நூறு கோடி ஆண்ட்ராய்ட் சாதனங்கள் விற்பனையாகும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2014
00:00

நடப்பு ஆண்டில், ஆண்ட்ராய்ட் இயக்கம் கொண்ட சாதனங்களின் விற்பனை நூறு கோடியைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆப்பிள் ஆப்பரேட்ட்டிங் சிஸ்டம் கொண்ட சாதனங்களின் பயன்பாடு, ஆண்ட்ராய்ட் சாதனங்களைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கார்ட்னர் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அளவில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் மொபைல் போன்கள் விற்பனை 7.6% அதிகரித்து, 247 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும். இவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்.
கூகுளின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே, அதிகமாகப் பரவலாகப் பயன்படுத்தும் சிஸ்டமாக இந்த ஆண்டும் இடம் பெறும். விலை மலிவான ஸ்மார்ட் போன்களின் விற்பனை இந்த நிலைக்கு அடித்தளம் அமைக்கும். இந்த ஆண்டில், நூறு கோடி சாதனங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், 75% ஆண்ட்ராய்ட் சாதன விற்பனை வளரும் நாடுகளிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான சாதனங்களின் விற்பனையைக் கணக்கிடுகையில், விண்டோஸ் இயங்கும் சாதனங்களின் கூடுதல் 10%, ஐ.ஓ.எஸ். 29%, ஆண்ட்ராய்ட் 25.6% என இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் சிஸ்டம் மூலம் மற்ற நிறுவனங்களுடனான போட்டியில், மைக்ரோசாப்ட் இந்த ஆண்டில் தொடர்ந்து போராடும். 2012 ஆம் ஆண்டில் 34 கோடியே 63 லட்சம் சாதனங்களிலும், 2013ல், 32 கோடியே 80 லட்சம் சாதனங்களிலும் விண்டோஸ் இருந்தது. இந்த 2014ல், இது 35 கோடியே 99 லட்சமாக இருக்கும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சிஸ்டம் எதிர்பார்த்த இலக்குகளை சென்ற ஆண்டு எட்டவில்லை. மிகப் பிரமாதமாக மக்களால் விரும்பப்படும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலையில், போன் தயாரிப்பவர்களின் ஒத்துழையாமை மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பரவல், இதன் இலக்குகளைத் தகர்த்தது. ஆனால், 2013ன் இறுதி மாதங்களில், நோக்கியா தன் விண்டோஸ் போன்களின் விற்பனையில், மிகப் பிரமாதமான முன்னேற்றத்தினைக் காட்டியது.
இந்த ஆண்டில் நோக்கியாவைக் கைப்பற்றி இயக்க இருக்கும் மைக்ரோசாப்ட், இந்த நிலையைத் தொடர்ந்து உயர வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு, விண்டோஸ் போன் சிஸ்டத்தினைப் பரவலாக்கும் என கார்ட்னர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X