கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 நவ
2013
00:00

கேள்வி: நான் ஆண்ட்ராய்ட் சாம்சங் போன் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள கீ போர்டில் சமன் எனப்படும் ஈக்குவல் சைன் அமைக்க முடியவில்லை. எண்களுக்கான பகுதியில், இந்த அடையாளம் இல்லை. சில இணைய முகவரிகளில் இது தேவைப்படுகிறது. இதற்கு என்ன வழி?
ஆர். ராஜ்வேல், மதுரை.
பதில்
: ராஜ்வேல், சற்றுப் பொறுமையாக அனைத்து கீகளையும் பார்த்திருக்கலாம். எண்களுக்கான பிரிவில் 1/3 என்று ஒரு கீ இருக்கும். இதனை அழுத்தினால், மேலும் இரு பிரிவுகளில், பலவகை குறியீடுகள் கிடைக்கும். இரண்டாவது பிரிவில், நீங்கள் கேட்கும் சமன் குறியீடு கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். என்னுடைய டாஸ்க் பாரில் அதிகமான ஐகான்கள் காட்டப்படுவதால், சில நேரங்களில் மாற்றி கிளிக் செய்துவிடுகிறேன். இதனைத் தவிர்க்க, நமக்குத் தேவையானவற்றை மட்டும் இதில் அமையும்படி செட்டிங்ஸ் அமைக்க முடியுமா?
சி. கோகிலா ராணி, சிவகாசி.
பதில்:
தாராளமாக. கடிகாரம், வால்யூம் கண்ட்ரோல் (ஸ்பீக்கர்) நெட்வொர்க் செயல்பாடு தெரிவிக்கும் ஐகான், பவர் அளவு மற்றும் ஆக் ஷன் சென்டர் ஐகான் ஆகியவற்றை நாம் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம். இதற்குக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
1. டாஸ்க்பாரின் வலது பக்கம் மேலே காட்டியபடி ஓர் அம்புக் குறி இருக்கும். இதன் அருகில் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அப்போது "Show hidden icons” என்று காட்டப்படும்.
2. இந்த பட்டனில் கிளிக் செய்து "Customize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது "Notification Area Icons” என்ற கண்ட்ரோல் பேனல் விண்டோ காட்டப்படும்.இந்த விண்டோவின் கீழாக, "Turn system icons on or off” என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், விண்டோ "Turn system icons on or off” என மாற்றம் பெறும். இங்கே, “Clock”, “Volume” (the speaker), “Network”, “Power”, and “Action Center” ஆகிய சிஸ்டம் ஐகான் அருகே கிளிக் செய்து அதனை "On” அல்லது "Off” என அமைக்கவும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் ஹெல்ப் டெக்ஸ்ட் பட்டனை அழுத்துகையில், டெக்ஸ்ட் மிகவும் சிறியதாகக் காணப்படுகிறது. இதனால், படிக்கும் போது, கண்களுக்குச் சிரமமாக உள்ளது. இந்த டெக்ஸ்ட்டை எப்படிச் சற்றுப் பெரிய அளவில் மாற்றுவது? நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.
கே.ஆர். சியாமளா ராணி, தேவாரம்.
பதில்:
எளிதாக பல ஆப்ஷன்களில் மாற்றலாம். ஹெல்ப் விண்டோவில், மேலாக வலது பக்கம் Options என்று ஒரு பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்திடவும். அடுத்து "Text Size” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து கீழ்க்காணும் ஆப்ஷன்கள் கிடைக்கும்.
Largest, Larger, Medium (default), Smaller மற்றும் Smallest. உங்கள் விருப்பப்படி இவற்றில் எதனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். பின்னர், மீண்டும் டெக்ஸ்ட் அளவினை மாற்றிக் கொள்ள வேண்டுமானாலும், இதே வழியில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் ஒன்று வைத்துள்ளேன். இதற்குப் பதிலாக விண்டோஸ் 7 அல்லது 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் இயக்க விரும்புகிறேன். புதியதாக ஒன்று வாங்க வேண்டுமா? அப்படி வாங்கினாலும், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 அல்லது 8.1, இவற்றில் எது பயன்படுத்த எளிதாக இருக்கும். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்றவன் அல்ல. ஆனால், பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறேன்.
