நெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 அக்
2013
00:00

இணையத்தைப் பயன்படுத்தும் போது, நம் இணைப்பிற்கென ஓர் ஐ.பி. முகவரி தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும். ஒவ்வொரு நேரமும் ஒரு முகவரி தரப்படுவதால், சில செயல்பாடுகளுக்காக, அந்த நேரத்தில் தரப்படும் ஐ.பி. முகவரி அறியவும் ஆசைப்படுவோம். அதனை எப்படி அறியலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அறிவது என்பதனை முதலில் காண்போம்.
முதல் வழி, விண்டோஸ் இயக்க முறையில் கிளிக் செய்து பெறுவது.
1. முதலில் "Network Sharing Center' என்பதனைத் திறந்து கொள்ளவும். உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம் ட்ரேயில், நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து, "Open Network and Sharing Center' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். அல்லது, ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கிடைக்கும் தேடல் கட்டத்தில், network and sharing center என டைப் செய்திடவும். இதற்கான லிங்க் கிடைத்தவுடன், அதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது "Network and Sharing Center' கிடைக்கும். இங்கு "Local Area Connection' என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது, உங்கள் இணைய இணைப்பிற்கு ஒரு பெயரினைக் கொடுத்திருந்தால், "View your active networks' என்பதன் கீழாக அது காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.
3. "Status' என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகையில், "Details' என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து, "Network Connection Details' என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் அப்போதைய இணைப்பிற்கான ஐ.பி. முகவரியும், அதன் தொடர்பான தகவல்களும் கிடைக்கும். இந்த தகவல்களில், நீங்கள் பெற்றிருக்கும் இணைப்பின் காலம், காலம் காலாவதியாகும் நாள், சேவை நிறுவன முகவரி, சர்வரின் முகவரி ஆகியவை, உங்களுக்குச் சேவை வழங்கும் நிறுவனம் தந்திருப்பின், காட்டப்படும்.
இரண்டாவதாக, டாஸ் கட்டத்தில் கட்டளைகளை அமைத்து இயக்கிப் பெறுவது.
1. ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்திடவும்.
2. இங்கு cmd /c ipconfig & pause என டைப் செய்து எண்டர் தட்டவும்.
இது, டாஸ் கட்டளைப் புள்ளி ஒன்றைக் காட்டும். நாம் கேட்ட தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கும். ஏதேனும் ஒரு கீயை அழுத்தினால், இந்த டாஸ் கட்டம் மூடப்படும். மேலே சொன்னபடி, நெட்வொர்க் குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படின், cmd /c ipconfig /all & pauseஎன கட்டளை அமைத்து எண்டர் தட்டவும்.
நேரடியாக டாஸ் கட்டம் பெற்று, தேவையான தகவல்களைப் பெற ipconfig or ipconfig/all என்றபடியும் கட்டளைகளை அமைத்துப் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X