கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

21 அக்
2013
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டரில் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் பயன்படுத்தி வருகிறேன். இதில் அடிக்கடி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மெமரியில் அதிக இடத்தைப் பிடிப்பதாகவும், அதனை ரீஸ்டார்ட் செய்திடும்படியும் செய்தி தருகிறது.இதனை எப்படி ரீஸ்டார்ட் செய்திடுவது எனத் தெரியவில்லை. ஏதேனும் டிப்ஸ் தரவும்.
கா. சிவராசன், காயாமொழி.
பதில்:
ரீஸ்டார்ட் செய்வது என்பது மிக எளிது. மேலாக வலது மூலையில் உள்ள எக்ஸ் அடையாளத்தின் மீது கிளிக் செய்திடவும்.
பிரவுசர் அப்ளிகேஷன் மூடப்படும். பின்னர், மீண்டும் இதனை வழக்கம் போல இயக்கவும். மூட மறுத்தால், கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் இயங்குவதற்கான வரியில் End Task என்பதில் கிளிக் செய்திடவும்.
ஆனால், உங்கள் கேள்வி இன்னொரு பிரச்னையைக் கிளப்பியுள்ளது. இந்த சிக்கல் ஏன் ஏற்படுகிறது? எப்படி அதனைத் தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
இவ்வாறு மெமரியின் இடத்தை அதிகம் எடுத்துக் கொள்வதற்கான காரணம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொள்ளும் ஆட் ஆன் புரோகிராம்களாக இருக்கலாம். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் மேல் வலது பக்கத்தில் உள்ள, கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Manage addons என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, உங்கள் பிரவுசர் பயன்படுத்தும் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் உள்ள விண்டோ திறக்கப்படும். இந்தப் பட்டியலில், ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கு முன்னரும், பப்ளிஷர், ஸ்டேட்டஸ் (Publisher, Status) ஆகியவையும், அந்த ஆட் ஆன் தொகுப்பு லோட் ஆக எவ்வளவு நேரம் எடுக்கிறது என்ற தகவலும் காட்டப்படும். இதற்கு இன்னும் வசதியாகக் காண, Toolbars என்பதனைத் தேர்ந்தெடுத்துக் காணலாம். டூல்பார்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் எனப்படும் ஆட் ஆன் தொகுப்புகள், நிறைய மெமரி இடத்தை எடுத்துக் கொள்ளலாம். சில ஆட் ஆன் தொகுப்புகள், உங்களுடைய அனுமதியின்றியே அல்லது விருப்பம் இன்றியே லோட் ஆகலாம். ஏனென்றால், நீங்கள் டவுண்லோட் செய்தவற்றுடன் இணைந்து இவை வந்திருக்கும்.
ஏதேனும் டூல் பார் பிரச்னைக்குரியதாக இருந்தால், அதனைக் கண்டறிந்து நீக்கவும். சில வேளைகளில், ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பில் இதற்கான தீர்வு தரப்பட்டிருக்கலாம். அதனையும் முழுமையாகப் பார்த்துப் பின்னர் செயல்படவும்.

கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பினை இதுவரை பத்து முறைகளுக்கு மேல், ரீ இன்ஸ்டால் செய்திருக்கிறேன். எக்ஸெல், அக்செஸ் மற்றும் பவர்பாய்ண்ட் மிக நன்றாகச் செயல்படுகிறது. ஆனால், வேர்ட் திறக்கப்படும்போது அல்லது ஏதேனும் டாகுமெண்ட் பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கும் போது, அதனை மீண்டும் கன்பிகர் செய்திடுமாறு செய்தி கிடைக்கிறது. ஆனால், வெகுநேரம் கழித்து, எந்த முயற்சியும் எடுக்காத போது, தானாகவே செயல்படத் தொடங்குகிறது. இதற்கான காரணம் என்ன? என்ன செய்திட வேண்டும்?
சி. மஞ்சுளா, திருப்பூர்.
பதில்
: உங்கள் கம்ப்யூட்டரில், ஒன்றுக்கு மேற்பட்ட எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திருக்கிறீர்களா? இருந்தால், இந்த பிரச்னை ஏற்படலாம்? ஸ்டார்ட் மெனு திறந்து கண்ட்ரோல் பேனல் செல்லவும். Programs என்பதில் கீழாக Uninstall a Program என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில், ஒன்றுக்கு மேற்பட்ட ஆபீஸ் புரோகிராம்கள் அல்லது வேர்ட் புரோகிராம்கள் பதியப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும். அப்படி இருக்கும் பட்சத்தில், எம்.எஸ். ஆபீஸ் 2007 தவிர மற்றவற்றை (அன் இன்ஸ்டால்) நீக்கவும். இப்போது மீண்டும் எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பினை ரிப்பேர் மோட் மூலம் சரி செய்து இயக்கிப் பார்க்கவும். இதற்கான தீர்வை மைக்ரோசாப்ட் தளத்தில் தேடிய போது, அங்கு கிடைத்த தகவலையும் தருகிறேன். கவனமாக முயற்சி செய்திடவும். விண்டோஸ் கீ + R கீ அழுத்தவும். அல்லது தேடல் கட்டத்தில் Run என டைப் செய்திடவும். ரன் பாக்ஸ் கிடைக்கும். அதில் மிகக் கவனமாகப் பிழை எதுவுமின்றி, கீழே தந்துள்ளதை டைப் செய்திடவும். reg add HKCU\Software\Microsoft\Office\12.0\Word\Options/vNoReReg/t REG_DWORD /d 1. பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இந்த இரண்டு வழிகளில் ஒன்றாவது நிச்சயம் உங்களுக்கு உதவிடும் என்று எண்ணுகிறேன்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் புதியதாக வந்துள்ள பயர்பாக்ஸ் மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 பயன்படுத்துகிறேன். இவற்றைத் திறந்து என் மின் அஞ்சல்களை எப்படி அனுப்புவது? விண்டோஸ் லைவ் மற்றும் ஹாட் மெயில் அக்கவுண்ட் முகவரிகள் எனக்கு உள்ளன.
கே. உமா ப்ரியா, கோவை.
பதில்:
இந்த பிரவுசர்களைப் பயன்படுத்தி, www.outlook.com என்ற இணைய தளம் செல்லவும். இங்கு உங்கள் ஹாட் மெயில் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தவும். பின்னர், உங்களுக்கான மெயில்கள் அனைத்தும் கிடைக்கும். நீங்களும் உங்கள் அஞ்சல்களை அனுப்பலாம். மைக்ரோசாப்ட் Live, MSN & Hotmail சேவைப் பிரிவுகள் அனைத்தையும் Outlook.com சேவையுடன் இணைத்துவிட்டது. உங்களுடைய மின் அஞ்சல் முகவரி, யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் அனைத்தும் இதற்கு மாற்றப்பட்டுவிட்டது.

கேள்வி: சில வீடியோ கேம் குறித்த குறிப்புகளில், FPS frames per second எனக் குறிப்பிடுகின்றனர். இது எதனைக் குறிக்கிறது. பொதுவாக கேமராவில் வீடியோ பதிவுகளில் மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. கேம் விளையாடுவதில் இது அதே பதிவினைக் குறிக்கிறதா?
எஸ். கண்ணதாசன், மதுரை.
பதில்:
வீடியோ கேம் பிரிவில் FPS frames per second என்பது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள திரையில், ஒரு காட்சி, ஒரு நொடியில், எத்தனை முறை ரெப்ரெஷ் செய்யப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு விநாடியில் எவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் பிரேம்கள் ரெப்ரெஷ் செய்யப் படுகின்றனவோ, அந்த அளவிற்கு காட்சியில் தெளிவும் வேகமும் இருக்கும். இந்த அளவு நொடிக்கு 30க்கும் கீழாக இருந்தால், கேம் விளையாடுவதில் சிக்கல் இருக்கும். பொதுவாக கேம் இயக்கத்தில் 30 முதல் 60 பிரேம்கள் ரெப்ரெஷ் இருக்கும். இப்போது வந்துள்ள ஹார்ட்வேர் சாதனங்களைப் பயன்படுத்தி விநாடிக்கு 100 பிரேம்கள் அளவிலும் ரெப்ரெஷ் செய்திட முடிகிறது. இதனால், மிகச் சிறப்பாக காட்சி தோற்றங்கள் கிடைக்கின்றன.

