பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2014
00:00

இதுவரை நான் டவுண்லோட் செய்தவற்றில், அதிகப் பயனுள்ளதாய் அமைந்துள்ளது நீங்கள் குறிப்பிட்ட "மினி டூல் பார்ட்டிஷன்' புரோகிராம். எத்தனை வசதிகளை, எளிதாய் இயக்கிப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடுத்துத் தந்த ஆசிரியருக்கு நன்றி.
எஸ். ஆரோக்கியராஜ், தாம்பரம்.

சிறுவர்களை இணையத் தீமைகளிலிருந்து காப்பாற்ற நீங்கள் அளித்துள்ள ஒவ்வொரு வழியும், ஒரு கட்டுரைக்குச் சமம் ஆகும். அனைத்துமே சூப்பர் குறிப்புகள்.
எஸ். உதயகுமார், பரமக்குடி

2014 ஆம் ஆண்டில் வர இருக்கும் சாதனங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் பட்டியல் மிக அருமையாகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, தொலைக் காட்சி பெட்டிகளை இணையம் விஞ்சிவிடும் என்பது நிச்சயம் நடக்க இருக்கும் செயலாகும்.
முனைவர் எம். சிந்தாமணி, சென்னை.

வரும் மாதங்களில், உலக நாடுகள் அனைத்திலும், கூகுள் கிளாஸ் நிச்சயம் பரவலான பயன்பாட்டிற்கு வரும். விலையும் மலிவாக இருக்கும். கூகுள் எப்பாடுபட்டேனும், தான் ஒரு மிஞ்சமுடியாத டிஜிட்டல் சக்தி எனக் காட்டிக் கொள்ளும்.
பேரா. எஸ். கிருஷ்ண மூர்த்தி, மதுரை.

ஒரு நொடிக்கு ஒரு கிகா பைட் டேட்டா பரிமாறும் யு.எஸ்.பி. நடைமுறைக்கு வரும் என்பது வியப்பாக இருந்தாலும், நடந்தேறும் என்றே எண்ண வேண்டியுள்ளது. 2014ல் டிஜிட்டல் உலகம் என்ற கட்டுரை எழுதியவருக்கு என் பாராட்டுக்கள்.
எஸ்.ஞானப் பிரகாசம், கோவை.

மொபைல் போன் உலகில் தனக்கென இடம் பிடிக்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் போன்கள் மூலம் இறங்குகிறது என்பது அதன் 20ஜிபி இலவச இடம் தருவதன் மூலம் உறுதியாகியுள்ளது. கூகுள் போல, இந்நிறுவனமும் வாடிக்கையாளர்களைப் பெறும்.
என். சசிதரன், தாம்பரம்.

பலவகையான "வேர்'களைப் பற்றிய தகவல்கள், மிகவும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. யூசர்வேர் என்பது குறித்த தகவல் புதிதாக இருந்தது.
என். சிவப் பிரியா, புதுச்சேரி.

சீனா போன்ற நாடு, அதன் விஸ்தீரணத்தால், எந்த வர்த்தகத்திற்கும் சவாலாகவே உள்ளது. மைக்ரோசாப்ட், எக்ஸ்பி விஷயத்தில் என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.
ஆர். பரந்தாமன், பொள்ளாச்சி.

விண்டோஸ் 8.1 பிரிவியூ மிக அருமையாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தரப்பட்டது. சோதனைத் தொகுப்பாக இருந்தாலும், நன்றாகச் செயல்பட்டது. நான் மீண்டும் விண்டோஸ் 8 மற்றும் தொடர்ந்து விண்டோஸ் 8.1 சிஸ்டங்களைப் பயன்படுத்தப் போகிறேன்.
கா. சிவப்பிரகாசம், பழனி.

கேஷ் ரெப்ரெஷ் மற்றும் வெப் கேஷ் குறித்த விளக்கமான பதில், அதன் செயல்பாட்டினை நன்றாகவே விளக்குவதாக உள்ளது. தற்காலிக ஸ்டோரேஜ் தகவல்கள், சர்வரிலிருந்து பெறப்படும் தகவல்களுடன் இணைந்து செயல்படுவது, மிக சாதுர்யமான ஒரு இயக்க மாகும்.
எஸ். மாலா பிரகாசம், சென்னை.

நீங்கள் அளித்துள்ள பதிலில் சொல்லப்பட்டிருக்கும் கூகுள் டிப்ஸ் தளம் சென்று பார்த்தேன். பல விஷயங்களில் தெளிவான வழிமுறை கிடைக்கிறது. தகவலுக்கு நன்றி.
என். பிலோமினா, காரைக்கால்.

கூகுள் வழி தேடல்களிலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்களில் முதல் இடம் பெற்றவராக நெல்சன் மண்டேலா இருந்தது, அவரின் இன ஒழிப்பு போராட்டத்திற்கு மக்களின் வரவேற்பினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
எஸ். சுரேந்தர், மதுரை.

ஜி ஸிங்க் மானிட்டர் தொழில் நுட்பம் குறித்த தகவல்கள் போதுமானதாக இல்லை.இந்த புதிய வகைமானிட்டரினால் நமக்கு என்ன பயன் என்பதை மையமாகக்கொண்டு ஒரு கட்டுரை தரவும்.
சி.கே. பாஸ்கரன், நீலாங்கரை, சென்னை.

சாப்ட்வேர் துறையில் படித்தவுடன் தங்களை உலக சாம்பியனாக எண்ணிக் கொள்பவர்களுக்கு, இது குறித்த எண்ணிக்கை குறிப்பும், கூடுதல் தகவல்களும் அவர்களைத் தரையில் நிறுத்தும். நிதர்சனமான நிலையை விளக்கமாக அளித்ததற்கு நன்றி.
என்.கிருஷ்ணன், சிவகாசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X