எக்ஸ்பி சிஸ்டத்திற்கு சப்போர்ட் வழங்க சீனா வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2013
00:00

விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தான் வழங்கி வரும் அனைத்து தொழில் நுட்ப உதவிகளையும், வரும் ஏப்ரல் 8 முதல் நிறுத்த இருப்பதாகப் பல மாதங்களாக மைக்ரோசாப்ட் எச்சரித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக, இதனைப் பயன்படுத்திக் கொண்டு வரும் அனைவரும், விண்டோஸ்7 அல்லது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
ஆனால், சீன அரசாங்கம், மைக்ரோசாப்ட் தொடர்ந்து விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு தொழில் நுட்ப ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கட்டாயப்படுத்தி வருகிறது. சீனக் குடியரசின், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மற்றும் பெரும்பாலான பயனாளர்களாலும், சீனாவில், விண்டோஸ் எக்ஸ்பி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. StatCounter என்னும் அமைப்பு இது குறித்து எடுத்த கணக்கெடுப்பில், சீனாவில் இயங்கும் கம்ப்யூட்டர்களில் 50.48 சதவீதப் பங்கினை விண்டோஸ் எக்ஸ்பி கொண்டுள்ளது. இது சென்ற ஆண்டில் 63.68 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, கட்டணம் செலுத்திப் பெற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் எண்ணிக்கை ஆகும். கட்டணம் செலுத்தாமல், நகல் எடுத்துப் பயன்படுத்தப் படும் கம்ப்யூட்டர்கள், சீனாவில் இன்னும் அதிகமாக உள்ளன.
சென்ற ஆண்டில், சீன அரசு 16 கோடி டாலர் செலவில், தன் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தையும், உரிமம் பெற்றதாக நெறிமுறைப் படுத்தியது. இந்த அளவிற்கு செலவு செய்ததனால், மேலும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு செலவு செய்திட சீன அரசு தயங்குகிறது. அதனாலேயே, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, எக்ஸ்பி சிஸ்டத்திற்கான தொழில் நுட்ப ரீதியான ஆதரவினை இன்னும் சில காலம் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை மைக்ரோசாப்ட் ஏற்று நடத்த முன்வரும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், எக்ஸ்பிக்கான இலவச தொழில் நுட்ப உதவி தான் நிறுத்தப்படுகிறது. நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் கேட்டுக் கொண்டால், அதற்குரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, உதவி அளிக்க மைக்ரோசாப்ட் ஒத்துக் கொள்ளும். இதற்கான கட்டணம் சற்று அதிகம் என்பதுடன், ஆண்டுதோறும் கட்டணம் செலுத்திப் புதுப்பிப்பதாகவே இது இருக்கும்.
தற்போது, சீனாவில் விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்களின் பயன்பாட்டு பங்கு 3.48 சதவீதமாகவே உள்ளது. பன்னாட்டளவில் இது 9.3 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், விண்டோஸ் 7 பயன்பாடு சென்ற ஓராண்டில், 31.2 சதவீதத்திலிருந்து 40.24 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதுவும் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
சீனாவில் விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன்பாடு குறைவாக இருப்பதற்குச் சில விநோதமான, சீனாவுக்கே உரிய காரணங்கள் பல உள்ளன. சீனாவில் எந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனையும், கட்டணம் செலுத்தாமல், நகல் எடுத்துப் பயன்படுத்துவது பரவலாக மக்களிடையே உள்ளது. எனவே, மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 8. மற்றும் 8.1 சிஸ்டத்தினை, சீனாவில் உள்ள கடைகளில் விற்பனை செய்வது இல்லை. கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் வழியாகவே வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். அல்லது இணையத்தில் கட்டணம் செலுத்தி, தரவிறக்கம் செய்து, பயன்படுத்துவதற்கான உரிமத்தினைப் பெற வேண்டும். சாப்ட்வேர் பைரசியை அறவே நீக்கிட, மைக்ரோசாப்ட் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சீன மக்களிடம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எப்படி மக்களிடம் பிரபலப்படுத்துவது எனத் தெரியவில்லை. அங்கு விளம்பரத்திற்கெனப் பயன்படுத்தப்படும் வீடியோ காட்சிகள், எதிர்பார்க்கப்படும் விளைவினை ஏற்படுத்தவில்லை. ஆனால், அமெரிக்காவிலும் மற்ற ஆசிய நாடுகளிலும், இந்த விளம்பரக் காட்சிகள் நல்ல விளைவினை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
இருப்பினும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து தன் முயற்சிகளை சீனாவில் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X