கேள்வி: சி.பி.யு செயல்பாட்டில் ரெப்ரெஷ் ரேட் எவ்வளவு உள்ளது. கம்ப்யூட்டரின் ரெப்ரெஷ் ரேட் என எப்படி அளக்கின்றனர்?
எஸ்.கோவிந்தராஜ், விருதுநகர்.
பதில்:
மன்னிக்கவும். கேள்வியின் அடிப்படையே தவறு. கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து பேசுகையில், ரெப்ரெஷ் ரேட் என்பது மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட் தான். கம்ப்யூட்டர் திரையில் நமக்குக் காட்சியாகக் கிடைக்கும் டிஸ்பிளே ஒரு நொடியில் எத்தனை முறை ஒளியூட்டப்படுகிறது (Illuminating) என்பதனையே இது குறிக்கிறது. இது பிரேம் ரேட் (Frame Rate) என்பது போல் இருக்கிறது என்று நீங்கள் எண்ணினாலும், இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. பிரேம் ரேட் என்பது ஒரு டிஸ்பிளே ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு எத்தனை முறை மாறுகிறது என்பதைக் குறிக்கிறது. ஆனால் ரெப்ரெஷ் ரேட் என்பது அந்த பிரேம்களில் காட்சிகள் எத்தனை முறை ஒரு நொடியில் ஒளியூட்டப்படுகின்றன என்பதனைக் குறிப்பதாகும்.
உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினை எப்படிக் கண்டறிவது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Settings டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் Advanced பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் புதிய விண்டோவில் Monitor என்னும் டேப்பினை கிளிக் செய்திடவும். பின் Monitor settings என்னும் ஏரியாவில் உங்கள் மானிட்டரின் ரெப்ரெஷ் ரேட்டினைக் காணலாம். அதில் ஒரு கீழ் விரியும் மெனுவிற்கான பட்டி தெரியும். இதில் உள்ள அம்புக் குறியினை அழுத்தினால் பல ரெப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவரும். 60,70, 72, 75 மற்றும் 85 என இவை தரப்பட்டிருக்கும். இவற்றின் அலகு Hertz ஆகும். பெரிய 17 அல்லது 19 அங்குல மானிட்டர் என்றால் ரெப்ரெஷ் ரேட் 85 ஆகக் கொள்ளலாம். மானிட்டர் அளவு குறைய குறைய இதனையும் குறைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: மிக வேகமாக இயங்கும் பிரவுசர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புகிறேன். இதில் தாங்கள் எதனைப் பரிந்துரைக்கிறீர்கள்? காரணம் என்ன?
பேரா. கா. சக்தி பிரகாஷ், அருப்புக் கோட்டை.
பதில்:
உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வது சற்று சிரமமான காரியம். ஒவ்வொரு பிரவுசரும் அது தரும் சில வசதிகளில், மற்றவற்றை மிஞ்சி நிற்கிறது. இருப்பினும் வேகமாக இயங்கி இணைய தளங்களைத் தருவதில், தற்போதைக்கு கூகுள் தரும் குரோம் பிரவுசர் முதல் இடத்தைப் பிடிக்கிறது. நீங்கள் ஏற்கவே பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் வாடிக்கையாளராக இருந்தால், குரோம் பிரவுசரைப் பயன்படுத்திய முதல் நாளிலேயே, அதன் கூடுதல் வேகத்தை உணர்வீர்கள். குரோம் பிரவுசரில், முகவரிகளுக்கான கட்டத்தையே தேடலுக்கான கட்டமாகவும் பயன்படுத்தலாம். உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னவென்று கூறவில்லை. நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 பயன்படுத்தப்போவதாக இருந்தால், அதனுடன் தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துங்கள்.

கேள்வி: ஒரே நேரத்தில் நாம் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களின் விண்டோக்கள் மானிட்டரில் காட்டும்படி செய்திட முடியுமா?
எஸ். சூர்யகலா, தேவாரம்.
பதில்:
கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு எந்த விண்டோக்களை திரையில் ஒரே நேரத்தில் தோன்றும்படி வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அவற்றைக் கிளிக் செய்திடவும். கிளிக் செய்து தேர்ந்தெடுத்தபின், ஏதாவது ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இங்கே கிடைக்கும் மெனுவில் Tile Horizontally, Tile Vertically என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். விண்டோக்கள் நெட்டு வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா,படுக்கை வாக்கில் அமைக்கப்பட வேண்டுமா என முடிவு செய்து தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், அந்த வழியில் விண்டோக்கள் அமையும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
25-அக்-201309:47:15 IST Report Abuse
Skv ஐய்யா உங்கள் கேள்விபதில் மிகவும் பயன் தருகிறது மிக்க நன்றி skv
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X