சாம்சங் கேலக்ஸி எஸ்5 பிப்ரவரி 23ல் வெளிவரலாம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஜன
2014
00:00

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த காலக்ஸி வரிசை மொபைல் போன் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், சாம்சங் பல மாற்றங்களைத் தன் போன்களின் வடிவமைப்பிலும், இயக்கத்திலும் கொண்டு வர இருப்பதாகவும், அதன் தொடக்கமாக கேலக்ஸி 5 இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனா நகரில், விரைவில் நடைபெற இருக்கும் உலக அளவிலான மொபைல் கருத்தரங்கில், Mobile World Congress (MWC) பிப்ரவரி 23 அன்று இது வெளியாகலாம் என்று பலரும் உறுதியாக எதிர்பார்க்கின்றனர். வர்த்தக ரீதியாக வரும் ஏப்ரலில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த போனின் விலை காலக்ஸி எஸ்4 விலை அளவிலேயே இருக்கும் என்று தெரிகிறது. இது இரண்டு வடிவில் அமைக்கப்படும். உலோக கவசத்துடன், உயர் ரகமாகக் கூடுதல் விலையிலும், வழக்கமான பிளாஸ்டிக்கில் அமைக்கப்பட்டு, வழக்கமான விலையிலும் இது இருக்கலாம். உலோகக் கவசத்துடன் வடிவமைக்கப்படும் எஸ் 5, சாம்சங் காலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படலாம். இதன் சிறப்பம்சங்கள் குறித்து வந்த வதந்தித் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இதன் திரை 5.25 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும். பிக்ஸெல் அளவு 2560 × 1440 ஆக இருக்கலாம். இந்த போனை வடிவமைப்பதில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்தப்படும் என்றும், அதனால், அது வளையும் தன்மையை இந்த போனின் திரைக்குக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனில் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் சாப்ட்வேர் தொகுப்பின் புதிய பதிப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும். விரல் ரேகை ஸ்கேனர் இருக்கும். கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும். ப்ராசசர் ஸ்நாப்ட்ரேகன் 800 அல்லது நியூ எக்ஸைனோஸ் ஆக இருக்கலாம். ராம் மெமரி 3 ஜிபி தரப்படும். இதன் பேட்டரி 4000 mAh திறனுடன் இருக்கும்.
இந்த போனின் மொத்த எண்ணிக்கையிலான உற்பத்தி ஜனவரியில் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X