டாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 நவ
2013
00:00

தன் ப்ரி பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, டாட்டா டொகோமோ மொபைல் சேவை நிறுவனம், எல்லையற்ற இசையினை (Endless Music) அளிக்கிறது. Hungama Mobile என்ற நிறுவனத்துடன் இணைந்த இந்த மதிப்பு கூட்டு சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவை கேட்டு பதிந்து கொள்பவர்கள், தேர்ந்தெடுக்கப்படும் கட்டண சேவைக்கேற்ப குறிப்பிட்ட காலத்திற்கு பாடல்களைக் கேட்டு மகிழலாம். இதற்கு எந்த தனி சாப்ட்வேர் அப்ளிகேஷனும் தேவையில்லாததால், சாதாரண தொடக்க நிலை போன் வைத்துள்ளவர்களும், இந்த சேவையினைப் பெற்று பயன்படுத்தலாம். எந்த பாடலாவது, மனதைக் கவர்ந்தால், அதனைத் தங்கள் காலர் ட்யூனாக அமைத்துக் கொள்ளும் வசதியும் தரப்படுகிறது. ஆனால், அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். இது மூன்று நிலைகளில் கிடைக்கிறது. 300 நிமிடங்களுக்கானது ஆர்.சி.46, 600 நிமிடங்களுக்கு ஆர்.சி. 92 மற்றும் 1,000 நிமிடங்களுக்கு ஆர்.சி.131. முதல் இரண்டும் ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்றாவது திட்டத்திற்கு, இரண்டு மாத கால அவகாசம் தரப்படுகிறது.
59090 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு டயல் செய்து, இந்த சேவையினைப் பெறலாம். செலுத்தப்படும் கட்டணம், கால அவகாசம் முடிந்த பின்னர் அல்லது குறிப்பிட்ட நிமிடங்கள், பாடல்களைக் கேட்டு முடித்த பின்னர் காலாவதியாகிவிடும்.
தற்போதைக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என டாட்டா டொகோமோ அறிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X