ஆர். சுந்தர மகாதேவன், புதுச்சேரி.
பதில்:
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டியதில்லை. அப்படி இருந்தால், இந்த கேள்வியை எனக்கு அனுப்பி இருக்க மாட்டீர்கள். முதலில், உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 பதித்து இயக்க முடியுமா என்பதனைச் சோதனை செய்திடவும். இதற்கு கீழ்க்காணும் முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் இணைய தளங்கள் வழி நடத்தும்.
1. http://www.microsoft.com/enus/download/details.aspx?id=20
2. http://windows.microsoft.com/enUS/windows8/upgradetowindows8
உங்கள் கம்ப்யூட்டரில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பதித்து இயக்க முடியாது என முடிவு வந்தால், புதிய கம்ப்யூட்டர் வாங்கவும். உங்களைப் பொறுத்தவரை, விண்டோஸ் 7 உங்களுக்குச் சற்றுப் பழக்கப்பட்ட சிஸ்டமாகத் தெரியும். இயக்குவது எளிதாக இருக்கும். விண்டோஸ் 8 சிஸ்டம் முற்றிலும் புதிய இன்டர்பேஸ் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், முதலில் சற்று தடுமாற்றம் ஏற்படலாம். ஆனால், போகப் போக பழக்கம் ஏற்படும். பல புதிய வசதிகள் இருப்பதால், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை நீங்கள் விரும்புவீர்கள். தற்போது வந்துள்ள விண்டோஸ் 8.1ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, மாற்றி அமைக்கப்பட்டுள்ள வழிமுறைகள் நிச்சயம் உங்களுக்கு விரைவில் பழக்கமாகிவிடும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான சப்போர்ட் வரும் 2020 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நிறுத்தப்படும். விண்டோஸ் 8க்கான சப்போர்ட் அதன் பிறகும் மூன்று ஆண்டுகள் தொடரப்படும். எனவே, எது உங்களுக்குச் சரிப்படும் என ஆய்வு செய்து, முடிவெடுத்துச் செயல்படவும். இந்த இரண்டு சிஸ்டங்களிலும், மவுஸ் மற்றும் கீ போர்ட் கொண்டு செயல்படலாம்.

கேள்வி: லேப்டாப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். ஏசர் லேப்டாப். இதில் கீ போர்ட் பயன்படுத்துகையில், கர்சர், கன்னா பின்னாவென்று எங்கெங்கோ செல்கிறது. ஏன் என்று தெரியவில்லை. விரல்கள் டச் பேடினைத் தொடுவதால் இது ஏற்படுகிறது என் நண்பர்கள் சொன்னதால், உள்ளங்கைகளைத் தூக்கி டைப் செய்திட வேண்டியுள்ளது. இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா?
என். செண்பக லஷ்மி, தேரழுந்தூர்.
பதில்:
கவலைப் பட வேண்டாம். முதன் முதலாக லேப்டாப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் சந்திக்கும் சிக்கலான பிரச்னை இது. தீர்வு மிக எளிதான ஒன்றாகும். முதலாவதாக, https://code.google.com/p/touchfreeze/downloads/detail?name=TouchFreeze1.1.0.msi&can=2&q= என்னும் இணைய தளம் சென்று டச் ப்ரீஸ் TouchFreeze என்னும் சாப்ட்வேர் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து, லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளவும். இந்த சாப்ட்வேர், நீங்கள் டைப் செய்திடத் தொடங்கியவுடன், டச் பேடினைச் செயல் இழக்கச் செய்திடும். டைப் செய்வதை நிறுத்தியவுடன், டச் பேட் செயல்படும். எனவே, எந்தப் பிரச்னையும் இன்றி டைப் செய்திடலாம்.
