அக்டோபர் 18ல் விண்டோஸ் 8.1
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 அக்
2013
00:00

வரும் அக்டோபர் 18 ஆம் நாளன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8.1 பதிப்பினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடுகிறது. பலத்த வரவேற்பு கிடைக்கும் என, முதன் முதலான தொடு உணர்வு திரை இயக்கம் கொண்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஆனால், பல புதிய மாற்றங்களுக்கு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. பழகிப்போன பயன்பாடுகளை மக்கள் தொடர்ந்து வேண்டும் என்று கேட்டனர்.
இதனால், மனம் திருந்திய மைக்ரோசாப்ட், பெரும்பாலான மக்கள் விரும்பிய மாற்றங்களுடன் பல புதிய வசதிகளையும் சேர்த்து, விண்டோஸ் 8.1 பதிப்பினை உருவாக்கி, சோதனைத் தொகுப்பாக மக்களுக்கு வழங்கியது. இதனைப் பயன்படுத்திப் பார்த்த மக்கள் அளித்த பின்னூட்டங்களின் அடிப்படையில், விண்டோஸ் 8.1 இறுதிப் பதிப்பு உருவாக்கப்பட்டு, தற்போது வரும் அக்டோபர் 18ல் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இது பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பிசிக்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு, மிக உகந்த சிறந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இவற்றின் சில சிறப்புகளை இங்கு காணலாம்.
முதலில் தொடுதிரைக்கான இயக்கமாக இது இருந்தாலும், வழக்கம்போல, மவுஸ் மற்றும் கீ போர்ட் மூலமாகவும் இதனை இயக்கலாம். எனவே, தொடு திரை இல்லாத, வழக்கமான மானிட்டர்களுடன் இதனைப் பயன்படுத்தலாம்.

1. லாக் ஸ்கிரீன்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நம் கவனத்தைக் கவர்ந்தது அதன் லாக் ஸ்கிரீன் (lock screen) தான். விண்டோஸ் 8.1ல், லாக் ஸ்கிரீன் நமக்கு, நம் கம்ப்யூட்டரில் உள்ள படங்களை, ஸ்கை ட்ரைவ் (the cloud), ஹோம் நெட்வொர்க் அல்லது ஹோம் குரூப் ஆகியவற்றைக் காட்டுகிறது. போட்டோக்களை அனிமேஷன் வகையில் அமைக்கலாம். மேலும், 8.1 சிஸ்டம், காலத்திற்கேற்ப படங்களைக் காட்டும். எடுத்துக் காட்டாக, டிசம்பர் மாதம் எனில், கிறிஸ்துமஸ் பண்டிகைப் படங்களைக் காட்டும். இது சலிப்பாக இருந்தால், எளிமையான படங்களை, உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தேர்ந்தெடுத்து அமைக்கலாம். உங்கள் பேரப் பிள்ளை களின் படங்களைத் தாராளமாக அமைக்கலாம்.
விண்டோஸ் 8.1ல், புதிய டைல் அளவில் அமைக்க வசதி தரப்பட்டுள்ளது. உங்கள் திட்டமிடலுக்கேற்ப குரூப்பினை அமைக்கலாம். நான்கு வகையான டைல்ஸ் (மிகச் சிறிய, மிகப் பெரிய உட்பட) அமைக்கலாம். ஏறத்தாழ, இது விண்டோஸ் போன் 8 இண்டர்பேஸ் போல அமைந்துவிடும். நீங்கள் எந்த இடத்தில், எந்த அளவில் டைல் அமைக்க வேண்டுமோ, அந்த அளவில் அமைத்துக் கொள்ளலாம்.
ஸ்டார்ட் ஸ்கிரீன் அமைப்பதில், ஒன்றுக்கு மேற்பட்ட டைல்களை மொத்தமாக இழுத்து, புதிய குரூப்பில் விடலாம். குரூப்புகளுக் கிடையே கூடுதல் இடைவெளி இடம் விடப்படுகிறது. இது டைல்ஸ்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் காட்டிலும் சற்று அதிகமாக இருந்து வேறுபடுத்திக் காட்டும். இவற்றிற்குப் பெயர்களைக் கொடுப்பதன் மூலமும் வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் வண்ணப் பட்டியலில் உள்ள, வண்ணங்களிலிருந்து ஒன்றுக் கொன்று வேறுபாடாக உள்ள வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து குரூப்புகள் மற்றும் தனி அப்ளிகேஷன் டைல்களை அமைக்கலாம்.
சிலருக்கு டெஸ்க்டாப் மற்றும் ஸ்டார்ட் ஸ்கிரீனின் பின்புலங்கள் வெவ்வேறாக இருப்பது பிடிக்கவில்லை. இவர்கள், இந்த இரண்டிற்கும் ஒரே மாதிரியான பின்புலத்தை விண்டோஸ் 8.1ல் அமைத்துக் கொள்ளலாம்.

