இந்த வார இணையதளம் விடுகதைகளுக்கு ஒரு தளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2014
00:00

விடுகதைகள் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் தன்மை உடையவை. இதற்கு நாடு, இனம், மொழி என்பது ஒரு தடை அல்ல. இணையத்தில் விடுகதைகளையும், சிரிப்பு துணுக்குகளையும் கொண்டு பல தளங்கள் உள்ளன. அவற்றில் அண்மையில் நான் பார்த்தது சற்று வேறுபாடாகத் தோன்றியது. அதனை இங்கு காணலாம். GRiN அல்லது Good Riddles Now எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த தளத்தினை http://goodriddlesnow.com என்ற முகவரியில் காணலாம்.
இந்த தளத்தில் நுழைந்தவுடன், அன்றைய விடுகதை உங்களை வரவேற்கிறது. கூடவே, அன்றைய ஜோக்கும் தரப்படுகிறது. இதே முகப்புப் பக்கத்தில், அண்மையில் இந்த தளத்தில் வெளியான விடுகதைகள் தரப்பட்டு அதற்கான விடைகளைக் காண உங்களை சிந்திக்க வைக் கிறது. தெரியாவிட்டால், அல்லது உங்களுக்குத் தெரிந்தது சரியா எனப் பார்க்க, கீழாகக் கிளிக் செய்தால், விடை கிடைக்கிறது. எடுத்துக் காட்டாக, நான் பார்த்த போது கிடைத்த விடுகதை:
கனடாவில், ஒரு விதவையின் கணவன், அவளுடைய தங்கையை திருமணம் செய்திட முடியுமா? உண்மையைச் சொல்வதென்றால், இந்த விடுகதையைக் கேட்டவர்கள், கனடா நாட்டு சட்டதிட்டங்கள் என்ன சொல்கின்றன என்று தான் கேட்டார்கள், யோசித்தார்கள். ஒருவர் மட்டுமே விதவையின் கணவன் எப்படி உயிரோடு இருக்க முடியும். கணவன் இறந்ததனால் தானே, அவள் விதவை ஆகிறாள் என்று பதில் அளித்தார். இதே போல பல விடுகதைகள் இந்த தளத்தில் உள்ளன. சில சிரிப்பினை வரவழைப்பதற்காகத் தரப்பட்டுள்ளன. உங்களின் வலது கையில் மூன்று ஆப்பிள்களும் நான்கு ஆரஞ்சுப் பழமும், இடது கையில் நான்கு ஆரஞ்சுப் பழங்களும், மூன்று ஆப்பிள்களும் இருந்தால், நீங்கள் என்ன வைத்திருப்பீர்கள்? இதற்கான விடை- பெரிய கைகளை வைத்திருப்பீர்கள்.
உங்களுடைய விடைகளை இந்த தளத்திற்கு அனுப்ப, உங்களுக்கென ஓர் அக்கவுண்ட் திறந்து பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், லாக் இன் செய்த பின்னரே பதிலை அனுப்ப முடியும்.
நீங்கள் படித்த ஜோக் அல்லது விடுகதையினை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறீர்களா? இதற்கான சமூக இணையத் தளங்களுக்கான லிங்க் கீழேயே தரப்படுகின்றன. அந்த வகையில் Facebook, Twitter, மற்றும் Google + ஆகியவற்றிற்கான லிங்க்குகள் கிடைக்கின்றன.
இதனைக் காண, படிக்க, பதில் தர ஆர்வமாக உள்ளதா? உடனே இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X