கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 அக்
2013
00:00

கேள்வி: மின் அஞ்சலில், எமோட்டிகானைப் பயன்படுத்து என என் பிள்ளைகள் சொல்கிறார்கள். இவை எப்படி அமைக்கப்பட்டுள்ளன? இவற்றைப் பயன்படுத்துவதனால், தீமை ஏற்படுமா?
சா. உக்கம் சந்த், வேலூர்.
பதில்
: எமோட்டிகான் (emoticon) என்பது, கீ போர்ட் மூலம் ஏற்படுத்தப்படும் குறியீடுகளைக் கொண்டு, உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் டெக்ஸ்ட் தொகுப்பு எனலாம். எடுத்துக் காட்டாக, மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சிரிப்பைக் காட்டும் எமோட்டிகானைப் பார்க்கலாம். இதனை, கோலன் அடையாளத்துடன், முடிக்கும் வளைவு அடைப்புக் குறியுடன் (Colon and Curved Bracket:) அமைக்கலாம். இதே போல பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எமோட்டிகான்களை அமைக்கலாம். இவை தயாரான நிலையில் உங்கள் இமெயில் புரோகிராமில் தரப்பட்டிருக்கும். கிளிக் செய்தால், முழுப் பட்டியலும் கிடைக்கும். அதிலிருந்து தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கேள்வி: என்னிடம் எச்.பி. பிரிண்டர் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இது செயல்பட மறுக்கிறது. காரணம் என்ன? செயல்படாதா?
ஆ.பூர்ண ப்ரகாஷ், சிதம்பரம்.
பதில்:
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் அநேகமாக அனைத்து பிரிண்டர்களுமே நன்றாகவே, இணைந்து இயங்குகின்றன. விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் அனைத்து நிறுவனங்களின் பிரிண்டர்களுக்கும் ட்ரைவர் புரோகிராம்கள் இணைத்து தரப்பட்டுள்ளன. உங்களிடம் உள்ள எச்.பி. பிரிண்டர் மாடல் எண்ணை நீங்கள் குறிப்பிட்டிருந்தால், இதற்கான விடை தந்திருப்பேன். ஆனால், நிச்சயம் அந்த பிரிண்டர், விண்டோஸ் 8ல் இயங்க ட்ரைவர் ஒன்று இருக்கும். http://h10025.www1.hp.com/ewfrf/wc/document?docname=c03168175&lc=en&cc=us&destPage= document&dlc=en என்ற முகவரிக்குச் சென்றால், ட்ரைவர் புரோகிராமினைப் பெறலாம்.

கேள்வி: நான் என் கம்ப்யூட்டர் சிஸ்டத்தை விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ளேன். சில விளக்கங்கள் தேவை. அதில் உள்ள எக்ஸ்பி மோட் மூலம், தற்போது எக்ஸ்பி ஹோம் சிஸ்டத்தில் இயங்கும் அனைத்து புரோகிராம்களும் இயங்குமா? விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1ல் இயங்காது என்பதால், அது பற்றி யோசிக்கவில்லை.
ஆ. திருமேனி, கம்பம்.
பதில்:
விண்டோஸ் 7 எக்ஸ்பி மோட் வசதி, விண்டோஸ் 7 புரபஷனல், எண்டர்பிரைஸ் அல்லது விண்டோஸ் 7 அல்டிமேட் ஆகிய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கிறது. விண்டோஸ் 7 எக்ஸ்பி மோட் என்பது, ஒரு விர்ச்சுவல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போல, விண்டோஸ் 7ல் இயங்குகிறது. இது, உரிமம் பெற்ற விண்டோஸ் எக்ஸ்பி போலச் செயல்படுகிறது. நீங்கள் எக்ஸ்பி சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரில் இயங்குவது போல, புரோகிராம்களை இயக்கலாம். நான் இதனை இயக்கிப் பார்த்திருக்கிறேன். நன்றாகவே செயல்படுகின்றன. இது குறித்து முழுமையான குறிப்புகளைப் பெற, மைக்ரோசாப்ட் இணைய தளத்தில், http://windows.microsoft.com/enus/windows/ downloads/upgradeadvisor என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தினைக் காணவும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி மோட் நிலையில் செயல்படுகையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சில ஹார்ட்வேர் சாதனங்கள் அறிந்து கொள்ளப்படாது. இதனால் சில பிரச்னைகள் ஏற்படலாம்.
இன்னொன்றையும் நீங்கள் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எக்ஸ்பி மோட் நிலைக்கான சப்போர்ட்டினையும் வரும் ஏப்ரல் 8 முதல் மைக்ரோசாப்ட் நிறுத்திவிடும். எனவே, இந்நிலைச் செயல்பாட்டில், ஏதேனும் மால்வேர் பிரச்னை ஏற்பட்டால், மைக்ரோசாப்ட் தீர்வினைத் தராது.
நீங்கள் ஏன் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறக் கூடாது. மிக வேகமாகவும் நிலையாகவும் இயங்கும் சிஸ்டமாக நான் அதனை உணர்கிறேன். முதலில் அதன் திரைத் தோற்றம் நமக்குப் புதுவிதமாக இருப்பதனை உணர்வீர்கள். ஆனால், போகப் போக பழகிவிடும். எனவே, உங்கள் முடிவினை மறு பரிசீலனை செய்திடவும்.

