ஐந்து கோடி பெண்களை இணையத்தில் இணைக்க கூகுள் திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2013
00:00

சென்ற வாரம், கூகுள் இந்தியா நிறுவனம், புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. வரும் 2014 ஆம் ஆண்டு முடிவிற்குள்ளாக, புதியதாக 5 கோடி பெண்களை, இணையத்தில் இணைக்கப்போவதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது கூகுள். தற்போது இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் 20 கோடி பேரில், மூன்றில் ஒரு பங்கு தான் பெண்கள் உள்ளனர். இந்த நிலையை மாற்ற கூகுள் இந்தியா முயற்சிகளை எடுக்கும். எளிதாக இணையத்திற்கு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வழிகள், அன்றாட வாழ்க்கைக்கு எப்படி இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து பெண்கள் அறியாமலேயே உள்ளனர். இதுவே இவர்களுக்கு ஒரு பெரும் தடையாக உள்ளது.
இந்த தடைகளை அகற்றும் பணியில், கூகுள் இந்தியா ஈடுபடும். இதன் மூலம் இந்த தடைகள் நீக்கப்பட்டு, பெண்கள் தங்கள் வாழ்க்கையில், இணையத்தையும் ஓர் அங்கமாக ஏற்றுக் கொண்டு, வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என இந்நிறுவனப் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம், இண்டெல், எச்.யு.எல். மற்றும் ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள், இந்தியப் பெண்கள் தாங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல சவால்களை, இணையத்தின் உதவி யுடன் நேர் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. சுய மரியாதை பெறல், கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துரைத்தல், புதிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளல் மற்றும் கல்வி பெறுதல் ஆகியவை பெண்களுக்கு இணைய இணைப்பின் மூலம் கிடைக்கும். இந்த திட்டத்தின் சோதனை இயக்கம், ராஜஸ்தான் மாநிலத்தில், பில்வாரா மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. 13 முதல் 18 வயது வரை உள்ள பெண்களிடம் இது தொடங்கியது. இணையம் சார்ந்த பயிற்சிக்கான தகவல்கள், ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
ஏறத்தாழ ஒரு லட்சம் பெண்களுக்கு, இணையக் கல்வியும் பயிற்சியும் வழங்கப்பட்டது. எதிர்பார்த்தபடி, பயிற்சி பெற்ற அனைவருமே, இணையத்தைத் தங்கள் தேவைகளுக்கேற்ப பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
அடுத்து, கூகுள் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களை அடையும் வகையில், இணையத் தேவைக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போகிறது. இதற்கென உருவாக்கப்பட்ட இணைய தளத்தில் (www.hwgo.com), இணையம் சார்ந்த அடிப்படை தகவல்கள், சார்ந்த பயிற்சி மற்றும் இந்தியப் பெண்களுக்கான இணையத் தகவல்கள் ஆகியவை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் தரப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி பெறும் பெண்கள், தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள உதவியாக, கட்டணமில்லாத தொலைபேசி ஒன்று 1800 41 999 77 என்ற எண்ணில் இயங்கவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்பு கொண்டு இணையப் பயன்பாடு குறித்த எந்த சந்தேகத்தினையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X