விண்டோஸ் 8.1 டிப்ஸ் - புதிய பைல் ஹிஸ்டரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2013
00:00

விண்டோஸ் 8.1 கொண்டிருக்கும் ஒரு புதிய கூடுதல் வசதி அதன் File History ஆகும். இதனை இயக்கிவிட்டால், நம் பைல்களின் திருத்தப்பட்ட பதிப்பிற்கு முன்னர் உள்ள வடிவினை, இந்த வசதி சேமித்து வைக்கிறது. இது பேக் அப் வசதிக்கு ஈடானதல்ல. ஆனாலும், இது நம் டாகுமெண்ட், போட்டோ, மியூசிக் மற்றும் வீடியோ பைல்களை சேவ் செய்து பாதுகாக்கிறது. இதனை எப்படி இயக்கிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
மெட்ரோ அல்லது மாடர்ன் ஸ்கிரீனில் Control panel என டைப் செய்திடவும். அல்லது Search Charm திறந்து அதில் இதனை டைப் செய்திடவும். இவற்றில் கிடைக்கும் முடிவுகளின் உதவியுடன், கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். இதில் Save backup copies of your files with File History என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், Select drive சென்று, உங்கள் பைல்களை சேவ் செய்திட, வேறொரு ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். Exclude folders என்ற வசதியைத் தேர்ந்தெடுத்து, எந்த ட்ரைவில் இவற்றை சேவ் செய்திட வேண்டாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம்.
இந்த விண்டோவில் Advanced settings என்பதில் சென்றால், மேலும் பல வசதிகளை செட் செய்திடலாம். இந்த வகை பேக் அப் வசதியை மேற்கொள்ளும் காலத்தினை செட் செய்திடலாம். நேரத்தினையும் செட் செய்திடலாம். ஒவ்வொரு நாளும், பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த வகை பேக் அப் வசதியினை மேற்கொள்ளுமாறு கட்டளை இடலாம்.
இவ்வாறு சேவ் செய்யப்பட்ட பைல் பதிப்பு, எத்தனை நாட்களுக்கு ட்ரைவில் இருக்க வேண்டும் எனவும் செட் செய்திடலாம்.
இவ்வாறு சேவ் செய்வது எதற்காக? நாம் பைல் ஒன்றைத் திருத்திய பின்னர், பழைய டேட்டா என்ன என்று அறிய முற்படுவோம். அல்லது, முன்பு இருந்த டெக்ஸ்ட் மிகச் சரியாக இருந்தது. அதனையே வைத்துக் கொள்ளாலம் என உணர்வோம். அந்தச் சூழ்நிலையில் இவ்வாறு சேவ் செய்யப்பட்ட பைல் பதிப்பினைப் பெற்று பயன்படுத்தலாம்.
பழைய பைல் பதிப்பு தேவை எனில், search charm சென்று, Restore your files என டைப் செய்திடவும். பின்னர், Restore your files with File History என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில், நீங்கள் மீட்க விரும்பும், பைலின் பெயரைத் தேர்ந்தெடுத்து, சேவ் செய்யப்பட்ட பைல் பதிப்பை மீண்டும் பெறலாம். இவ்வாறு பெறும் நிலையில், உங்களுக்குத் திருத்தப்பட்ட, அண்மைய பதிப்பு வேண்டுமா அல்லது பழைய பதிப்பு வேண்டுமா என்பதனை முடிவு செய்து தேர்ந்தெடுக்கலாம். அல்லது இரண்டும் இருக்கட்டும் எனவும் முடிவு செய்திடலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X