தொடரும் கிறிபிடோ லாக்கர் கொள்ளை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2013
00:00

சென்ற இதழில், கிறிப்டோலாக்கர் என்னும் வைரஸ் மூலம், எப்படி சில ஹேக்கர்கள், கம்ப்யூட்டர்களைத் தங்கள் பிடிக்குள் வளைத்துப் போட்டு, பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடிக்கின்றனர் என்று எழுதி இருந்தோம்.
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்த வைரஸை, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வைரஸ் மூலம், பிட் காய்ன் வழி பணம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகப்படுவர்களின் தன்மைக்கு ஏற்ப, 100 டாலர் முதல் பல ஆயிரம் டாலர் வரை பணம் கேட்டு மிரட்டல் வருவதாக அறியப்பட்டுள்ளது.
'Malware Must Die' என்ற வைரஸுக்கு எதிரான கம்ப்யூட்டர் பாதுகாப்பு குழுதான், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிறிப்டோலாக்கர் வைரஸ் இலக்கு வைத்திடும், பல டொமைன்களை, இந்த அமைப்பு செயல் இழக்கச் செய்தது. இருப்பினும், கிறிப்டோலாக்கரின் செயல்பாடு நின்றபாடில்லை.
பாதிப்புக்குள்ளான கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்த இந்த அமைப்பு, எப்படியும், இதனை முழுமையாக மடக்கிவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வீடுகளிலும், நிறுவனங்களிலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர், இந்த வைரஸிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, 'Malware Must Die' பரிந்துரைத்துள்ளது.
1. உங்கள் டேட்டா பைல்களை உடனுடக்குடன் பேக் அப் எடுத்து வைக்கவும். அப்போதுதான், உங்கள் பைல் திருடப்பட்டு, சுருக்கப்பட்டுள்ளது. விரித்துக் காண்பதற்கான கீயைப் பெற பணம் செலுத்து என இந்த வைரஸை ஏவிவிடுபவர்கள் கூற முடியாது.
2. மின் அஞ்சல்களைத் திறந்து பார்க்கையில் கவனமாக இருக்கவும். பெரும்பாலான கிறிப்டோலாக்கரின் செயல்பாடு, இமெயிலுடன் வந்த இணைப்பு பைல் வழியாகவே பரவி வந்துள்ளது.
இந்த வைரஸ் தானாக, எந்த பைலையும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதில்லை. நீங்கள் உங்களை அறியாமல் மாட்டிக் கொண்டு, இன்ஸ்டால் செய்திடும் பைல்கள் வழியேதான் இது வருகிறது. எனவே நாம் முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருந்தால், கிறிப்டோலாக்கரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு கீழே தரப்பட்டுள்ள தளத்தினைக் காணவும்.
http://www.theregister.co.uk/2013/12/06/cryptolocker_takedown_fizzles/

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X