இந்த வார டவுண்லோட் - மெமரி சோதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2010
00:00

கம்ப்யூட்டரில் ராம் மெமரி எந்த வகையில் எவ்வளவு பயன்படுகிறது என்று அறிந்து கொள்வது, நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டை நெறிப்படுத்த நமக்கு உதவும். இப்போதெல்லாம், அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க  அதிகமான  அளவில் மெமரியை எடுத்துக் கொள்கின்றன. எனவே இயங்கும் புரோகிராம்கள் அதிகமாகும் போது, கம்ப்யூட்டரின் செயல்பாடு சற்று  தடுமாறுகிறது. நாமும் தேவையற்ற புரோகிராம்களை, ராம் மெமரியில் ஏற்றி வைத்து,   கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மிகவும் மந்த நிலையில் இயங்க வைப்போம். மெமரி பயன்பாடு நமக்குத் தொடர்ந்து காட்டப்பட்டால், அதற்கேற்ப புரோகிராம்களின் இயக்கத்தினை நிறுத்தித் தேவைப்பட்ட புரோகிராம்களை மட்டும் இயக்கலாம்.  இதற்கான சில மெமரி கண்காணித்துக் காட்டும் புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு  காணலாம்.
1.Mem Info:  மெம் இன்போ எனப்படும் இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இதனை டவுண்லோட் செய்து இயக்கிவிட்டால், அது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, மெமரி மற்றும் சிபியு பயன்பாட்டினைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. மெமரி பயன்பாட்டினை வண்ணக் குறியீட்டில்  காட்டுகிறது. மெமரியைப் பயன்படுத்துவது சற்று அதிகமாகும் போது நம்மை எச்சரிக்கிறது.  எந்த அளவில் எச்சரிக்கை செய்திட வேண்டும் என்பதனையும் இதில் செட் செய்துவிடலாம். மெமரியை டிபிராக் செய்திடும் வசதியும் இதில் உண்டு. சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்படுகிறது. அண்மையில் வெளி வந்த இதன் பதிப்பு, வண்ணக் குறியீடுகளுடன் நமக்கு தகவல்களைக் காட்டுகிறது. இதனைப் பெற http://www.carthagosoft.net/meminfo.htm   என்ற தளத்திற்குச் செல்லவும்.
2.Performance Monitor: இந்த புரோகிராம், மெமரி பயன்பாட்டினைச் சோதனையிடுவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் சோதனையிடுகிறது.  இதுவும் சிஸ்டம் ட்ரேயில் இருந்து செயல்படுகிறது. ராம் மெமரி, டிஸ்க் பயன்பாடு மற்றும் நெட்வொர்க் செயல்பாட்டினை, திரையின் மேல் புறத்தில் காட்டுகிறது. இந்த புரோகிராமினை   www.hexagora.com/en_dw _davperf.asp என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
3.FreeRAM XP Pro: இந்த புரோகிராம் கூடுதல் வசதிகள் பல கொண்டதாக இயங்குகிறது. மெமரியினைக் கண்காணிப்பதுடன், மெமரியின் வேகத்தினை அதிகப்படுத்தவும் செய்கிறது. தானாகவே மெமரியில் உள்ள தேவையற்றவற்றை விலக்குகிறது. எந்த புரோகிராம்கள் மெமரியினைப் பயன்படுத்துகின்றன என்று காட்டுகிறது. என்ன நடக்கிறது என்று தகவல் தருகிறது. மெமரியினைச் சுருக்கிப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்துகிறது. இதனைப் பெற http://www.yourwaresolutions.com/ software.html#framxpro  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீனிவாசன் - பட்டுக்கோட்டை,இந்தியா
14-செப்-201017:28:02 IST Report Abuse
ஸ்ரீனிவாசன் இந்த பகுதி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X