பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 அக்
2013
00:00

வைரஸ் டோட்டல் தளத்தின் பயன்பாடு மிக்க உதவி செய்வதாய் உள்ளது. சந்தேகம் வரும்போதெல்லாம், பைலை அத்தளத்திற்கு அனுப்பி சோதனை செய்து கொள்கிறோம். தங்கள் தகவல் காலத்தே உதவி செய்வதாக உள்ளது.
ஆர். கண்ணம்மாள், காரைக்குடி.

இதுவரை வந்த ஆங்கிலம் - தமிழ் மற்றும் தமிழ்- தமிழ் அகராதிகளில், களஞ்சியம் அகராதி பயன்பாட்டில் முதல் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையில் பார்த்தாலும், மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனை இலவசமாக வழங்கி வரும் திரு சேகர் பாராட்டுக்குரியவர். இது போல நம் மொழி சார்ந்த அப்ளிகேஷன்கள் இலவசமாகத் தரப்பட்டால் தான், தமிக் கணினி பயனாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து, தமிழ் மொழி டிஜிட்டல் தமிழாக உயரும். சேகருக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
பேரா. டாக்டர் திருமுருகன், மதுரை.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு களஞ்சியம் அகராதி மிக மிகப் பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு இதனை விலை கொடுத்து வாங்கி, தான் இலவமாகத் தரும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து தரலாம்.
எஸ். ஆர். மங்களம், ஆசிரியை, மதுரை.

அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றின் போல்டர்களில் உள்ள பைல்கள் அனைத்தையும் மாற்றினாலும், ஏன் அது இயங்கவிலை என வெகுநாட்களாக இருந்த சந்தேகம், உங்களின் புரோகிராமினை மாற்றுவது எப்படி மாற்றுவது என்ற கட்டுரையினைப் படிக்கவும் தீர்ந்தது. அனைத்து பிரச்னைகளுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வு தரும்படி எழுதப்பட்டுள்ளது இந்தக் கட்டுரை. நன்றி.
சா. உஷா ரவீந்திரன், கோவை.

விண்டோஸ் 8.1. டிப்ஸ், சிஸ்டம் வரும் முன்னே தருவதால், எங்களால் சோதனை செய்து பார்க்க இயலவில்லை. இருப்பினும் தொகுத்து வருகிறோம். இன்னும் அதிகமாக டிப்ஸ் தரவும்.
ஆர். சிரஞ்சீவி தாஸ், புதுச்சேரி.

மின் அஞ்சல்கள் பரிமாறப் படுவதில், இத்தனை வகை சர்வர்கள் இயங்குகின்றன என்பது புதிய செய்தியாக உள்ளது. வகுப்புகளில் எங்களுக்குக் கற்றுத் தராத, பல விஷயங்களைக் கம்ப்யூட்டர் மலரும், தினமலரும் கற்றுத் தருகிறது. மிக்க நன்றி.
ஆ. லோகேஷ்வரன், ப்ளஸ் 2 மாணவர், மேலூர்.

ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடக்கத்திலும், தொடர்ந்தும் என்ன வேலை செய்கிறது எனச் சரியான படங்களுடன் விளக்கம் அளித்துள்ளது, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை உணர்ந்து கொள்ள உதவுகிறது. எழுதிய ஆசிரியருக்கு நன்றி.
கா. இன்னாசிமுத்து, திருநெல்வேலி.

தாங்கள் அறிவுறுத்தியபடி, பிரிண்டருக்கான ட்ரைவர் புரோகிராமினை டவுண்லோட் செய்தேன். பிரிண்டர் தற்போது சரியாக வேலை செய்கிறது. கேள்வியைத் தள்ளிவிடாமல், சரியான பதில் அளித்தமைக்கு நன்றி.
ஆ.பூர்ண பிரகாஷ், சிதம்பரம்.

வேர்ட் தொகுப்புதான் பலர் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராமாகும். பழைய மற்றும் புதிய வேர்ட் புரோகிராம்கள் குறித்த டிப்ஸ்களைக் குறைக்காமல், வாரந்தோறும் வெளியிடவும்.
ஆர். ஹரிதாஸ், மயிலாடுதுறை.

மெயில் சர்வர்கள் குறித்த கட்டுரையில், ஜிமெயில் போன்ற இணைய தள மெயில் சர்வர்கள், கிடைக்காத போது என்ன செய்திட வேண்டும் என்ற தகவல் இல்லை. இதனைத் தந்து உதவவும்.
வில்லியம் பிரகாஷ், விருத்தாசலம்.

எமோட்டிகான்களை உருவாக்கும் வழிகள் மற்றும் அனைத்து எமோட்டிகான்களும் உள்ள இணைய தளம் உள்ளதா? இருந்தால், அதன் முகவரி மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து கட்டுரை ஒன்று தரவும்.
கா. இளவழகன், காரைக்கால்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X