கேள்வி: அண்மையில் என் போனின் சிஸ்டத்தை ஐ.ஓ.எஸ்.7க்கு மாற்றினேன். அப்ளிகேஷன்களை எப்படி மூடுவது எனத் தெரிய வில்லை. முன்பு ஹோம் பட்டனில் டபுள் கிளிக் செய்தால் போதும். இப்போது ஹோம் பட்டனில் கிளிக் செய்தால், நான் திறந்து பயன்படுத்திய அனைத்தும் கிடைக்கிறது. அவற்றை மூட வழி இல்லை. அவை பின்புலத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறதா?
சி. முகேஷ், சென்னை.
பதில்
: புதிய சிஸ்டத்திற்கு அப்டேட் செய்ததால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அப்ளிகேஷன்களை மூட, முதலில் ஹோம் பட்டனில் இருமுறை கிளிக் செய்திடவும். உங்களுடைய அப்ளிகேஷன்கள் விண்டோவில் திறக்கப்படுவது போல திறக்கப்படும். இவற்றை மூடிட, அப்ளிகேஷனின் ஐகானில் ஸ்வைப் செய்திடவும். அப்படியே மேலாக இழுத்து விடவும். அது மறையும் போது, அப்ளிகேஷனும் மூடப்படும்.

கேள்வி: நண்பர் ஒருவர் அனுப்பிய எக்ஸெல் ஒர்க்புக்கில் தரப்பட்டிருக்கும் சார்ட் மற்றும் அதன்பார்மட் மிக நன்றாக உள்ளது. இதனை எப்படி நான் தயாரிக்கும் ஒர்க் ஷீட்டில் பயன்படுத்தலாம்?
ஆர். தமிழ்ச்செல்வி, மதுரை.
பதில்:
முதலில் எந்த ஒர்க்புக்கில் இந்த சார்ட் உள்ளதோ, அதனைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர், உங்கள் மனதைக் கவர்ந்த சார்ட்டைத் தேர்ந்தெடுங்கள். பின்னர், அதனை முழுமையாகக் காப்பி செய்திடுங்கள். அடுத்து நீங்கள் அமைக்கும் ஒர்க்புக்கில் உள்ள, உங்கள் சார்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.
இனி கவனமாகச் செயல்படவும். எடிட் மெனு சென்று அதனைத் திறக்கவும். அந்த மெனுவில் (Paste Special) பேஸ்ட் ஸ்பெஷல் என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைக் கிளிக் செய்து பின் Format என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் பெற்ற சார்ட்டில் இருக்கும், உங்களைக் கவர்ந்த பார்மட்டிங் சமாச்சாரங்கள் எல்லாம் உங்கள் சார்ட்டிற்கு மாற்றப்பட்டு அந்த பார்மட்டில் உங்கள் டேட்டா இருக்கும். உங்கள் டேட்டா பத்திரமாகப் புதிய வடிவில் கிடைக்கும்.

கேள்வி: ஓர் எழுத்துக்கான, அகல எழுத்து, ஒடிசலான எழுத்து, தட்டையான எழுத்து எனப் பலவகை பாண்ட்கள் பைல்கள் இருக்குமா? சிலரின் டாகுமெண்ட்டில் இவற்றைக் காண்கிறேன். இருப்பின், இதற்கான பாண்ட் பைல்களை எப்படிப் பெறுவது என்று விளக்கவும்.
என். டி. முருகன், மரக்காணம்.
பதில்
: நீங்கள் கேட்டுள்ளதெல்லாம், எழுத்தை பார்மட் செய்து கிடைக்கும் எழுத்து வகைகளே. இதற்கென தனியே பாண்ட் பைல் இல்லை. இனி எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். அகல எழுத்தினை அமைப்பது குறித்து குறிப்புகள் தருகிறேன்.
1. முதலில் எந்த எழுத்துக்களை கூடுதல் அகலத்தில் அமைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
2.பின் இதில் ரைட் கிளிக் செய்து "Font' தேர்ந்தெடுக்கவும்.
3. "Font' என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதிலும் "Character Spacing' என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து "Scale' என்பதனை அடுத்து 200% என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது எழுத்துக்களின் வழக்கமான அகலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அகலமாக ஆக்கும். இதன் கீழாக உள்ள "Preview' என்ற இடத்தில் இவை எப்படி தோன்றும் எனப் பார்க்கலாம். இந்த அகலத்தை 600% கூட உயர்த்தலாம்.
இந்த அளவைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து பின் வெளியேறவும். டாகுமெண்ட்டில் நீங்கள் விருப்பப்பட்ட எழுத்து செட் செய்த அகலத்தில் இருப்பதனைப் பார்க்கலாம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் பிரிண்ட் செய்கையில், முதல் பக்கம் முதலில் பிரிண்ட் செய்யப்பட்டு, தொடர்ந்து அடுத்த பக்கங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. பெரிய டாகுமெண்ட் ஆக, 60 பக்கம் இருந்தால், அச்சிட்ட பின்னர், மீண்டும் ஒவ்வொரு தாளையும், பார்த்து முதலில் இருந்து அமைக்க வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக வேறு வழிகள் உள்ளனவா?
ஆ. கனகராஜ், திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. மிக அதிக எண்ணிக்கையில் பக்கங்கள் கொண்ட டாகுமெண்ட் அச்செடுக்கையில் இந்த பிரச்னை ஏற்படும். நாம் அருகில் இருந்து, ஒவ்வொரு பக்கமாக எடுத்து வரிசையாக அடுக்க வேண்டும். இதனைத் தவிர்க்க, டாகுமெண்ட்டினை, அதன் இறுதிப் பக்கத்திலிருந்து அச்சிடுமாறு செட்டிங்ஸ் அமைக்கலாம். இதனை அமைக்க கீழ்க்குறித்தபடி செயல்படவும்.
Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Printing options' என்ற பகுதியில் உள்ள "Reverse print order' என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X