2. மீடியா இணைந்த தேடல் முடிவுகள்: விண்டோஸ் 8.1ல் தேடல் மேற்கொண்டால், மீடியா (படம்,வீடியோ, இசை, கதைகள் போன்றவை) நிறைந்த தேடல் முடிவுகள் கிடைக்கும். இணையத் தளங்கள் தொடர்பு இருந்தால், அவற்றின் முன் தோற்றக் காட்சிகள் கிடைக்கும். இதுநாள் வரை, வெறும் டெக்ஸ்ட் மட்டுமே தேடல் முடிவுகளாகக் கண்டு கொண்டிருந்த நமக்கு, இது ஒரு விருந்தாக இருக்கும். கூகுள் கூட இது போல ஒரு கலவையைத் தர தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

3. ஸ்கை ட்ரைவ் மற்றும் க்ளவ்ட்: விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், ஸ்கை ட்ரைவ் க்ளவ்ட் ஸ்டோரேஜ் இணைந்து கிடைக்கிறது. இது ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ல், ஸ்கை ட்ரைவ் ஒரு லிங்க்காகக் கிடைத்தது. அல்லது விரும்பினால், பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இருந்தது. இங்கு, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில், பைல்கள், ஸ்கை ட்ரைவ் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் இருப்பதாக எடுத்துக் கொள்கிறது. உங்கள் டாகுமெண்ட் அல்லது போட்டோக்களை, ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த ஸ்கை ட்ரைவ் வசதி உங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

4. பல முனைச் செயல்பாடுகள்: ஒரே நேரத்தில், பல முனைச் செயல்பாடுகளை விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மேற்கொள்ள முடியவில்லை என்பது, அப்ளிகேஷன்கள் குறித்த ஒரு பெரிய குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டது. இந்தக் குறையை விண்டோஸ் 8.1 நீக்கிவிட்டது. ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். மேலும், நம் விருப்பப்பட்ட அளவில், மானிட்டர் திரையை இதற்கெனப் பிரித்து வைத்துக் கொள்ளலாம். திரையின் ஒரு பகுதியில் மெயில் பார்க்கலாம்; இன்னொன்றில், படங்களைப் பார்த்து ரசிக்கலாம்; அடுத்ததில், உங்கள் குறிப்புகளை எழுதி வைக்கலாம். உங்கள் திரையின் இட அளவைப் பொறுத்து, திரையைப் பிரித்து வைத்துச் செயல்படலாம். விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8.1 இலவசமாகத் தானாகவே அப்டேட் செய்யப்படும். அக்டோபர் 18 முதல் இது நடைபெறும். விண்டோஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் 8.1 பெற விரும்பினால், கட்டணம் செலுத்திப் பெறலாம்.
ஏற்கனவே, தொடு திரை இல்லாத மானிட்டருடன், விண்டோஸ் 7 கொண்ட கம்ப்யூட்டரை இயக்குபவர்களுக்கு, விண்டோஸ் 8.1 தேவையில்லை. அவர்கள் அப்படியே தொடரலாம். புதியதாக கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், தொடு திரை கொண்ட மானிட்டர் இருந்தாலும், இல்லை என்றாலும், விண்டோஸ் 8.1 வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

விண்டோஸ் 8.1 புதுமைகள்
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரும், இலவசமாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள விரும்புவார்கள். சில பொதுவான முன் எச்சரிக்கை தகவல்களை இங்கு காணலாம்.
1. விண்டோஸ் 8.1 இன்ஸ்டலேஷனை வெற்றிகரமாக முடிக்க உங்களுக்கு விண்டோஸ் லைவ் (Windows Live) அக்கவுண்ட் ஒன்று தேவைப்படும்.
2. தேடல் ஒருங்கிணைப்பு: விண்டோஸ் 8.1.ல் தேடுகையில், முடிவுகள், உங்கள் கம்ப்யூட்டர், உங்களுடைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இணையத்திலிருந்து தரப்படும்.
3. பொதுவான, அடிப்படையான விண்டோஸ் 8 அப்ளிகேஷன்கள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு 8.1லும் தரப்பட்டுள்ளன. மெயில், போட்டோ, தொடர்புகள், காலண்டர் என இவை அடங்கும்.
4. க்ளவ்ட் ஸ்டோரேஜ்: நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும், மாறா நிலையில், ஸ்கை ட்ரைவில் பதியப்பட்டு பாதுகாக்கப்படும். இதுவரை சி (C:) ட்ரைவ் மட்டுமே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்தது. நீங்கள் விரும்பினால், வேறு ஒரு ட்ரைவிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
5. விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன், மேம்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 தரப்படுகிறது.
6. ஏற்கனவே நாம் அனைவரும் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்பட்ட பெயிண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன் அதன் இடத்தில் புதியதாக, Fresh Paint என்னும் மேம்படுத்தப்பட்ட, புதிய பெயிண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது.
7. ஒருங்கிணைந்த தேடல்களோடு, இந்த சிஸ்டத்தில், பல பிங் (Bing) அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. அவை - Bing Sports, Bing Travel, and Bing Health & Fitness.
8. விண்டோஸ் ஸ்டோர், தற்போது எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் அப்ளிகேஷன்களைத் தேடிப் பெறுவது மிக எளிதாக உள்ளது.
9. விண்டோஸ் 8.1.ல் அனைத்து விண்டோஸ் 7 அப்ளிகேஷன் புரோகிராம்களும் இணைவாக இயங்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X