வேர்டில் கவனித்தீர்களா!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2014
00:00

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பணி ஆகும். ஆனால், பலர் கீழே நான் தரப்போவதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள். பொதுவாக நீங்கள் ஒரு வாக்கியத்தை முடித்து முற்றுப் புள்ளி வைத்தவுடன், அடுத்த வாக்கியத்தைத் தொடங்குகையில் முதல் சொல்லின் முதல் எழுத்து தானாகவே பெரிய எழுத்து என்று சொல்லப்படும் கேப்பிடல் லெட்டரில் தொடங்கும். ஆனால், ஒரு வாக்கியம் ஏதேனும் ஒரு எண்ணுடன் முடிந்தாலோ, அல்லது "you” என்ற சொல்லுடன் முடிந்தாலோ, அடுத்த வாக்கியம் அது போல கேப்பிடல் எழுத்துடன் தொடங்காது. (இதைப் படித்தவுடனேயே வேர்டைத் திறந்து செக் செய்திடப் போகவேண்டாம். தொடர்ந்து படிக்கவும்)
இவை இரண்டும் ஒரே மாதிரியான பிரச்னை போலத் தோற்றமளித்தாலும், இரண்டின் தன்மையும், தீர்வுகளும் வெவ்வேறானவை. அவற்றை இங்கு பார்க்கலாம். தூணித என்ற சொல்லை அடுத்து வரும் வாக்கியம் பெரிய எழுத்தில் தொடங்காததற்கு AutoCorrect ன் exclude என்ற பைலில் பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, கீழ்க்கண்டபடி செயலாற்றவும். நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். Office பட்டன் அழுத்தி Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து AutoCorrect Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. இங்கு Exceptions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து AutoCorrect Exceptions என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
5. இனி First Letter என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தனித்து இடம் பெறும் சொற்களின் பட்டியல் கிடைக்கும். இதில் "you” என்ற சொல்லைத் தேடிப் பெறவும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.
7. அடுத்து Delete என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த சொல்லுக்கான தனித்தன்மை நீக்கப்பட்டது. திறந்திருக்கும் அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடவும்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சொற்கள் அல்லது சுருக்கக் குறிகள் இடம் பெறும்போது, அடுத்த வாக்கியத்தின் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அமையாது. வழக்கமாக Mr., Ms., Dr., என்ற சுருக்கு சொற்களே இடம் பெறும். ஆனால் மேலே சொல்லப்பட்ட சொற்களும் சில இடம் பெற்றுள்ளதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
அடுத்து AutoCorrect Exceptions டயலாக் பாக்ஸை மீண்டும் பார்க்கவும். கீழாக, Automatically Add Words to List என்ற செக் பாக்ஸ் இருப்பதைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுத்தால், AutoCorrect செயல்பாடு, நீங்கள் டைப் செய்கையில் என்ன என்ன தேவைகளை விரும்புகிறீர்கள் என்பதனைக் கண்காணித்து, அவற்றிற்கேற்ப தன் பொருளடக்கத்தினை மாற்றிக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, வேர்ட் தானாக சொல் ஒன்றை மாற்றுகையில், நீங்கள் பேக் ஸ்பேஸ் பயன்படுத்தி, உங்கள் விருப்பப்படியே, சொல்லை அமைத்தால், வேர்ட் அதனை உணர்ந்து, வாக்கியத்தின் இறுதி சொல்லை அதன் நிறுத்தக் குறியுடன் இந்த பட்டியலில் அமைத்துக் கொள்ளும். இப்படித்தான், "you” என்ற சொல் இதில் இடம் பெற்றிருக்கும். வேர்ட் இது போல உங்களைக் கண்காணித்துச் செயல்பட வேண்டாம் என நீங்கள் எண்ணினால், Automatically Add Words to என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.
எண்ணுடன் ஒரு வாக்கியம் முடியும் போது ஏற்படும் பிரச்னை இன்னொரு வகையானதாகும். பழைய வேர்ட் பதிப்புகளில், எண்கள் டைப் செய்து பின்னர் புள்ளி வைத்தால், அடுத்த வாக்கியத்தில், வேர்ட் தானாக முதல் சொல்லின் முதல் எழுத்தினைப் பெரிய எழுத்தாக அமைத்து வந்தது. சில இலக்கணவாதிகள், இதனை சரி இல்லை எனக் குற்றம் சாட்டினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு எண் இறுதியில் இடம் பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்றால், அது எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இதனால், மைக்ரோசாப்ட் அதற்கேற்ற மாற்றத்தைக் கொண்டு வந்தது. எண்களும் தொடர்ந்து புள்ளியும் டைப் செய்தால், அடுத்த சொல் சிறிய எழுத்திலேயே தொடங்கியது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X