விண் ஆம்ப் இனி இல்லை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2013
00:00

கடந்த 15 ஆண்டுகளாக, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களின் சிறந்த இசைத் தோழனாக இயங்கி வந்த விண் ஆம்ப் (Windows Advanced Multimedia Products) அப்ளிகேஷன் புரோகிராமினைத் தாங்கியுள்ள இணைய தளம் Winamp.com, டிசம்பர் 20 முதல் மூடப்படுகிறது. இனி இந்த புரோகிராமினை அதன் இணையதளத்திலிருந்து பெற இயலாது. இதன் இறுதி பதிப்பு விண் ஆம்ப் 5.66 தற்போது அதன் இணைய தளத்தில் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் அதன் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்ற நவம்பர் 21 அன்று இந்த புதிய பதிப்பினை வெளியிடுகையில், இணைய தளம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம் மூடப்படும் தகவலும் தரப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத்தில் (University of Utah) பயின்று வந்த ஜஸ்டின் ப்ராங்கெல் (Justin Frankel) மற்றும் ட்மிட்ரி போல்டிரேவ் (Dmitry Boldyrev) என்ற இரு மாணவர்களால் உருவாக்கப்பட்டு, விண் ஆம்ப் முதல் பதிப்பு 1997ல் இலவசமாகத் தரப்பட்டது. ஒரு கால கட்டத்தில், இதனைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டி இருந்தது. ப்ராங்கெல் தன் நிறுவனத்தினை Nullsoft எனப் பெயரிட்டு அழைத்தார். தொடர்ந்து பல மாற்றங்களை விண் ஆம்ப் புரோகிராமில் இணைத்தார். எம்பி3 பைல்கள் பரவலாக அனைவரிட மும் புழக்கத்திலும், பகிர்தலிலும் இருந்த போது, இந்த புரோகிராமைப் பயன்படுத்தியவர் எண்ணிக்கை மள மளவென உயர்ந்திருந்தது. MP3, MIDI, MOD, MPEG1 audio layers 1 and 2, AAC, M4A, FLAC, WAV and WMA எனப் பல்வேறு பார்மட்களில் அமைந்த இசைப் பைல்களை வெகு இலாவகமாக விண் ஆம்ப் இயக்கியது. விண்டோஸ் இயக்கத்தில் இயங்கிய, பலரின் அபிமானம் பெற்ற, மியூசிக் பிளேயராக இது இருந்தது.
தொடக்கத்தில் விண்டோஸ் இயக்கத்திற்கு மட்டும் என விண் ஆம்ப் வடிவமைக்கப்பட்டாலும், பின் நாளில், ஆண்ட்ராய்ட், மேக் ஓ.எஸ். ஆகிய சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டது.
1999 ஆம் ஆண்டில், 8 கோடி டாலர் கொடுத்து, ஏ.ஓ.எல். நிறுவனம் நல்சாப்ட் நிறுவனத்தை வாங்கி, தன் துணைப் பிரிவாக வைத்துக் கொண்டு இயக்கியது. தொடர்ந்து, இந்த புரோகிராமில் பல மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. சென்ற நவம்பர் 20ல், மூடுவதற்கான அறிவிப்பு வெளியானவுடன், மைக்ரோசாப்ட் இதனை வாங்கப் போவதாக, வதந்தி பரவியது. இணையத்தில் விண் ஆம்ப் வாடிக்கையாளர்களும், ரசிகர்களும், இதனை மூடக் கூடாது என விண்ணப்பத்தினை அளித்தனர். அல்லது, இந்த புரோகிராமிற்கான சோர்ஸ் குறியீட்டினை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
விண் ஆம்ப் நிறுவனத்தை மூட வேண்டும் என்ற முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல. ஐ ட்யூன்ஸ், விண்டோ மீடியா பிளேயர் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, சில ஆண்டுகளாகவே, விண் ஆம்ப் எந்த வித புதிய மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருந்தது. டிஜிட்டல் உலகில், பயன்படுத்தாத எதுவும் மறைந்து போகும் என்ற கூற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ ட்யூன்ஸ் உருவாக்கத்தில், முதலில் விண் ஆம்ப் தாக்கம் இருந்தது. விண் ஆம்ப் உருவாக்கிய இருவரும், இந்த வகையில் பாதையை எடுத்துக் கொடுத்தனர் என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. இசை உலகில் இவர்கள் இருவருக்கும் அழியாத புகழும் இடமும் உண்டு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X