பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 நவ
2013
00:00

தன் ஊழியர்களைச் சுதந்திரமாக ஆய்வு செய்திட வசதிகள் செய்து கொடுத்து, அவர்களின் புதிய முயற்சிகளில் தானே, கூகுள்
அதிகமான சேவைகளை உருவாக்கியது. பின் ஏன் அதனை நிறுத்திவிட்டது? காரணம் தெரிந்தால் தரவும்.
நீ. மஹா லட்சுமி, திருப்பூர்.

என்னதான் வேகமாக வளர்ந்தாலும், கூகுள் ப்ளஸ் பிரிவில், இன்னும் சில தனித்தன்மை கொண்ட வசதிகளைத்தர கூகுள் முன் வர வேண்டும். அப்போதுதான் பயனாளர்கள் இதனைத் தவிர்க்க எண்ண மாட்டார்கள்.
எஸ்.கே. உசைன், போடி.

அதிக எண்ணிக்கையில் மக்கள் பயன்படுத்துவதனால் தான், மால்வேர்களும், பெர்சனல் கம்ப்யூட்டரை இலக்குகளாகக் கொண்டுள்ளன. அதற்காக நாம் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? உங்கள் கட்டுரை அநாவசியமாகப் பயமுறுத்துவதாகவே கருதுகிறேன்.
கே. மஞ்சுளா, பழனி.

ஜிமெயில் டு அவுட்லுக் அக்கவுண்ட் மாற்றம் குறித்து நீங்கள் கேள்வி பதில் பகுதியில் தந்துள்ள விளக்கக் குறிப்புகள் மிகத் தெளிவாக இருந்தன. நானும் இது போல மாற்றிக் கொள்ள எண்ணியிருந்த போது, தாங்கள் அளித்த டிப்ஸ் பதில் மிகவும் உதவியது. நன்றி.
ஆ. சிரஞ்சீவி தாஸ், சென்னை.

மிகப் பெரிய பைல்களை அனுப்ப தந்துள்ள கேள்விக்கான பதில், கட்டுரை அளவிற்கு அதிக தகவல்களை அடக்கியுள்ளதாக உள்ளது. எதனையும் குறை வைக்காமல் தருவது தங்கள் சிறப்பு.
என். சுகிர்த மலர், கோவை.

ஏதோ அசைக்கிறோம், போன் செயல்படுகிறது என்று எண்ணி இருந்த எனக்கு, மொபைல் போன் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இத்தனை சென்சார்களா என்று வியக்க வைக்க அளவிற்கு அவற்றை விளக்கமாக அளித்துள்ளீர்கள். அறிவியல் முன்னேற்றம் இன்னும் என்னவெல்லாம் தருமோ என்று வியக்க வைக்கிறது.
கா. இளவழகன், சிவகாசி.

ப்ராக்ஸிமிட்டி சென்சார் என்பதற்கு ""அருகமைவு உணர்வலை'' என்ற தமிழ் மொழி பெயர்ப்பு அருமையாக உள்ளது. பாராட்டுகள்.
பேரா. டாக்டர் சி.தமிழ்ச் செல்வன், மதுரை.

பவர் கண்டிஷனிங், சர்ஜ், ஸ்பைக், கேவிஏ, ஆன்லைன், ஆப்லைன் என மின்சார சீரமைப்பு குறித்த தங்கள் கேள்வி பதில்
கட்டுரை மிக அருமை. ஒரு பாடம் படித்தது போல இருந்தது.
என். சுரேந்திரன், திருப்பூர்.

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள், தங்கள் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு சப்போர்ட் நிறுத்துவது, நம் கம்ப்யூட்டர் வேலைப்பாட்டினை மேம்படுத்துவதற்காகத்தான் என்பதனை நன்றாக உணரும் வகையில் எழுதி வருகிறீர்கள். உங்கள் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகள்.
சி. மருதமுத்து, புதுச்சேரி.

விண்டோஸ் 7 குறித்த டிப்ஸ் இன்னும் அதிகமாக வெளியிடவும். அதனையே இன்னும் சில ஆண்டுகள் பயன்படுத்தும் வாசகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். மேலும் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்குத்தான் பலரும் மாறத் திட்டமிடுகின்றனர். எனவே தான் இந்த விண்ணப்பம்.
சா. எழிலரசி, விருதுநகர்.

இனி கம்ப்யூட்டரை இயக்கினால், நச்சு புரோகிராம்கள் இருக்குமோ என்ற தயக்கத்துடனேயே தான் செயல்பட வேண்டும் என்று சொல்கிற அளவிற்கு, விலா வாரியாக அவற்றின் வகைகளை விளக்கியுள்ளீர்கள். நன்றி.
எஸ். பாக்யராஜ், பொள்ளாச்சி.

மின் அஞ்சல் முகவரியிலிருந்து அடிக்கடி போலியான செய்திகள் சென்று கொண்டிருந்தது. மீண்டும் விண்டோஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்த பின்னரே நின்றது. நீங்கள் ஏன் அதனைப் பரிந்துரைக்கவில்லை? அந்த அளவிற்கு தேவை இல்லையா?
சி.எம். கருணாகரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X