பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 டிச
2013
00:00

ஹெல்ப் டெக்ஸ்ட் எழுத்தின் அளவைப் பெரிதாக்க உதவிடும் குறிப்பு தந்தது, என் போன்ற சீனியர் சிட்டிசன்களுக்கு பக்க பலமாக உள்ளது. கேள்வி பதில் பகுதி எப்போதும் அரிய தகவல்களைத் தருவதாகவே உள்ளது. பாராட்டுகள்.
என்.ஞானசம்பந்தம், மதுரை.

விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7 அல்லது 8க்குச் செல்ல விரும்புபவர்களின் மன அலைச்சல் கேள்விக்குத் தந்துள்ள தீர்க்கமான பதில் மிகவும் அருமை.
கா. சுபஸ்ரீ சுந்தர், செங்கல்பட்டு.

விண் ஆம்ப் இனி இல்லை என்ற தகவல் படித்து, பல கணங்கள் திகைத்திருந்தேன். எத்தனை ஆண்டுகள், அவை தரும் இசை மழையில் மகிழ்ந்திருக்கிறோம். வீடியோ படங் களைப் பார்த்து ரசித்திருக்கிறோம். இறுதி பதிப்பை, உடனடியாக டவுண்லோட் செய்து வைத்திருக்கிறேன்.
ஆ.நிர்மலா, கோவை.

எந்த கம்ப்யூட்டர் அல்லது மொபைல் இதழிலும் இல்லாத தகவல் விண் ஆம்ப் குறித்தது. இந்த புரோகிராம் குறித்த விபரங்கள் அனைத்தையும் தந்தது, பின்னோக்கி 15 ஆண்டுகள் சென்ற அனுபவத்தினைக் கொடுத்தது.
எஸ். செபாஸ்டியன், மதுரை.

லேப்டாப் கம்ப்யூட்டர் நம்முடைய இன்னொரு உடல் உறுப்பாக மாறி வருகிறது. பயணங்களில் இதனை எப்படிக் கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற குறிப்புகள் மிகவும் பயன் தருபவை. குறிப்பாக இன்றைய மாணவர்கள் தங்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய லேப்டாப் கம்ப்யூட்டரினைப் பாதுகாக்கும் வழிகளாகவே அவை உள்ளன.
என். கார்த்திக், பொள்ளாச்சி.

லேப்டாப் கம்ப்யூட்டரின் ஜாதகம் என்றதன் கீழ், எப்படி அவற்றின் தகவல்களை படமாக எடுத்துப் பாதுகாப்பது என்பதை விளக்கியது மிகவும் புதுமையாகவும், முதல் முறை கேட்பதாகவும் உள்ளது. மிக்க நன்றி.
எஸ். கண்ணன், சின்னமனூர்.

பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் டிப்ஸ் அனைத்தும், தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்துவோருக்கான அருமையான குறிப்புகளாகும். மாணவர்கள் இவற்றைப் பின்பற்ற வேண்டும்.
செ. மாரியப்பன், ஆசிரியர், புதுச்சேரி.

நம் உலகின் வாழ்நிலையையே புரட்டிப் போட்ட விண்டோஸ் குறித்த ஆச்சரியப்படுத்தும் தகவல்கள், மிகவும் ருசியாகவும், புதுமையாகவும் இருக்கின்றன. உண்மையிலேயே பில் கேட்ஸ் சாதனை மனிதர்தான். இவருக்குத் தர வேண்டும் நோபல் பரிசு.
ஆ.கா. இறையரசன், காரைக்குடி.

30 ஆண்டு காலத்தில் மனிதனின் சிந்தனைப் போக்கினையும் வாழ்க்கை முறையையும் மாற்றிய விண்டோஸ் சிஸ்டத்தின் பன்முகப் பரிமாணங்களை, மிக அழகாகத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
சி. முருகேசன், தேனி.

ஹாட் பேக் அப் என்ற சொல்லே புதுமையாக உள்ளதே எனப் படிக்கத் தொடங்கினால், அதில் உள்ள இடர்ப் பாடுகளைத் தெளிவாக விளக்கி உள்ளது சிறப்பாகவும் எச்சரிக்கை செய்திடும் விதமாகவும் இருந்தது. இந்த பேக் அப் எடுப்பவர்கள் கட்டாயம் இதில் உள்ள ரிஸ்க்கினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
என்.எஸ். முத்துவேந்தன், சென்னை.

கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளக் கூடிய உருப்படியான விஷயம், பெண்களை இணையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பது. நம் நாட்டில், கல்வி, கேள்விகளில் பெண்கள் இன்னும் கலந்து கொள்ளாமலே இருக்கின்றனர். படித்த பெண்கள் கூட, கம்ப்யூட்டரா அது நமக்கு ஒத்து வராது என ஒதுங்குகின்றனர். எனவே, கூகுளின் முயற்சிகள் காலத்தே தேவைப்படும் உதவியாகும். அதனைப் பாராட்டி, அதன் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம்.
என். பார்வதி ராஜன், தாம்பரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X