தொடங்கியது 3ஜி அலைவரிசை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

இதோ அதோ என்று ஒருவழியாக, 3ஜி மொபைல் வசதிக்கான அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. அரசு அறிவித்தபடி, சென்ற செப்டம்பர் முதல் நாளன்று, 3ஜி அலைவரிசை சேவைதர நடத்தப்பட்ட ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு, அலைவரிசை ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. வோடபோன் எஸ்ஸார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாட்டா டெலிசர்வீசஸ், பார்தி ஏர்டெல், ஏர்செல் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் இதனைப் பெற்றுள்ளன.
இந்த அலைவரிசை ஒதுக்கீட்டின் போது, அரசு சில நிபந்தனை களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  அவை,
1) ஐந்து ஆண்டுகளுக்குள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில், குறைந்தது 90% இடங்களில், முழுமையான  தொடர்பு தருவதனை உறுதி செய்திடல் வேண்டும்.
2)  ஐந்து ஆண்டுகளுக்குள், தங்களுக்கான மாவட்ட தலைமை இட ஒதுக்கீட்டில் 50% இடங்களில், 15% கிராமப்புற மக்களைச் சென்றடையும் வகையில் 3ஜி சேவை இருக்க வேண்டும். கிராமப்புற இடம் என்பதில் 50% மக்களாவது குறைந்த பட்சம் கிராமங்களில் வாழ வேண்டும். நகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் இது 50% கூடுதலாகவும் இருக்கலாம். இது அந்த நிறுவனங்களின் விருப்பத்தினைப் பொறுத்தது.
3)மேலே குறிப்பிட்டவற்றை ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு மேலும் ஓர் ஆண்டு காலக் கெடு நீட்டிக்கப்படும். அதன் பின்னரும் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றாத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
உரிமமும் அலைவரிசை ஒதுக்கீடும் பெற்ற நிறுவனங்கள் எப்போது மக்களுக்கு அவற்றைப் பயன்பாட்டிற்குத் தரப்போகின்றன என்பதே இப்போதைய கேள்விக் குறி. பல நிறுவனங்களிடையே போட்டி இருப்பதால், விரைவில் மக்களிடம் இந்த நிறுவனங்கள் வருவார்கள் என்பது உறுதி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
poygainathan - Aranthangi,இந்தியா
26-செப்-201012:07:57 IST Report Abuse
poygainathan விலை வாசியை கட்டுப் படுத்தாமல் ஆரசு பணியாளர்களுக்கு மட்டும் சம்பளத்தை உஅர்டுவது நல்லதல்ல. பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைபதுதான் நல்ல ஆரசாங்கம்.
Rate this:
Share this comment
Cancel
காளிமுத்து.ம - madurai,இந்தியா
26-செப்-201000:14:01 IST Report Abuse
காளிமுத்து.ம எதற்கு அரசு ஊழியர்களின் சம்பளத்தை கூட்டியது. அதற்கு பதிலாக விலை வாசிகளை கட்டுபடுத்தி இருக்கலாமே. இது மக்களை ஏமாற்றும் செயலகதான் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் மக்களை முட்டாளாக்குக்கிறது இந்த அரசு , மக்கள் விழித்துக்கொண்டால் இனியாவது தமிழகத்தை காப்பாற்றலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X