இந்த வார இணையதளம் - புகழ்பெற்ற பெண்மணிகள் - அன்றும் இன்றும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 நவ
2013
00:00

இணையத்தில் இருக்கும் சில தகவல் தளங்களை, Library of Congress என்னும் அமைப்பு தேர்ந்தெடுத்து, வருங்காலத்திற்கு இது அதிகம் பயன்படும் என்ற முத்திரையுடன், தன் சேமிப்பில் பாதுகாத்து வைக்கிறது. (இந்த அமைப்பிற்கும் நம் நாட்டு அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.) எதிர்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் அடங்கிய தளங்கள் இவ்வாறு சேவ் செய்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேவ் செய்து வைக்கப்பட்ட தளம் ஒன்று என் பார்வையில் பட்டது. இந்த தளத்திற்குச் சென்றால், மானிடச் சரித்திரத்தில், அன்றும் இன்றும் புகழ் பெற்ற பெண்களைப் பற்றிய தகவல்களைத் தருவதாக உள்ளது. இந்த தளத்தின் முகவரி : http://www.distinguishedwomen.com
மனித இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் சேவை செய்த பெண்களைப் பற்றிய குறிப்புகளை இந்த தளம் கொண்டுள்ளது. ஏறத்தாழ இன்று வரை, 2000 பெண்கள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன. இந்த தளத்தின் முகப்பு பக்கத்திற்கு நீங்கள் சென்றவுடன், இடது பக்கம், தளத்தில் சென்று தகவல்களைத் தேட மெனு தரப்பட்டுள்ளது. இணையப் பக்கத்தில் நடுவில் உள்ள மெனுவில், இந்த பக்கத்தில் என்ன மாதிரியான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்ற குறிப்பு கிடைக்கிறது. வலது பக்கம், அண்மையில் அப்டேட் செய்யப்பட்ட தகவல்கள் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன.
வழி நடத்தும் மெனுவில், பொருள், பெயர்கள் வழியாகத் தேட ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் குறித்த நூல்கள், சிறப்பான தலைமைப் பண்பு கொண்டிருந்த பெண்களைக் குறித்த திரைப்படங்கள், இசை மற்றும் இந்த தளம் ஏன் உருவானது என்பன போன்ற ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. பொருள் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், புகழ் பெற்ற பெண்கள் இயங்கிய சமுதாயப் பிரிவுகள் தரப்பட்டுள்ளதனைப் பார்க்கலாம். இதில் உள்ள பொருள் பிரிவுகள், பார்க்கும் யாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இத்தனை பிரிவுகளா என வியக்க வைக்கும்.
பெயர் பிரிவில், நாம் தகவல் பெற விரும்பும் பெண்களின் பெயர்களை டைப் செய்து எண்டர் தட்டினால், உடனே அதற்கான சிறு குறிப்பு உள்ள பக்கம் கிடைக்கிறது. அங்கு தரப்பட்டுள்ள லிங்க்கில் மேலும் கிளிக் செய்தால், தொடர்ந்து கூடுதல் தகவல்கள் தரப்படுகின்றன. நான் நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நோபல் பரிசு பெற்ற சமூக சேவகி அன்னை தெரசா ஆகியோர் குறித்து உள்ள தளங்களைப் பார்த்து, தகவல்களைப் படித்தேன். தகவல்கள் முழுமையாக இருந்தன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X