பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 அக்
2013
00:00

எழுத்தின் அகலத்தை நாமே அமைக்கலாம் என்பது நல்ல செய்தி. இது டாகுமெண்ட்களில் ஸ்பெஷல் எபக்ட் தருவதற்கு உதவியாய் உள்ளது. நன்றி.
ஆ. சிதம்பரம், மானாமதுரை.

விண்டோஸ் 8.1 சிஸ்டம் இந்த மாதம் கிடைக்க இருப்பதாக எழுதி வருகிறீர்கள். நான் விண்டோஸ் 8 உள்ள லேப்டாப் வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதனை 8.1க்கு மேம்படுத்த என்ன செய்திட வேண்டும் என வழி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. நிறைமதி, மதுரை.

கூகுள் நிறுவனத்தின் பதினைந்து ஆண்டு செயல்பாடுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. எதனையும் விட்டு வைக்காமல், மற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பின்பற்றாமல் கடுமையாக டிஜிட்டல் உலகில் உழைத்த அந்த இரு மாணவ நிறுவனர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்கள் தொழில் வாழ்க்கை அனைத்து இளைஞர்களுக்கும் முன்னோடி.
டாக்டர் எஸ்.மகாதேவன், ஈரோடு.

கூகுள் நிறுவனம் சில முயற்சிகளில் தோல்வியும் கண்டது. ஆனால், அவற்றைப் பாடங்களாக ஏற்று, மற்றவற்றில் கவனம் செலுத்தி இன்று டிஜிட்டல் ஆக்டோபஸ் போல நம் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. கூகுள் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற நிலை நிச்சயம் ஒரு நாளில் ஏற்படும்.
ஆர். சுகவனம், சென்னை.

கூகுள் நிறுவனத்தைப் பற்றிக் கூறுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்தித்த தோல்விகளையும் ஒப்பிட்டு, அதன் தடைகளையும் சொல்லிக் காட்டியது நல்ல கருத்தாகும். ஒவ்வொரு நிறுவனமும் இது போல மற்றவற்றைப் பார்த்து திருந்தலாம்.
சா. பிரகாஷ் குமார், சென்னை.

வி.எல்.சி. பிளேயர் குறித்த உங்கள் கட்டுரை பல புதிய பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளது. இவற்றை இயக்கிப் பார்க்கவே ஒரு மாத கால அவகாசம் தேவைப்படலாம். மிகவும் பயனுள்ள கட்டுரை. நன்றி.
ஆர். பரஞ்சோதி, திண்டுக்கல்.

வி.எல்.சி.பிளேயரின் இண்டர்நெட் ரேடியோ ஒரு புதிய செய்தியாகும். இவ்வளவு வசதிகளை உள்ளடக்கிய இலவச வி.எல்.சி. பிளேயர் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
என். இஸ்மாயி, கம்பம்.

விண்டோஸ் 8.1. தன் இன்டர்பேஸ் மட்டுமின்றி, வழங்கும் வசதிகளிலும் புதுமையையும், நல்ல பயன்பாட்டையும் தருகிற செய்தி, அதனை நோக்கி பயனாளர்களை நகர்ந்திடச் செய்திடும். புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் நிச்சயம் அதற்கு மாறுவார்கள்.
என். குமரேசன், சென்னை.

பேஸ்புக் முகங்களுக்கான அப்ளிகேஷனைத் தயாரித்தவர்கள் பல கோடி முகங்களை எப்படி ஒரு திரையில் கொண்டு வந்தார்கள் என வியக்க வைத்திடும் பணியை செய்து முடித்துள்ளனர். எங்கள் நண்பர்கள் அனைவருமே தங்கள் முகங்களைக் கண்டறிந்து, பட பைலாக வைத்துள்ளனர். சிலர் பிரேம் போட்டு போட்டோவாகவும் வைத்துள்ளனர். தகவலுக்கு மிக்க நன்றி.
பேரா. கா. சிவநேசன், விருதுநகர்.

அந்தக் கடைசி துளி நீர் நல்லதொரு படிப்பினையைத் தரும் இணைய தளமாகும். தண்ணீர் கிடைக்கவில்லை என்று எப்பொழுதும் குற்றம் சொல்பவர்கள், இந்த தளத்தில் காட்டப்படும் வீடியோ காட்சியைக் கண்டு, தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
என். கமலேஷ் குமார், புதுச்சேரி.

மொபைல் மற்றும் டேப்ளட் பிசிக்கள் வழியே இணையத்தை நாடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான தகவல்களை மட்டும் தராமல், இணைய இணைப்பிற்கான குறிப்புகளையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆ. சிவக் கொழுந்து, ஸ்ரீவில்லிபுத்தூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X