சாம்சங் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2014
00:00

வாரந்தோறும் பல புதுமையான மொபைல் போன்களை அனைவரும் விரும்பும் வண்ணம் அறிமுகப்படுத்தி, விற்பனையில் முதல் இடத்தைத் தொடர்ந்து பன்னாட்டளவில் தக்க வைத்து வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392 என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றைச் சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் சிப், 3ஜி தொடர்பு, இரண்டு சிம் இயக்கம் ஆகியவை இதன் தனிச் சிறப்புகள் எனலாம். இதன் பரிமாணம் 121.5 x 63.1 x 10.85 மிமீ ஆகும். எடை 128.5 கிராம்.
நான்கு அங்குல அளவிலான, டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை இதில் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை-பி, வை-பி ஹாட்ஸ்பாட் தொழில் நுட்பம் மற்றும் யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை கிடைக்கின்றன.இதில் 3 எம்.பி.கேமரா மட்டும் தரப்பட்டுள்ளது. இதில் எப்.எம். ரேடியோ இல்லை. அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் இயங்குகின்றன.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ்மெயில் மற்றும் ஆர்.எஸ்.எஸ். வசதிகள் உள்ளன. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் இயங்குகின்றன. டாகுமெண்ட்வியூவர் தரப்பட்டிருப்பதால், டாகுமெண்ட்களைப் பார்த்து திருத்தவும் முடியும். இத்துடன் ஆர்கனைசர், இமேஜ் மற்றும் வீடியோ எடிட்டர், வாய்ஸ் மெமோ டயல், பிரிடெக்டிவ் டெக்ஸ்ட் அமைப்பு, கூகுள் சர்ச், மேப்ஸ், டாக்ஸ், யுட்யூப், காலண்டர், கூகுள் டாக் மற்றும் பிகாஸோ பயன்படுத்த நேரடி இணைப்புகள் கிடைக்கின்றன.
இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. இதன் கதிர்வீச்சு இயக்கம் 0.51 W/kg என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8.099.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X