புதிய வைரஸ் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா  போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.   “Here You Have”  என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், இந்த சொற்களை சப்ஜெக்ட் பெட்டியில் கொண்டு வரும் இமெயில்கள் மூலம் பரவுகிறது. உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும், மின்னஞ்சல் கடிதமாக இது இன் பாக்ஸை வந்தடைகிறது. அதில் "நீங்கள் கேட்ட பாலியல் பட பைல் இதோ இங்குள்ளது' என்று ஒரு பிடிஎப் பைலுக்கு லிங்க் தருகிறது. இது பிடிஎப் பைலே அல்ல.   .scr.   என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு கோப்பு. விண்டோஸ் ஸ்கிரிப்ட் அடங்கிய வைரஸ் கோப்பு.
இது  CSRSS.EXE  என்னும் கோப்பினை உங்கள் விண்டோஸ் டைரக்டரியில் பதிக்கிறது. இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கோப்பின் இயக்கத்தை நிறுத்துகிறது. இது ஒரு பாட்நெட் வகை வைரஸ். ஆனால் பழைய நிம்டா, அன்னா கோர்னிகோவா (2001 ஆம் ஆண்டு)  மற்றும் மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகிறது.  ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இந்த வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் வந்து இறங்குகிறது. அடுத்து உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள அனைத்து முகவரிக்கும் இதே போல ஒரு செய்தியை அனுப்புகிறது. இது கடந்த செப்டம்பர் 10 முதல் உலகெங்கும் பரவி வருகிறது.   தேடுதல் தளங்களில் தேடப்பட்ட தகவல்களில் இந்த தகவல் தான் இரண்டாம் இடம் கொண்டிருந்தது. SANS Technology Institute  என்ற நிறுவனத்தின் இன்டர்நெட் கண்காணிப்பு பிரிவு, இந்த இமெயில் டன் கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மெக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து முழுமையாக அறிய சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தன் இமெயில் சர்வர்களை எல்லாம் மூடிவிட்டது.
இந்த வைரஸை அனுப்பிய சர்வர் மூடப்பட்டுவிட்டது. அதிலிருந்து இந்த வைரஸ் கோப்பு எடுக்கப் பட்டிருக்கலாம். ஆனாலும், ஏற்கனவே பரவிய கம்ப்யூட்டர்களிலிருந்து இந்த வைரஸ் இன்னும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.  
இதிலிருந்து எப்படி தப்பிப்பது?
நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை பதிந்து இயக்குங்கள். ஏற்கனவே பதிந்திருந்தால், உடனே அப்டேட் செய்திடவும்.  இமெயில் இணைப்புகள் எது வந்தாலும் திறப்பதற்காக முயற்சி எடுக்க வேண்டாம். அனுப்பியவருக்கு தனி இமெயில் அனுப்பி, அனுப்பியதை உறுதி செய்து கொண்டு பின் திறக்கவும். “Here you Have”  அல்லது “Just For You”  என்று இருந்தால் எந்த சலனமும் இல்லாமல், முற்றிலுமாக அழித்துவிடவும்.   இந்த வைரஸ், நார்டன்/சைமாண்டெக் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளால் பாதுகாக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் பரவ முடியவில்லை என்று ஒரு செய்தியும் வந்துள்ளது.
இருப்பினும் இமெயில்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
devaraj - coimbatore,இந்தியா
23-செப்-201013:50:18 IST Report Abuse
devaraj reading computer malar vearsion was difficult now
Rate this:
Share this comment
Cancel
சிவம்சுப்ரமனியன் - Aruppukotai,இந்தியா
20-செப்-201023:00:13 IST Report Abuse
சிவம்சுப்ரமனியன் நான் எனது மகளுக்கு வரன் தேடும் முகமாக பாரத் மேட்ரிமோனியலில் பதிவு செய்திருந்தேன். இன்று மெய்லை திறந்த உடன் here you have personnal message என்று மெயில் வந்திருந்தது. உடன் மொசில்லா popup blocked என செய்தி கொடுத்தது. எனக்கு சந்தேகம். உடனே நான் செய்தது என்னவென்றால், தினமலர் கம்புட்டர் மலரை பார்த்ததுதான். நான் நினைத்தது மாதிரியே கம்ப்யூட்டர் மலரில் here you have வைரஸ் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. உடன் அந்த மெய்லை அழித்துவிட்டேன். எனது கம்ப்யூட்டர் ஐ காப்பாற்றிய தினமலர் வாழ்க, வளர்க தினமலர் கம்ப்யூட்டர் மலர் பணி.
Rate this:
Share this comment
Cancel
20-செப்-201020:39:56 IST Report Abuse
கந்தசாமி ஜெயதேவா தாஸ் இந்த கருமாந்திரம் புடிச்ச மைக்ரோசாப்ட் விண்டோசை தூக்கி குப்பையில போட்டுட்டு லினக்ஸ் பயன் படுத்துன்கப்பா. எந்த வெண்டைக்கா வரசும் நுழைய முடியாது. லினக்ச்னா வெறும் கம்மெண்டு அடிக்கனும்னு நினைக்காதீங்க. உபுண்டு [Ubuntu/Linux Mint ] பயன்படுத்திப்பாருங்க, அற்புதமா இருக்கு, எனக்கும் லினக்ஸ் தெரியாது, ஆனாலும் இப்ப நானாகவே இன்ஸ்டால் பண்ணி பயன் படுத்தறேன், ஒரு கஷ்டமும் இல்ல. முயன்று பாருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X