எக்ஸெல் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2013
00:00

எக்ஸெல் பயனுள்ள ஷார்ட் கட் கீகள்:
காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl + Shft + O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No Cells found என்ற செய்தி கிடைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL + [ அழுத்தவும்.
Ctrl + ] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft + Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl + Shft + Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft +Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl + Shft + Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl + Shft + End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

நாள், மாதம் மற்றும் ஆண்டு:
எக்ஸெல் தொகுப்பில் நம் பழக்கத்திற்கேற்ப இந்த நாள், மாதம் மற்றும் வருடத்தின் எண்ணைத் தோன்றச் செய்திடலாம். இதனை எவ்வாறு செட் செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் எந்த செல்களில் தேதி அமைய வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format மெனு சென்று அதில் Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + 1 அல்லது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells தேர்ந்தெடுக்கலாம். பின் கிடைக்கும் பார்மட் செல்ஸ் டயலாக் விண்டோவில் Number டேபினைக் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் இடது பக்கம் கேடகிரி என்பதன் கீழாக Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Type என்பதில் பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் தேதி மற்றும் ஆண்டினை அமைக்கும் வகையைக் காணலாம். அவை என்னவென்று இங்கு பட்டியலிடலாம்.

தேதி வகைகள்:
d என்பது ஒரு நாளின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
dd என்பது நாளின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
ddd என்பது நாளினைச் சுருக்கித் தரும் (M on, Tue ....)
dddd என்பது நாளினை அதன் முழு பெயரில் தரும் ((Monday, Tuesday, etc).

மாதத்திற்கான குறிப்புகள்:
m என்பது ஒரு மாதத்தின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
mm என்பது மாதத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
mmm என்பது மாதத்தினைச் சுருக்கித் தரும் (Jan, Feb,....)
mmmm என்பது மாதத்தினை அதன் முழு பெயரில் தரும் (January, February etc).
mmmmm என்பது மாதத்தின் முதல் எழுத்தினைத் தரும் (J, F, M, A,)

ஆண்டுக்கான குறிப்புகள்
yy என்பது வருடத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (13,14,12)
yyyy என்பது வருடத்தின் எண்ணை நான்கு இலக்கங்களில் தரும் (2012, 2013, 2014)

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X