பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2013
00:00

பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்பாடு குறித்த வரைபடத் தினைப் பார்க்கையில், என்ன சொன்னாலும், மக்களை எக்ஸ்பியிலிருந்து பிரிக்க முடியாது என்பது தீர்க்கமாகத் தெரிகிறது. வரும் ஏப்ரலுக்குப் பின்னரே இதனால் ஏற்படும் விளைவுகள் தெரிய வரும். நிச்சயமாக, மாறாதவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள் என்பது உறுதி.
டி. சுப்புராஜ், கல்லுப்பட்டி.

புல்லட் எண் பார்மட் என்பது எனக்கு புதிய செய்தியாக உள்ளது. எப்படி இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தேன் என வியப்பாகவும் உள்ளது. தொடர்ந்து எம்.எஸ். ஆபீஸ் வேர்ட், எக்ஸெல், பவர் பாய்ண்ட் குறித்த டிப்ஸ்களை எதிர்பார்க்கிறேன்.
சி. பாக்யராஜ், மதுரை.

முதலில் ஒரு வாரம் முன்பு முடிவில்லா யுத்தம் என்று மால்வேர்களுடனான நம் போராட்டத்தினை விளக்கமாக அளித்தீர்கள். அடுத்து, இந்த வாரம், வரும் ஆண்டில்,எந்த வகையில் இந்த மால்வேர் புரோகிராம்கள் இயங்கி நம்மை சிரமப்படுத்தும் என தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள். நாம் எப்படி பாதுகாப்பாக இயங்க வேண்டும் என்ற அறிவுரைகளும் சிறப்பாக உள்ளன. நன்றி.
ஆ.சி.மகாதேவன், மதுரை.

ஒரு காலத்தில் எந்த தகவலுக்கும் என்கார்டா சிடியைத்தான் பயன்படுத்தி வந்தோம். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது நின்று போய்விட்டது என்ற செய்தி, தங்களின் கட்டுரையைப் படித்த பின்னரே தெரிந்துகொண்டேன். தகவலுக்கு நன்றி.
எஸ்.கமலா பாக்யநாதன், கோவை.

மைக்ரோசாப்ட் கூட தன் சாப்ட்வேர் திட்டங்களைக் கைவிட வேண்டியதிருந்தது என்ற தகவல்நம்ப இயலாத அளவிற்கு உள்ளது. நீங்கள் எடுத்துக் கூறிய சூழ்நிலைகள், சாப்ட்வேர் உலகின் நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகிறது.
ஆர். சிவபாக்கியம், பொள்ளாச்சி.

கிறிப்டோலாக்கர் வைரஸ் இவ்வளவு கொடியதா? நம்மிடம், அடுத்தவருக்குத் தெரியாமல், காவல் துறையும் அறியாமல், பணம் பறிக்க முடியும் என்றால், நாம் என்னதான் செய்வது? என்ற கவலைதான் ஏற்படுகிறது. தினந்தோறும் பேக் அப் எடுப்பதுதான் சிறந்த தப்பிக்கும் வழியாகத் தெரிகிறது. தொடர்ந்து இந்த வைரஸ் குறித்த தகவல்களை அப்டேட் செய்து கொண்டிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்.சாமுவேல் விக்டர், சென்னை.

விண்டோஸ் 8 குறித்த தொடல் அசைவுகள், வாசகர்களிடையே டச் ஸ்கிரீன் கொண்ட கம்ப்யூட்டர் வாங்குவதற்கான ஆசையைத் தூண்டுகிறது. தொடர்ந்து வாரா வாரம், விண்டோஸ் 8 குறித்த டிப்ஸ் மற்றும் தகவல்களைத் தரவும்.
ச. இளந்தமிழன், பழநி.

கூகுள் ட்ரைவில் இவ்வளவு வசதிகள் தரப்படுகின்றனவா? ஏதோ, இணையத்தில் ஒரு சேமிக்கும் இடம் மட்டுமே என்று எண்ணி இருந்தேன். விளக்கமான கட்டுரைக்கு நன்றி. எழுதியவருக்கு பாராட்டுக்கள். நல்லதொரு பாடக் கட்டுரையாக உள்ளது.
பேரா. டி. சாருலதா, திருப்பூர்.

கூகுள் ட்ரைவ் சிறப்பு வசதிகளில், வண்ணங்களில் போல்டர்களை அமைப்பது, என்னை மிகவும் கவர்ந்தது. உடனே அமைத்தேன். பல காலம் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தினாலும், நீங்கள் தந்துள்ள டிப்ஸ் அனைத்தும் புதுமையானதாகவே உள்ளன.
எஸ். யஷ்வந்த் குமார், சென்னை.

எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா சார்ட்டிங் பணியில் நாங்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகளின் தன்மையை விளக்கி, தீர்வுகளையும் தந்தது நல்ல பயன் தருகிறது.
பா. ஸ்ரீதர் ராஜன், திண்டுக்கல்.

இன்ஸ்டண்ட் மெசேஜ் பிரிவில், வாட்ஸ் அப் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், கூகுள் போல புதிய வசதிகளை அவ்வப்போது பயனாளர்களுக்கு அப்டேட் செய்து தராமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.
எஸ். கல்யாணி, காரைக்கால்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X