வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2013
00:00

புதிய முறையில் வேர்ட் செலக்ஷன்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை எடிட் செய்திடுகையில், வேர்ட் புரோகிராம், நாம் என்ன செய்திடப் போகிறோம் என உணர்ந்து, நாம் முடிக்கும் முன்னர் தானே அதனை மேற்கொள்கிறது. பல வேளைகளில் இது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் ஒன்றில், சொல் ஒன்றின் நடுப்பகுதியிலிருந்து இன்னொரு சொல் ஒன்றின் நடுப் பகுதி வரை நாம் தேர்ந்தெடுக்க விரும்புவோம். கர்சரை சொல்லின் நடுவே கிளிக் செய்து அப்படியே இழுத்தோம் என்றால், வேர்ட் புரோகிராம், நாம் முழு சொல்லினையும் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம் என எடுத்துக் கொண்டு, சொல் முழுவதையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டுமாயின், கீழே தந்துள்ளபடி செட் செய்திட வேண்டும்.
1. முதலில் வேர்ட் ஆப்ஷன் டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். இதற்கு வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, வேர்ட் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனின் பைல் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இங்கு ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.
2. திரைக் காட்சியின் இடது பக்கத்தில், Advanced என இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. இதில் கிடைக்கும் Editing Options பிரிவில் When Selecting, Automatically Select Entire Word check box என்று இருப்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை நீக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டேக்ஸ் ஸ்பேஸ்/டெலீட் கீகள் பயன்பாடு: வேர்டில் அட்டவணை ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். இதில் செல்கள், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை முற்றிலுமாக அழிக்க என்ன செய்கிறீர்கள்? அழிக்க வேண்டியதைத் தேர்ந்தெடுத்த பின்னர் டெலீட் கீயினை அழுத்துகிறீர்களா? என்ன நடக்கிறது? அழிய மறுக்கிறதா? இதற்குத்தான் மெனு வழி இருக்கிறதே. டேபிள் தேர்ந்தெடுத்து எந்த வகை வரிசையோ அதனைத் தேர்ந்தெடுத்து டெலீட் கொடுத்தால்தான் அழிந்துவிடுமே என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. ஆனால் இத்தனை படிகள் தாண்டவேண்டுமே என இன்னொருவர் கூறுவதும் கேட்கிறது. இதற்கு மாற்று கீயாக (மருந்தாக) இன்னொரு கீ உள்ளது. அதுதான் பேக் ஸ்பேஸ் கீ. தேவையான வரிசைகளைத் தேர்ந்தெடுத்து பேக் ஸ்பேஸ் கீ அழுத்தினால் வரிசைகள் நீக்கப்படும். டேட்டா முதற்கொண்டு அனைத்தும் அழிந்துவிடும்

வேர்டில் - ஷார்ட் கட் கீகள்:
Shift + F3: தேர்ந்தெடுத்த சொல்லை சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்து மற்றும் அனைத்தும் பெரிய எழுத்து என மாற்றி மாற்றி அமைத்திடும்.
F4: இறுதியாக நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டினைத் திரும்பச் செயல்படுத்தும். இது தேடுதல், டைப்பிங், பார்மட்டிங், கலரிங் என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
Shift + F4: இறுதியாகக் கொடுத்த Find கட்டளையை மீண்டும் செயல்படுத்தும்.
Shift + F5: டாகுமெண்ட்டில் இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்திற்த் தாவிச் செல்லும். தொடர்ந்து அப்படியே மூன்று அல்லது நான்கு எடிட் செய்த இடங்களுக்குச் செல்லும்.
Ctrl + F6: வேர்ட் விண்டோக்களுக்கு இடையே தாவிச் செல்லும்.
Alt + F6: டாகுமெண்ட் மற்றும் டயலாக் பாக்ஸ்களுக்கு (பைண்ட் டயலாக் பாக்ஸ்) இடையே தாவிச் செல்லும்.
F7: ஸ்பெல் செக்கரை இயக்கும்.
Shift + F7: தெசாரஸை இயக்கும்.
F8: செலக்ஷன் பகுதியை இயக்கும். எதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களோ அதன் அளவைப் பெருக்கும். (சொல், வாக்கியம், பாரா அல்லது முழு டாகுமென்ட்)
Alt + click: பக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள சொல் சார்ந்த தகவல் கட்டத்தினைத் திறக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X