நாமாக ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனிங் செய்திடலாமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2014
00:00

கம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பதிந்து கொண்டு செயல்படுத்துவது என்பது முக்கியமான ஒரு பாதுகாப்பு வளையமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணையத்தில் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் அதிக எண்ணிக்கையில் கிடைப்பதால், அனைவருமே இந்த தொகுப்புகளைப் பயன்படுத்துகிறோம்.
ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள், நாம் கம்ப்யூட்டரை இயக்கும்போதே, தாங்களும் இயங்கத் தொடங்குகின்றன. இணையத் தொடர்பின் போது, கம்ப்யூட்டருக்குள் வரும் மால்வேர், வைரஸ் போன்றவற்றைக் கண்காணிக்கின்றன. ஏதேனும் தென்பட்டால், உடனே நமக்கு அறிவிக்கின்றன. நாம் அமைக்கும் அமைப்பின் அடிப்படையில், அவற்றை நம்மிடம் கேட்டு அழிக்கின்றன. அல்லது நீக்கிவிட்டு தெரியப்படுத்துகின்றன.
இது போல இயக்கம் இருக்கும் சூழ்நிலையில், நாமாக நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை, ஆண்ட்டி வைரஸ் கொண்டு ஸ்கேன் சோதனை செய்திட வேண்டுமா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்ட பின்னரே, ஒரு சிலர், ""ஆம், எதற்காக நாம் வேறு கூடுதலாக இந்த ஸ்கேன் சோதனையை மேற்கொள்ள வேண்டும்? இதில் அதிக நேரம் வேறு செலவாகிறதே'' என்று எண்ணுகின்றனர். ஒரு சிலரோ, கட்டாயம் நாமும் ஸ்கேன் செய்து, வைரஸ் அல்லது மால்வேர் இருக்கிறதா என அறிந்து கொண்டு அதற்கேற்ற நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என உறுதியாக நம்புகின்றனர்.
இந்தக் குழப்பத்திற்கான தீர்வு என்ன? இங்கு காணலாம்.
உங்களுடைய ஆண்ட்டி வைரஸ், கம்ப்யூட்டர் இயங்குகையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. மோசமான விளைவுகளைத் தரும் இயக்கத்தினைக் கண்காணித்துத் தடுத்துக் கொண்டு தான் உள்ளது. நாம் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், தன்னிடம் ஏற்கனவே உள்ள வைரஸ்களின் தன்மை அடிப்படையில், அதனைச் சோதனையிட்டு, அனு மதிக்கிறது. எனவே, நாம் ஸ்கேன் செய்திடாமலேயே, இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயல்பாட்டினை ஆங்கிலத் தில் பலவாறு அழைக்கின்றனர் --- background scanning, realtime protection, resident protection, ondemand scanning, மற்றும் சில பெயர்களில். எனவே, ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சோதனை செய்தவற்றை நாம் மீண்டும் ஒருமுறை சோதனை செய்திடத் தேவையில்லை.
அது மட்டுமின்றி, பல ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் தாங்களாகவே, சிஸ்டம் பைல்கள்களை வாரம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட கால அளவில் ஸ்கேன் செய்திடும் வகையில் செட்டிங்ஸ் அமைத்து இயங்குகின்றன.
அப்படியானால், நாமாக எந்த வேளைகளில் ஸ்கேன் செய்திட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், சில வேளைகளில், நாமாக ஸ்கேன் செய்திடும் பணியும் நமக்கு உதவுகிறது. அத்தகைய நிலைகளாகக் கீழே குறிப்பிட்டவற்றைக் கருதலாம்.
1. ஆண்ட்டி வைரஸ் இன்ஸ்டால் செய்திடுகையில்: நீங்கள் முதன் முதலில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், பதிவது முடிந்தவுடன், அது தானாக, கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. இதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டர் எந்தவிதமான வைரஸ் புரோகிராம்களையும் கொண்டிருக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கிறது. இருப்பினும், இந்த பைல்களை நீங்கள் பின்னர் இயக்குகையில், அப்போதும் அவற்றை ஸ்கேன் செய்கிறது.
2.செயலற்று இருக்கும் மால்வேர் புரோகிராம் சோதனை: ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் "definition files,” என்னும் ஒரு தொழில் நுட்பத்தினைத் தங்கள் சோதனைகளில் கையாள்கின்றன. அனைத்து வைரஸ் இயக்கம் குறித்த குறியீடுகள் அடங்கிய பைல்கள் இவை. இவற்றை இயக்கி அதன் அடிப்படையில், கம்ப்யூட்டருக்குள் வரும் பைல்கள் மால்வேர் புரோகிராம்களா என்பது சோதனை செய்து கண்டறியப்படுகிறது. இந்த "definition files,” தொடர்ந்து அப்டேட் செய்யப்படுத்தப் படுகின்றன. இந்த சோதனையில், ஏதேனும் ஒரு மால்வேர் புரோகிராம், அது தங்கியிருக்கும் எக்ஸிகியூடபில் பைலுடன் ஒட்டிக்கொண்டு இயங்காமல் இருப்பின், ஆண்ட்டி வைரஸ் ஸ்கேன் செய்திடுகையில், அதனைக் கண்டறியும் வாய்ப்பு நழுவப்படலாம். இப்படிப்பட்ட மால்வேர் புரோகிராம்கள், நாமாக ஸ்கேன் செய்திடும்போதுதான் கண்டறியப்படும்.
3.இரண்டாவது ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை: கம்ப்யூட்டர் ஒன்றில், ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மட்டுமே இயங்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இயங்கினால், ஒன்றை ஒன்று வைரஸ் என்று அறிவித்து குழப்பத்தினை உண்டாக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு, கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டும் என எண்ணினால், ஒன்றை இயங்கா நிலையில் வைத்து, அதனை, நாமாக ஸ்கேன் செய்திடுகையில் பயன்படுத்தலாம்.
4. பின்புல இயக்க பாதுகாப்பே நல்லது: சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை, அதன் இயக்கத்தினை நிறுத்தி வைத்து, நாமாக ஸ்கேன் செய்து கண்டறியும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யக் கூடாது.
உங்கள் கம்ப்யூட்டரை நம் வீடு போல எண்ணிக் கொள்ளுங்கள். அதில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வாசலில் நிற்கும் காவலாளி போல ஆகும். அவர் உங்கள் வீட்டின் உள்ளே நுழையும் ஒவ்வொருவரையும், சோதனை செய்து, சரியானவர் என்று அவருக்கு உறுதியாகத் தெரிந்த பின்னரே, வீட்டினுள் உள்ளே விடுகிறார். அவ்வாறு இல்லாமல், உள்ளே ஒருவர் நுழைந்த பின்னரே, நாம் அவரைக் கண்காணிக்கலாம் என்றால், அல்லது நமக்கு நேரம் கிடைக்கும்போது, வீட்டைச் சுற்றி வந்து சோதனையிட்டு அறியலாம் என்றால், நாம் அறியாமல் உள்ளே வந்தவர் தன்னுடைய திருட்டு வேலையைத் தொடங்கி விடலாம் அல்லவா? எனவே, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தானாக சோதனை செய்வதனையும், ஸ்கேன் செய்வதனையும் நிறுத்தக் கூடாது. எனவே, குறிப்பிட்ட சூழ்நிலையில் நாமாக முழு சோதனை செய்வதும், எப்போதும் மேம்படுத்தப்பட்ட நிலையில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இயங்குவதுமே, நம் கம்ப்யூட்டர் பாதுகாப்பான நிலையில் இயங்குவதனை உறுதி செய்திட முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X