக்கப்பட்டு, சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். இதில் System Uptime எனக் காட்டப்பட்டு அதன் எதிரே, இதுவரை உங்கள் கம்ப்யூட்டர் இறுதியாக ஆன் செய்ததிலிருந்து எவ்வளவு நேரம் ஓடியுள்ளது எனக் காட்டப்படும். நாட்கணக்கில் ஓடியிருந்தாலும் Days, Hours, Minutes, Seconds எனக் காட்டப்படும்.இது மட்டுமின்றி, கம்ப்யூட்டர் செயல்பாடு குறித்த இன்னும் பல ஆர்வமூட்டும் தகவல்கள் காட்டப்படும்.
உங்கள் நிறுவனம் நீங்கள் வேலை செய்த நேரம் எவ்வளவு, அந்த நேரத்தில் நீங்கள் மேற்கொண்ட பணி என்ன, அளவு என்ன என்பது குறித்து அறிவதற்காக, இதனைக் கணக்கெடுக்கக் கூறி இருக்கலாம்.

கேள்வி: இணையதளங்கள், பிராட்பேண்ட் இணைப்புகள் ஆகியவற்றிற்கான, பாஸ்வேர்ட்களை அமைக்கையில், பல வேளைகளில், கேப்ஸ் லாக் கீ அழுத்தியவாறு செயல்படுவதால், பாஸ்வேர்ட் தவறு என உணர்கிறேன். இதற்குப் பதிலாக, கேப்ஸ் லாக் கீ, தற்போது எந்த நிலையில் உள்ளது எனத் திரையில் தொடர்ந்து காட்டுமாறு செய்திட முடியுமா? அதற்கான செட்டிங் என்ன?
எஸ்.என். கைலாஷ், ராமநாதபுரம்.
பதில்:
அநேகமாக, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் கேட்கும் வகையில், திரையில், கேப்ஸ் லாக் நிலையைக் காட்ட, விண்டோஸ் இயக்கத்தில் எந்த வழியும் இல்லை. முன்பு வந்த கீ போர்டுகளில், இந்த கீகளின் உள்ளாகவே, சிறிய எல்.இ.டி. விளக்கு எரியும் வகையில் அமைத்துத் தந்தனர். தற்போது பட்ஜெட் விலை கீ போர்டுகளில் இதெல்லாம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், மிகச் சிறியதாக இருப்பதால், நாம் அவற்றைக் கவனிப்பதில்லை. ஆனால், ஒரு தர்ட் பார்ட்டி புரோகிராம் வழியாக இவற்றைத் தெளிவாகக் காட்டும்படி செய்திடலாம்.
இதன் பெயர் கீ போர்ட் இன்டிகேட்டர் (Keyboard Indicator) என்பதாகும். இந்த புரோகிராம் இத்தகைய கீகள் எந்த நிலையில் உள்ளன என்பதைத் திரையில் காட்டும். கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த புரோகிராமினைப் பயன்படுத்துகையில், ஸ்டேட்டஸ் பாரில் இந்த கீகள் குறித்த தகவல்கள் காட்டப்பட வேண்டுமாயின், அதனை கன்பிகர் செய்திட வேண்டும். இதன் மூலம், மேலே சுட்டிக் காட்டப்பட்ட கீகள் அழுத்தப் பட்ட நிலையில் இருந்தால் சிகப்பு வண்ணத்திலும், அழுத்தப்படாத நிலையில் இருந்தால், ஊதா நிறத்திலும் காட்டப்படும். மேலும் இதற்கான ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்றாலும், இந்த கீகளின் நிலை தெரியவரும்.
கீயின் நிலை மாறுகையில் விளக்கின் நிறம் மாறுவதுடன், அது குறித்த சிறிய செய்தி ஒன்றும் நமக்குத் திரையில் காட்டப்படுகிறது. இந்த செய்தியையும் திரையின் எந்த மூலையில் காட்டப்பட வேண்டும் என்பதனை நாம் செட் அப் செய்திட முடியும். இந்த மூன்று கீகளுக்கு மட்டுமின்றி, இன்ஸெர்ட் கீ அழுத்தப்பட்டாலும் இதே போல செய்தி காட்டப்படும். இதனால் நாம் நம்மை அறியாமல் இந்த கீகளை அழுத்தினால், கிடைக்கும் செய்தியைப் பார்த்து சுதாரித்துக் கொள்ளலாம்.
இந்த புரோகிராமினை http://sites.google.com/ site/roidayan/projects/keyboardindicator என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 32 மற்றும் 64 பிட் கம்ப்யூட்டர்களில் இது செயல்படும். ஆனால் மைக்ரோசாப்ட் தரும் டாட் நெட் பிரேம் ஒர்க் 2.0 இதற்குத் தேவைப்படுகிறது. எனவே இதனையும் முதலில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: வேர்டில் டேபிள் ஒன்றை உருவாக்கிய பின்னர், அதன் வரிசைகளை, நம் இஷ்டப்படி, வேறு வகையில் அமைத்திட ஷார்ட்கட் கீ உள்ளதா? எளிதான ஒரு வழியைத் தரவும்.
கி. நீரஜா, திண்டுக்கல்.
பதில்:
படுக்கை வரிசைகளை மாற்ற வேண்டும் என்று எண்ணினால், எப்படி மாற்றலாம் என்பது உங்கள் கேள்வி.
1. எந்த வரிசையை நகர்த்த வேண்டுமோ, அந்த வரிசையில் ஏதேனும் ஒரு செல்லில் கர்சரைக் கொண்டு சென்று வைத்திடவும். ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்த வரிசைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், ஷிப்ட் அழுத்தி அனைத்து வரிசைகளையும் தேர்ந்தெடுக்கவும்.
2. பின் ஷிப்ட்+ ஆல்ட்+ அப் அல்லது டவுண் ஆரோ கீகளை அழுத்தவும். உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசை அல்லது வரிசைகள் நகரத் தொடங்கும். அவற்றை வைக்க வேண்டிய இடம் வந்தவுடன் அப்படியே விட்டுவிடவும்.
எவ்வளவு எளிதாக நகர்த்தலாம், பார்த்தீர்களா!

