உயரும் இந்திய இணைய வழி வர்த்தகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2014
00:00

கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் இணைய வழி வர்த்தகம், எதிர்பார்ப்பிற்கும் மேலாக வளர்ந்து வருகிறது. இதே நிலை, வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நடந்து முடிந்த 2013 ஆம் ஆண்டில், இந்த வகை வர்த்தகம் 1,600 கோடி டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. இது பத்து ஆண்டுகள் கழித்து, 2023ல், 5,600 கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனை ASSOCHAM (The Associated Chamber of Commerce And Industry of India) என்னும் வர்த்தகக் கண்காணிப்பு உயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நுகர்வோரின் பொருள் வாங்கும் தன்மை மற்றும் விற்பனை முறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இந்த உயர்வினைக் கொண்டு வந்துள்ளன. 2013 ஆம் ஆண்டில் இந்த முன்னேற்றம் 85 சதவீதமாக இருந்தது. மொத்த சில்லரை விற்பனையில், 6.5 சதவீதம் இணையவழியில் இருந்தது. டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, அஹமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில், 3,500 வர்த்தகர்களை அணுகிக் கருத்து கேட்டு ஆய்வு செய்ததில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
ஆன்லைன் விற்பனையில், மும்பை முதலிடத்தைக் கொண்டுள்ளது. இதனை அடுத்து, டில்லி மற்றும் கொல்கத்தா நகர வாசிகள் உள்ளனர். சிலிகான் பள்ளத்தாக்கு என இந்தியாவில் அழைக்கப்படும் பெங்களூருவாசிகள், இந்த வகையில் பின் தங்கி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
இணையதளப் பயன்பாட்டின் எழுச்சி சக்தியாக இயங்கி வரும் இளைஞர்களே, இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். இணைய வழி பொருள் வாங்கியவர்களில், 90 சதவீதம் பேர் 18 முதல் 35 வயதுடையவர்களாக உள்ளனர். அடுத்த 8 சதவீதம் பேர் 36 முதல் 45 வயதுள்ளவர்களாக உள்ளனர்.
இணைய வர்த்தகத்தில், பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள் 65 சதவீதமும் மற்றவர்கள் பெண்களுமாக உள்ளனர்.
வாங்கப்பட்ட பொருட்களில் 58 சதவீதம் பரிசுப் பொருட்கள், 42 சதவீதம் புத்தகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் 41%.
ஏன் பெரும்பாலான மக்கள் இணையதளம் வழி வர்த்தகம் மேற்கொள்ளத் தயங்குகின்றனர் என்றும் இந்த ஆய்வில் கருத்தறியப்பட்டது. 25% பேர் இணையதள நிதிப் பரிமாற்றத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை என அஞ்சுகின்றனர். தங்களுடைய வங்கிக் கணக்கு, நிதி நிலை குறித்துத் தெரிவிக்க மறுக்கின்றனர். 20% பேர், பொருட்களைக் கொண்டு வந்து தருவதற்கான கட்டணம் மிக அதிகம் என எண்ணுகின்றனர். 15% பேர் தாங்கள் வாங்கிடும் பொருட்கள், சரியான நிலையில் வழங்கப்பட மாட்டாது என எண்ணுகின்றனர்.
இணிட்குஞிணிணூஞு என்னும் அமைப்பு இந்த வழியில் பல தகவல்களைக் கண்டறிந்துள்ளது. இந்தியாவில் இணையத்தில் இயங்கும் ஐந்து பேரில் மூவர், இணையவழியில் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். இதனால், இந்தியாவில், சரியான முறையில் நம்பிக்கையை மக்களிடம் வளர்த்தால், வழிமுறைகளைத் தந்தால், இணைய வழி வர்த்தகம் ஓஹோ என வளரும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இதனாலேயே, இணைய வழி வர்த்தகத்தில் முன்னணியில் இயங்கும் அமேஸான் மற்றும் அலிபாபா (Amazon and Alibaba) ஆகிய நிறுவனங்கள், இந்தியச் சந்தையைக் குறிவைத்து பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த இரு நிறுவனமும் Flipkart என்னும் இணையவர்த்தக நிறுவனத்தினை வாங்குவதற்குக் குறி வைத்துள்ளதாகச் செய்திகள் வந்தாலும், அவை வதந்தி என இந்த மூன்று நிறுவனங்களுமே மறுத்துள்ளன. இந்த போக்கு, இந்தியாவில் வளர்ந்து வரும் இணைய வர்த்தக வாய்ப்புகளையே காட்டுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X