பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 டிச
2013
00:00

எக்ஸ்பி சிஸ்டத்தினைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலையைப் பலமுறை நீங்கள் எடுத்துச் சொல்லியும், இன்னும் சிலர் ஏதேனும் மாற்று வழி இருக்காதா என எண்ணுகின்றனர். பன்னாட்டளவில் இந்த எண்ணம் மக்களிடம் வேரூன்றி உள்ளது. டிஜிட்டல் உலகைப் பொறுத்தவரை, மாற்றங்களை ஏற்றுக் கொண்டு சென்றால் தான், நாம் முன்னேற முடியும்.
எஸ். காமாட்சிநாதன், சிவகாசி.

முடிவில்லா யுத்தம் என்ற அட்டகாசமான தலைப்பில், தாங்கள் விளக்கம் அளித்துள்ள மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான நம் போராட்டம், அதன் தன்மைகளை அழகாக விவரித்துள்ளது. பாராட்டுகள்.
பேரா. தி. ஷண்முகம், மதுரை.

ஹேக்கர்கள் என்னும் திருடர்கள் நிச்சயம் திருந்த மாட்டார்கள். நாம் தான், மிகக் கவனமாக டிஜிட்டல் உலகில் இயங்க வேண்டும் என்பதனை நன்கு விளக்கியுள்ளீர்கள். நன்றி.
டாக்டர் என். சாமுவேல் துரைராஜ், கோவை.

ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்குபவை இனி விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கான இலவசமாக மற்றும் கட்டணம் செலுத்திப் பெறக்கூடிய, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மற்றும் அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து அவசியம் விளக்கவும்.
நா. இளவரசி, சிவகாசி.

விண்டோஸ் 8 மற்றும் 8.1. முதலில் பழகுவதற்கு சிறிது வித்தியாசமாக இருந்தாலும், அதன் வசதிகள், தரும் பாதுகாப்பு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் ஸ்டோரேஜ் வசதி ஆகியவை, மக்களை அதன் பக்கம் இழுத்துவிடும் என்பது உறுதி.
என். அப்துல்லா, வேலூர்.

கூகுள் தேடலுக்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளுடனான டிப்ஸ்கள் மிக அருமை. நம் தேடலை அழகாக வரையறை செய்து, நமக்குத் தேவையான தீர்வைத் தருகின்றன. நல்ல கட்டுரை.
சி. என். காயத்ரி, சென்னை.

கூகுள் தன்னுடைய சாதனங்களை மிகச் சிறப்பாக, பயனாளர்களுக்கான வசதிகளுடன் அமைக்கும் என்பது, அதன் பிரவுசரைப் பயன்படுத்தியவர்கள் உணர்வார்கள். நீங்கள் கொடுத்துள்ள பயன் குறிப்புகளுடன் இன்னும் அதிகமாக வரும் வாரங்களில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. சிவப் பிரகாஷ், திருப்பூர்.

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், அதில் செலவழிக்கப்படும் மின் சக்தி குறித்து யாருமே கவலைப் படுவதே இல்லை. ஸ்லீப், ஹைபர்னேட் மற்றும் ஷட் டவுண் குறித்த தங்கள் குறிப்புகள், இவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
தி. க. சுப்ரமணியம், விருதுநகர்.

விண்டோஸ் 8.1 ஷட் டவுண் வழிகள் சற்று சுற்றி வளைப்பதாக இருந்தாலும், அதற்கென உள்ள பல வழிகள், நம் வேலையை எளிதாக்குகின்றன. தெரிந்து கொள்ளும் வகையில் தந்தமைக்கு நன்றி.
ஒய்.பார்த்தசாரதி, புதுச்சேரி.

வாசகி ஒருவர் பெயிண்ட் புரோகிராம் குறித்து கேட்டாலும், அதனைப் போல சிக்கல் தரும் அனைத்திற்கும் விரிவான விளக்கம் கொடுத்தது, உங்கள் வழக்கமான வாசகர்கள் பால் உள்ள அக்கறையைக் காட்டுகிறது.
கே. உமா மகேஸ்வரி, சென்னை.

ஒரு கட்டுரை அளவிற்கான தகவல்கள் அடங்கிய செக்டிஸ்க் குறித்த பதில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
கா.பூங்குழலி, திண்டுக்கல்.

வைரஸ் பாதிப்பு வகைகளையும், அவற்றை எதிர்கொள்ள நாம் என்ன வழிகளைத் தொடர்ந்து கையாள வேண்டும் எனவும் அளித்த குறிப்புகள் அனைத்தும் மிகப் பயன் தருவதாக அமைந்துள்ளது. தொடர்ந்து இவற்றைச் சுருக்கமாகவேனும், நம் வாசகர்களுக்கு நினைவூட்டும் வகையில் தரவும்.
கே. மைக்கேல் ராஜ், காரைக்கால்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X