Advertisement
கிடுக்கிப் பிடியில் இடுக்கி
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2013
00:00

மேற்குத் தொடர்ச்சி மலை இந்தியாவிற்கு கிடைத்த இயற்கை எழில் கொஞ்சும் வளம் மிக்க வனப்பகுதி.
இது கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் இருப்பிடமாக மாறி இயற்கை வளங்களை இழந்து வருகிறது. வனப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பல்வேறு அத்துமீறல்களால் வனமும், இயற்கை வளமும் அதில் வாழும் வன விலங்குகளும் தங்கள் வாழ்விடங்களை இழந்து தங்கள் இனங்களையும் இழந்து வரும் அபாயம் தொடர்ந்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை ஆய்வு செய்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் கமிட்டியின் அறிக்கை மேற்கு தொடர்ச்சி மலையை "பாதுகாக்கப்பட்ட பகுதி'யாக அறிவித்து அதற்கான கட்டுப்பாடுகளையும், வனங்களைப் பாதுகாக்கும் விதிகளையும் அறிவித்துள்ளது. இதனை அரசியலில் ஆதாயம் தேடுபவர்கள் எதிர்க்கிறார்கள். மக்களைத் தூண்டிவிட்டு, கேரளாவின் ஒரு பகுதியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டக்காரர்களின் கிடிக்கிப்பிடியில் இருந்த இடுக்கிக்கு விசிட் செய்தோம்.
இடுக்கி மாவட்டம் தமிழகத்தின் முல்லைப் பெரியாறு அணை அமைந்த இடம். இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி. பெரியாறு டைகர் ஃபாரஸ்ட், தேக்கடி, மூணாறு, உட்பட்ட சுற்றுலாத் தலங்களும், பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம், தொடுபுலா போன்ற வனப்பகுதி மிகுந்த ஊர்களும் உள்ள இடம். கஸ்தூரி ரங்கன் அறிக்கைப்படி இப்பகுதிகளில் மணல் அள்ளுவது, பாறைகளை உடைப்பது, அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவது, சரிவான பகுதிகளில் சீரமைத்து விவசாயம் செய்வது விவசாயத்தில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிப்பது இவை அனைத்திற்கும் இடுக்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, இனி கேரளா முல்லைப் பெரியாறு அணையை ஒட்டி புதிய அணை கட்ட முடியாது. இது முல்லைப் பெரியாறு தமிழக உரிமைக்க கிடைக்கப்போகும் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்துள்ளது.
அணையை ஒட்டி கோர் ஜோன், பப்பர் ஜோன் போன்ற வனப்பகுதிகள் உள்ளன. வன விலங்குகள் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும் இடம் இது. மேலும் இது வன விலங்குகளின் வாழ்விடமாகவும், இரை தேடும் இயற்கை வனப்பகுதியாகவும் அமைந்த இடமுமாகும். மற்றவைதான் மனிதர்கள் சுற்றப்பார்க்கும் அனுமதி கொண்ட டூரிஸம் ஜோன் பகுதி. இந்த கோர் ஜோனிலும், பப்பர்ஜோனிலும் மத்திய வன விலங்கு ஆராய்ச்சியாளர்களைத் தவிர யார்க்கும் அனுமதி கிடையாது. அரியவகை வன விலங்குகள் நிறைந்த இப்படிப்பட்ட இடத்தில் அமைந்த முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் இனி புதிய அணை கட்டுவதோ அத்துமீறி சர்வே போன்ற பணிகளைச் செய்யவோ அனுமதி இல்லை.
வனப்பகுதி நிறைந்த கிராமப் பகுதிகளை மூன்று கிரேடுகளாகப் பிரித்துள்ளனர். இப்பகுதியில் சிறு நீர்த்தேக்கத் திட்டம், மின் திட்டம் அமைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்டக்கூடாது. அடுக்குமாடி கட்டடங்களும் கட்டக்கூடாது. இப்பகுதியில் நிலங்களை வாங்கவும், விற்கவும், விரிவுபடுத்தவும் முடியாது. தற்போது இவை அனைத்தும் இடுக்கி மாவட்டத்தில் அமலுக்கு வந்து விட்டதால் அங்கே ஒரு சில மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் செய்து வருகிறார்கள்.
போராட்டக்குழுவைச் சேர்ந்த குமுளி ரெஜி "கஸ்தூரி ரங்கன் அறிக்கையை அமல்படுத்தக்கூடாது, வீடு கட்டவோ, சீரமைக்கவோ முடியல, இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நில அடமானம் வைத்து வங்கிக் கடன் வாங்கவும் முடியல, லட்சக்கணக்கில் போன் லேண்ட் வேல்யூ, இன்னைக்கு பத்தாயிரத்துக்குக் கூட கேக்க நாதியில்லாம போச்சு, இதுக்கெல்லாம், இந்த அறிக்கை தான் காரணம்' என்கிறார்.
மூணாறு பகுதியைச் சேர்ந்த ரெஜினா, "இந்த அறிக்கையை வரவேற்கிறோம். காரணம் ஏற்கெனவே இருப்பவைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. அடுக்குமாடிக்கும், இயற்கை அழிவுகளை உருவாக்கும் செயலுக்கு மட்டும் தான் தடை இதனால் பெரிசா எந்தப் பாதிப்பும் இல்லை' என்றார் அக்கறையோடு.

- அரண்மனை சுப்பு

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.