சில லேப்டாப் கம்ப்யூட்டர்களில், டச் பேடின் இயக்கத்தினை நிறுத்த, சிறிய அளவிலான பட்டன் தந்திருப்பார்கள். இதனை இயக்கியும் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி உள்ள சிஸ்டத்தை விட்டுவிட்டு, புதிய கம்ப்யூட்டர் ஒன்றுக்கு (விண்டோஸ் 8 உடன்) மாறப் போகிறேன். முக்கிய பைல்களை மாற்றுவதற்கு, எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் அவசியம் தேவை என, கம்ப்யூட்டர் விற்பனை செய்பவர் கூறுகிறார். இது ஏறத்தாழ ரூ.5,000 ஆக உள்ளது. பைல்கள் மற்றும் புரோகிராம்களை மாற்ற இது அவசியம் தேவையா?
என். ஜே. அகமது, காரைக்கால்.
பதில்:
விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிட்டு, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டருக்கு மாறப் போவது குறித்து மகிழ்ச்சி, பாராட்டுகள். முதலில் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பைல்கள், டாகுமெண்ட்கள், போட்டோக்கள், படங்கள், மூவிகள் என இவற்றைத்தான் நீங்கள் ஒரு ட்ரைவ் மூலம் மாற்ற முடியும். அப்ளிகேஷன் புரோகிராம்களைப் புதியதாக இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
பைல்களை மாற்ற கட்டாயம் எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ்தான் தேவை என்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு ப்ளாஷ் ட்ரைவ் கொண்டு, புதிய கம்ப்யூட்டருக்கு பைல்களை மாற்றிக் கொள்ளலாம். முதலில், உங்கள் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து நீக்குங்கள். மாற்ற வேண்டிய அவசிய, முக்கிய பைல்களை ஒதுக்கித் தயாராய் வைக்கவும். பின்னர், ப்ளாஷ் ட்ரைவ் மூலம் மாற்றுங்கள்.
மிகப் பெரிய அளவில் பைல்கள் இருப்பின், Targus Transfer Cable என்ற பெயரில் சாப்ட்வேர் இணைந்த ஹார்ட்வேர் கேபிள் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நகர்த்தலில், பைல்களை மாற்றிவிடலாம்.
அடுத்த தீர்வு க்ளவ்ட் ஸ்டோரேஜ். பல இணைய தளங்கள், பைல்களை சேவ் செய்து வைக்க, க்ளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் இணைய தள சேவைகளைத் தருகின்றன. ஸ்கை ட்ரைவ், ட்ராப் பாக்ஸ் போன்ற இந்த சேவைகளைப் பயன்படுத்தி, எக்ஸ்பி கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை அதில் தேக்குங்கள். பின்னர், புதிய கம்ப்யூட்டர் வழியாக, அவற்றை டவுண்லோட் செய்து பதிந்து கொள்ளுங்கள். கட்டணம் வாங்கிக் கொண்டு இந்த சேவையைத் தரும் சில தளங்களும் உள்ளன.
உங்களால், செலவழிக்க இயலும் என்றால், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் ஒன்றினை (ஒன்று அல்லது இரண்டு டெராபைட் கொள்ளளவில்) வாங்கிப் பயன்படுத்தலாம். இந்த ட்ரைவ்கள், முக்கிய பைல்களுக்கு பேக் அப் எடுக்க உதவியாக இருக்கும். வெளியூர் செல்கையில், இவற்றில் பெரிய அளவில் டேட்டா பைல்களை எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar v - chennai,இந்தியா
01-டிச-201321:23:56 IST Report Abuse
kumar v பிரஸ் fn+f7 லாக் touch pad in acer laptop. and also use good usb mouse .
Rate this:
Share this comment
Cancel
MINNALDASS - DHARMAPURI,இந்தியா
29-நவ-201316:58:07 IST Report Abuse
MINNALDASS வீடியோ எடிட் செய்ய ஆன்லைனில் உள்ள நல்ல வெப்சைட் சொல்லவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X