பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2014
00:00

யு.எஸ்.பி. ட்ரைவ் பயன்பாட்டில் இத்தனை வகை சிக்கல்கள் இருப்பதை, உங்கள் பதிலைப் படித்த பின்னர் புரிந்து கொண்டேன். குறிப்பாக ராம் மெமரிக்கான இடத்தை, சிஸ்டம் இதில் தேடும் என்பது புதிய தகவல். படித்திராத தகவலும் கூட.
கே. மாலா பிரகாஷ், கோவை.

ஒரு வீட்டில், ஒரு ஹாலில் இருக்கும் ஒரு குடும்பத் தினரை, டிஜிட்டல் சாதனங்கள் தனித் தனித் தீவுகளாக ஆக்கும் என்ற உண்மை மனதைச் சுடுகிறது. ஆனால் அது தான் நடந்து வருகிறது. காலம் எப்படி எல்லாம் மாறுகிறது பாருங்கள்.
எஸ். சுதர்சனம், கோவை.

பல வாரங்களுக்குப் பின், விண்டோஸ் 8 .1 குறித்த டிப்ஸ் வழங்கியுள்ளீர்கள். அனைத்தும் சோதனை செய்து, எக்ஸ்பாக்ஸ் தவிர, பயன்படுத்திப் பார்த்தேன். பல புதிய வசதிகளைக் கொண்டதாக உள்ளன.குறிப்பாக ஸ்டார்ட் ஸ்கிரீன் ஒழுங்கு படுத்துவது பயனுள்ள ஒன்று.
என். தரணி, சென்னை.

இரண்டு அப்ளிகேஷன்களை ஒரே திரையில் அமைத்து, இரண்டையும் இயக்குவது சூப்பரான ஏற்பாடு. இதற்காகவாவது, விண் 8 வைத்திருப்பவர்கள், விண் 8.1க்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
கா. பாத்திமா, கடலூர்.

வேர்டில் You மற்றும் எண்களை அடுத்து பெரிய எழுத்து தானாக வராது என்பதுவே ஒரு புதிய செய்தியாக இருந்தது. முயற்சித்தும் பார்த்த போது புதுமையாகவும் இருந்தது.எங்கிருந்துதான், இது போன்ற தகவல்கள் உங்களுக்கு கிடைக்கின்றதோ? மிக மிக நன்றி.
இரா.பழனியப்பன், காரைக்குடி.

Auto Correct Exceptions அட்டவணை சார்ந்த தகவல்கள் மிகவும் பயனுள்ள டிப்ஸாக உள்ளது. அந்த அட்டவணையில் அனைத்தையும் பொறுமையாகப் படித்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டேன். டிப்ஸ் தந்தவருக்கு நன்றி.
இல. கார்த்திகேயன், உசிலம்பட்டி.

இந்திய இன்டர்நெட் இணைப்பு வேகம் குறைவான கட்டணத்தில் அதிகம் கிடைப்பதாக இருக்க வேண்டும். நிறுவனங்கள் அதிகம் வாக்குறுதி அளித்து,குறைவான வேக இணைப்பே தருகின்றனர். இதனால், இணையம் பக்கம் செல்லும்போது பொறுமை பறந்துவிடுகிறது. தொடர்ந்து தங்கள் பத்திரிக்கையில் இது குறித்து எழுதி அரசின் கவனத்திற்குக் கொண்டுவரவும்.
டாக்டர். என். சுரேந்திரன்,மதுரை.

பிரவுசர்கள் மாற்றுகையில் நாம் நம் பேவரிட்ஸ் தள முகவரிக் குறிப்புகளை அப்படியே மாற்ற விரும்புவோம். ஆனால், பல வேளைகளில் இது சிரமமாக இருக்கும். இது குறித்த உங்கள் டிப்ஸ் இந்த வேலையை மிக எளிதாக்குகிறது.
பேரா. எம். சிற்சபேசன், கோவை.

எம் ராம் மற்றும் ஆர் ராம் குறித்த தகவல்களைப் படிக்கையில் சந்தோஷமாக இருந்தது. தொடர்ந்து கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் அதிக வேகத்தை அமைக்க இவை பயன்படும் என்பது நல்ல தகவல்.
செ. மீனாட்சி கதிரேசன், மதுரை.

தட்டச்சின் வேகத்தை அதிகப்படுத்த உதவிடும் இணைய தளம் சென்று, பயிற்சி செய்தேன். மிக நல்ல முறையில் பயிற்சி பாடங்களை அமைத்து உள்ளனர். ஆனால், ஆப் லைனில் இதனைப் பயன்படுத்தும் வகையில் ஒரு சிறிய புரோகிராம் தந்தால், நன்மை பயக்கும்.
எஸ். பிரகாஷ் சித்தார்த்தன், கோவை.

விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் இரண்டு மாதத்தில், மடியில் கட்டிய பிள்ளைப் பூச்சியாக மாறிவிடும் என்பதை, தொடர்ந்து தெளிவாக விளக்கி வருகிறீர்கள். அப்படி இருந்தும் இன்னும் பலர் எக்ஸ்பியே போதும். வைரஸ் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர். உங்கள் எச்சரிக்கைக் கட்டுரையைத் தொடரவும்.
ஆர். உமையாள், பள்ளத்தூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X