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து, விண்டோஸ் 7க்கு மாறி இயங்கி வருகிறேன். இதில் குறிப்பிட்ட டைரக்டரி மெனு பாரினைப் பயன்படுத்தாமல், புதிய போல்டரை உருவாக்க ஷார்ட் கட் கீ கள் உள்ளதாக என் நண்பர் கூறுகிறார். அது என்ன என்பதனை விளக்கவும்.
கா. இளஞ்செல்வன், மதுரை.
பதில்:
குறிப்பிட்ட டைரக்டரி சென்று அதில் ரைட் கிளிக் செய்து,கிடைக்கும் கீழ்விரி மெனுவில் நியூ கிளிக் செய்து, பின் போல்டர் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுவது ஒரு வகை. அதற்குப் பதிலாகத்தானே, ஷார்ட் கட் கீ கேட்கிறீர்கள்.
எங்கு புதிய போல்டர் உருவாக்கப்பட வேண்டுமோ, அங்கு செல்லவும். பின் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் ஆகிய கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். அதற்குப் பெயர் ஒன்று சூட்ட வேண்டியதுதான் உங்களின் வேலை. இந்த ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பிலும் போல்டரை உருவாக்கலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில், எண்களைக் கொண்டு வரிசையாக புல்லட் லிஸ்ட் தயார் செய்த பின்னர், டெக்ஸ்ட் அமைத்து மீண்டும் புல்லட் லிஸ்ட் தயார் செய்தால், முந்தைய எண்ணுக்கு அடுத்த எண்ணில் தொடங்குகிறது. மீண்டும் முதலில் இருந்து தொடங்க என்ன செய்திட வேண்டும்?
ஆர். மணிகண்டன், தேனி.
பதில்:
உண்மையே. வேர்ட் தொடர்ச்சியான எண்களையே அமைக்கும். இதை மாற்ற பல வழிகள் உள்ளன.
எந்த இடத்தில் புதிய லிஸ்ட் வேண்டும் என எண்ணு கிறீர்களோ அந்த இடத்தில் ஒரு ரைட் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் மெனுவில் இரண்டாவதாக உள்ள Restart Numbering என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி லிஸ்ட் புதிய எண்களுடன் தொடங்கும். ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் இந்த ஆப்ஷன் பிரிவு இல்லை என்றால் என்ன செய்வது? கிடைக்கும் மெனுவில் Bulletes and Numbering என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். அதில் Numbered என்ற டேபினைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Restart Numbering என்ற பட்டன் அருகே கிளிக் செய்து அதனைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும். இனி புதிய லிஸ்ட்டில் புதிய எண்கள் தொடக்கத்திலிருந்து தோன்றும்.

கேள்வி: நான் வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், பத்திகளுக்கு இடையே, ஒரு வரி இடைவெளி விடுவேன். ஆனால், நான் எடிட் செய்திட எனக்கு அனுப்பும் டாகுமெண்ட்கள், பாரா இடைவெளி இல்லாமல் தொடர்ந்து டைப் செய்யப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை பாரா ஒரு வரி இடைவெளி அமைக்க, ஏதேனும் செட்டிங்ஸ் அமைப்பு உள்ளதா?
என். தவமணி, புதுச்சேரி.
பதில்:
டெக்ஸ்ட் முழுவதையும் Ctrl+A அழுத்தி தேர்ந்தெடுங்கள். பின்னர் Ctrl+0 கீகளை அழுத்துங்கள். இது பாராக்களுக்கிடையில் 12 பாய்ண்ட் வரி இடைவெளி ஒன்றை ஏற்படுத்தும். இது ஒரு வரி இடைவெளிக்குச் சமமானதாகும். எளிதான வழி இதுதான்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Muthu - kancheepuram,இந்தியா
04-அக்-201310:59:32 IST Report Abuse
Nallavan Muthu எச்செல் 2007-ல் பாஸ் வோர்ட் அமைப்பது எப்படி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X