இரண்டு சிம் கொண்ட நோக்கியா மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2010
00:00

குறைந்தது இரண்டு சிம்களை இயக்கும் மொபைல்களே, தொடக்க நிலை போன்களாக மாறிவிட்ட நிலையில், மொபைல் உலகின் ஜாம்பவானான, நோக்கியாவும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. சென்ற வாரம் இரண்டு சிம்களை இயக்கும் இரண்டு மொபைல் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டது.  இரண்டு மாடல் போன்களிலும்,  இரு சிம்களுக்கான முகவரி பட்டியலைத் தனித்தனியே வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இவற்றின் பேட்டரிகள் நீண்ட நேரம் மின்சக்தியைத் தாங்கித் தருவனவாக உள்ளன. பெரிய திரையுடன், உள்ளூர் மொழியையும் ஏற்றுக் கொண்டு செயல்படும் திறன் கொண்டவையாக உள்ளன.
சி1 என்ற தொடக்க நிலை மொபைல் ரூ.1,999 என்ற விலையில் வந்துள்ளது. இதில் பிளாஷ் லைட் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. வரும் அழைப்புகளை அடுத்த சிம்மிற்கு மாற்றி  அனுப்பும் வசதி இதில் உள்ளதால், இரண்டு சிம்களுக்கும் வந்த அழைப்புகளையும் ஏற்றுக் கொண்டு பேச முடியும்.  இரண்டு சிம்களுக்கும் மாற்றிக் கொள்ள தனியாக ஒரு கீ தரப்பட்டுள்ளது. இந்த போனில் எஸ்.எம்.எஸ்.  மற்றும் போன் அழைப்புகள்  வசதிகள் மட்டுமே தரப்படுகின்றன. ஒரு நேரத்தில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆறு வாரங்கள் வரை தாக்குப் பிடிக்கிறது. பிளாஷ் லைட், வண்ணத்திரை மற்றும் எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன.  அடுத்து வர இருக்கும்  சி2 மாடல் போனில் ஓவி லைப் டூல்ஸ், ஓவி மெயில் ஆகியவற்றைப் பயன் படுத்தும் வசதிகள் தரப்படுகின்றன. மியூசிக் பிளேயர் இணைக்கப் படுகிறது. 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்டி கார்ட்களை ஏற்றுக் கொள்ளும் போர்ட் உள்ளது. இந்த மாடல் போனில் இரண்டு சிம்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திப் பேசலாம்.  வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு களை எப்போதும் நிறைவேற்றும் நோக்கியா, இந்த புது மாடல்களை வெகுநாட்கள் முயற்சிக்குப் பின் வடிவமைத்துத் தந்துள்ளதாக, நோக்கியா நிறுவனப் பிரிவின் துணைத் தலைவர் மேரி மேக்டவல் தெரிவித்துள்ளார். நேரம் மற்றும் செலவு ஆகியவற்றை முழுப் பயன் பாட்டுடன் பயன்படுத்தும் வகையில் இந்த போன்கள் வடிவைக்கப் பட்டுள்ளன. வசதிகளும் அதிகரிக்கப் பட்டுள்ளன என்று கூறினார்.    சி1 மாடல் போன் ரூ.1,999 என விலையிடப்பட்டுள்ளது. அடுத்த மாடல் சி2 இன்னும் வெளியாகவில்லை என்றாலும் விலை ரூ.2,500 என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தர் - chennai,இந்தியா
18-செப்-201021:41:53 IST Report Abuse
சுந்தர் மிஸ் கால் வராமல் இருக்க ஏதாவது போன் இருக்கா?
Rate this:
Share this comment
Cancel
gopi - trichy,இந்தியா
14-செப்-201016:17:44 IST Report Abuse
gopi matty phone
Rate this:
Share this comment
Cancel
sidharthan - paramakudi,இந்தியா
13-செப்-201008:33:03 IST Report Abuse
sidharthan intha seithi annaithum manavarkalukku mihapayanullathaga irukirathu ithu melum thodara vendum ipadiku kamallai petredutha parambai mannin maithan
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X