2014ல் 24.3 கோடி இணையப் பயனாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 நவ
2013
00:00

வரும் ஜூன் மாதத்தில், இந்திய இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 24 கோடியே 30 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் எட்டு மாதங்களில், இந்த வளர்ச்சி 18.53 சதவீதமாக இருக்கும். இதற்கான அடிப்படைக் காரணங்களில், உயர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடும் ஆகும். ஜூன் மாதத்தில் இந்த வளர்ச்சியை அடையும் பட்சத்தில், உலக அளவில், இணையப் பயனாளர் எண்ணிக்கையில், இந்தியா, அமெரிக்காவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். இது குறித்து வெளியிடப்பட்ட ICube 2013 என்ற அறிக்கை இதனை அறிவித்துள்ளது. இந்த அறிக்கையை, இந்தியாவின் Internet and Mobile Association of India (IAMAI) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது, சீனா 30 கோடி பேருடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 20 கோடியே 70 லட்சம் பேருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், இந்தியாவின் இணையப் பயனாளர் எண்ணிக்கை 20 கோடியே 50 லட்சம் ஆகும். இது சென்ற டிசம்பரைக் காட்டிலும் 40 சதவீதம் கூடுதலாகும்.
ஒரு கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து 10 கோடி என்ற எண்ணிக்கையைப் பிடிக்க, இந்தியாவிற்கு பத்து ஆண்டுகள் ஆயின. ஆனால், 10 கோடியிலிருந்து 20 கோடிக்கு உயர மூன்று ஆண்டுகளே எடுத்துக் கொள்ளப்பட்டது. மொபைல் சாதனங்கள் வழியே இணைய அணுகல், இந்தியாவில் இனி வேகமாக வளரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இணையம் பயன்படுத்துபவர்களில், 90 சதவீதம் பேர், ஆன்லைன் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துகின்றனர். இதில் மின் அஞ்சல் சேவையினை 78 சதவீதம் பேர் கையாளுகின்றனர். சமூக இணைய தளங்களைப் பயன்படுத்தும் பழக்கம், இந்தியாவில் புயலாக மாறி வருவதாக, இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 75 சதவீதம் பேர் இந்த வகையில் இயங்குகின்றனர்.
பாடல்களையும், படங்களையும் பார்ப்பவர்களில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், மதிப்பு மிக்க சேவைகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அதே போல, இணையத்தில் பொருட்கள் வாங்குவதும் உயர்ந்து வருகிறது. இரண்டில் ஒருவர், தான் இணைய தளம் மூலம் பொருள் வாங்கியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வளவு உயர்ந்த எண்ணிக்கையில் பயனாளர்கள் இருந்தும், இணையம் செயல்படுவதில் என்ன நடைபெறுகிறது? பிராட்பேண்ட் இணைப்பு மிகக் குறைந்த வேகத்திலேயே கிடைக்கிறது. இந்த இணைப்பில் பயன்படுத்தப்படும் சாதனங்களும் விலை கூடுதலானவையாகவே உள்ளன. இணைப்பினைத் தரும் கட்டமைப்பும், எதிர்பார்க்கின்ற வேகத்தைத் தருவதாக அமைக்கப்படவில்லை. எனவே, இந்த எண்ணிக்கையில் உள்ள இணைய பயனாளர்கள், அமெரிக்காவில் இயங்கும் இணையப் பயனாளர் அளவிற்கு, இணைய இணைப்பினைப் பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக் குறியே. வெறும் மின் அஞ்சல் தொடர்புக்கும், சமுதாய இணைய தளங்களில் பொழுது போக்கு மற்றும் தகவல் பகிர்வுக்கு மட்டுமே இணையத்தினைப் பயன்படுத்தும் நிலையைத் தாண்டி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இணையம் பயன்படுத்தப்பட்டால் தான், அதன் சரியான பயன் நம் சமுதாயத்தினை அடைய முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X