கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 செப்
2010
00:00

இணையப் பயன்பாடு மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களுக்கான கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தருவதற்காகவே ஓர் தளம் இணையத்தில் இயங்குகிறது.Lab Pixies  என்ற பெயரில் உள்ள இந்த தளத்தில், பேஸ்புக், மை ஸ்பேஸ், ஹை 5, ஆர்குட், ஆண்ட்ராய்ட், ஐ போன், ஐ கூகுள் என்பவற்றுக்கான கூடுதல் வசதி புரோகிராம் களையும் இந்த தளம் கொண்டுள்ளது. கேம்ஸ், செய்யவேண்டிய பணிகள் கொண்ட பட்டியல், காலண்டர், கடிகாரம் என வழக்கமான வசதிகளைத் தரும் புரோகிராம் களும் உள்ளன. இந்த தளத்தில் உள்ள என்பதில் கிளிக் செய்தால் இவை அனைத்தும் கொண்ட பட்டியல் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கிறது.  எடுத்துக்காட்டாக, பேஸ்புக் தளத்தில் கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் பெற வேண்டுமென்றால்  Facebook  என்பதில் கிளிக் செய்தால் போதும். இங்கு கிடைக்கும் சில லிங்க்குகளை கிளிக் செய்தால், அவை உங்களை யு–ட்யூப் தளத்திற்கு எடுத்துச் சென்று, சில அப்ளிகேஷன்களை எப்படி இயக்குவதென்ற வீடியோக்களைக் காட்டும்.  இந்த தளத்தில் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் சின்னஞ்சிறு வசதிகளைத் தருவதாகவே உள்ளன. இவை பற்றி பெரிய அளவில் எதுவும் கூற முடியாதென்றாலும் நாம் கொண்டுள்ள சிறிய அளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றன. சிறிய அளவிலான எரிச்சல்களைப் போக்குகின்றன.  நாம் கம்ப்யூட்டரைத் திறந்து வீடியோக்கள், இமெயில், செய்திகள், சீதோஷ்ண நிலை தகவல்கள், கேம்ஸ் மற்றும் பல தகவல்களைத் தேடி அறிவதை நம் தினப்படி வேலைகளாக வைத்துள்ளோம். இவற்றை அறிய, அவற்றிற்கான ஐகான் அல்லது இலச்சினைகளைத் தேடி, கிளிக் செய்து, பின் மெனுவைத் தேர்ந்தெடுத்து எனப் பல கிளிக் செயல்களுக்குப் பின்னரே அறிய முடிகிறது. இந்த சிறிய புரோகிராம்கள் மூலம் ஒரே கிளிக்கில் இவற்றை அறிய முடிகிறது.  2005 ஆம் ஆண்டில் கூகுள் தளத்தில் கூடுதல் வசதிகளுக்காக இந்த தளம் ஐ கூகுள் (iGoogle) என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உருவாக்கித் தரப்படுகின்றன.  இந்த தளம் குறித்த சிறப்பு செய்தி என்னவென்றால், இதனை அண்மையில் கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கி தனதாக்கிக் கொண்டது. எனவே நமக்குக் கூடுதல் வசதி அளிக்க, இனி அதிக புரோகிராம்களை இந்த தளத்தில் எதிர்பார்க்கலாம்.  இந்த தளத்தின் முகவரி http://www.labpixies.com/

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X