இணையத்தில் கொலை கொலையா முந்திரிக்கா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2014
00:00

நீங்கள் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், உங்களைப் பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று விடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர். கொலை கொலையா முந்திரிக்கா என்று கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் எப்படி நாம் அறியாமல் நம் பின்னால், துணியைப் போட்டு, பின் நம்மைத் துரத்தி விளையாடுகிறார்களோ, அதே போல, நாம் அறியாமல் நமக்குத் தூண்டில் போட்டு, நம்மைப் பற்றிய தகவல்களைப் பெறும் இந்த இணைய விளையாட்டினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
சில வகை தகவல் சேகரிப்பு வெளிப்படையாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, இணைய தளங்களில் நீங்கள் லாக் இன் செய்திடுகையில், நீங்கள் யார் என்பதனை அது அறிந்திருக்கும். ஆனால், உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து, முழுமையான உங்கள் பெர்சனாலிட்டியை அறிந்து கொள்கின்றனர் என்பதுதான் நாம் எண்ணிப் பார்த்து, உஷாராக வேண்டிய ஒன்று.
பொதுவாக விளம்பரங்களுக்கான வலைப்பின்னல்களில், விளம்பரங்களைக் குறிவைத்து, உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவார்கள். ஏதேனும் ஒரு வர்த்தக இணைய தளத்தில் நுழைந்து, வர்த்தகம் குறித்த விளம்பரங்களை, தொடர்பு தரும் இணைய தளங்களில் பார்த்தாலும், நம்மைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படும்.
ஐ.பி. முகவரிகள்: உங்களை விரைவில் எளிதாக அடையாளம் காட்டுவது உங்கள் ஐ.பி. முகவரி தான்.இணையத்தில், உங்கள் ஐ.பி. முகவரி, உங்களை அடையாளம் காட்டுகிறது. இதிலிருந்து, மிகச் சரியான உங்கள் முகவரியை அறிய முடியாது என்றாலும், உத்தேசமாக, பூகோள ரீதியான இடத்தை அறியலாம். உங்களின் தெரு தெரியாவிட்டாலும், நகரம் அல்லது நகரத்தில் ஏரியா தெரிய வரும். இருப்பினும், ஒரே ஐ.பி. முகவரியை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் பயன்படுத்த முடியும் என்பதால், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை மட்டும் பிரித்தறிவது எளிதானதல்ல. இருந்தாலும், ஐ.பி. முகவரியை மற்ற தொழில் நுட்பத்துடன் இணைத்து, நம் இடத்தை உறுதிப் படுத்தலாம்.
எச்.டி.டி.பி. ரெபரர் (HTTP Referrer): நீங்கள் இணையத்தில், லிங்க் ஒன்றைக் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசர், நீங்கள் கிளிக் செய்த லிங்க் சார்ந்த இணைய தளத்தினைக் கொண்டுவருகிறது. இணையதள சர்வரில், நீங்கள் எங்கிருந்து தொடர்பினை ஏற்படுத்துகிறீர்கள் என்று சொல்கிறது. இந்த தகவல் HTTP referrer headerல் கிடைக்கும்.
இணையப் பக்கத்தில், அதன் தகவல்களைக் கொண்டு வருகையில், HTTP referrerம் அனுப்பப்படுகிறது. எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்று விளம்பரத்தைக் கொண்டிருந்தால், ட்ரேக் செய்திடும் ஸ்கிரிப்ட் ஒன்றை வைத்திருந்தால், உங்கள் பிரவுசர், அந்த விளம்பரதாரரிடம் அல்லது பின் தொடரும் நெட்வொர்க்கி டம், நீங்கள் எந்த பக்கங்களைப் பார்க்கிறீர்கள் என்பதனைச் சொல்கிறது.
"Web bugs” என்று அழைக்கப்படும் மிகச் சிறிய (1x1 பிக்ஸெல்) கண்ணால் பார்க்க இயலாத இமேஜ்கள் இந்த எச்.டி.டி.பி. ரெபரரைத் தனக்கு உதவியாக எடுத்துக் கொண்டு, இணைய தளத்தில் தன்னைக் காட்டாமலேயே, உங்களைப் பின் தொடரும். இதனையே பயன்படுத்தி, நீங்கள் திறந்து பார்க்கும் மின் அஞ்சல்களையும் இவை தொடர்கின்றன.
குக்கீகளும் ட்ரேக்கிங் ஸ்கிரிப்ட்களும் (Cookies & Tracking Scripts): இணைய தளங்கள் உங்கள் பிரவுசரில் ஸ்டோர் செய்து வைக்கும் சிறிய பைல்கள் குக்கீஸ் ஆகும். இவை நமக்கு நன்மை செய்பவையாகவும் உள்ளன. எடுத்துக் காட்டாக, வங்கிகளின் தளத்தில் நுழைகையில், குக்கி பைல் உங்களைப் பற்றிய தகவல்களை நினைவில் கொண்டு, நீங்கள் தரும் தகவல்களைக் கணிக்கிறது. இணைய தள செட்டிங்ஸ் மாற்றினால், அதனையும் நினைவில் கொண்டு, உங்களுக்கு உதவுகிறது.
குக்கிகள் உங்களை அடையாளம் கண்டு கொண்டு, உங்கள் இணைய உலாவினைப் பின் தொடர்ந்து கண் காணிக்கிறது. நீங்கள் பார்க்கும் இணைய தளங்கள் அனைத்தையும் பின் தொடர்ந்து, உங்கள் அனுபவம் குறித்து ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துக் கொள்கிறது. மூன்றாவது நபர்கள் நுழைத்திடும் குக்கி பைல்கள் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளூம்போது பிரச்னை வரும். இதில் நாம் வருத்தப்பட வேண்டிய விஷயம், இணைய தளங்கள் மூன்றாவது நபர் குக்கிகளைப் பதிந்து வைத்து அனுமதிப்பதுதான். இரண்டு வெவ்வேறு இணைய தளங்கள் ஒரே விளம்பரத்தைப் பயன்படுத்தினால் அல்லது நெட்வொர்க்கினைப் பின்பற்றினால், உங்கள் பிரவுசர் ஹிஸ்டரியை அவை முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளும்.
சூப்பர் குக்கீஸ் (Super Cookies): நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் சேரும் குக்கீஸ் பைல்களை அவ்வப்போது நீக்கிவிடலாம். ஆனால், அதனால் உங்கள் இணைய நடவடிக்கையினை மற்றவர்கள் பின்பற்றுவதனைத் தடுக்க முடியாது. தற்போது "super cookies” என அழைக்கப்படுபவை நிறைய உண்டு. அப்படி ஒன்று தான் எவர்குக்கி (http://samy.pl/evercookie/)ஆகும். இது ஒரு சூப்பர் குக்கி. இவை குக்கிகளுக்கான டேட்டாவினை பல இடங்களில் பதிந்து வைக்கும். பயனாளர்களைத் தனித்தனியே அடையாளம் கண்டு, தகவல்களைத் தொகுத்து வைக்கும். ஓர் இடத்தில், குக்கியை அழிப்பதன் மூலம், அது சேர்த்து வைத்த தகவல்களை நீங்கள் நீக்கிவிட்டால், அது மற்ற இடங்களில் இருந்து அவற்றை எடுத்து, சரி செய்து கொள்ளும். சூப்பர் குக்கிகள் அனைத்துமே, இழந்தவற்றை மீட்டுத் தருவதில் திறன் கொண்டவை.
யூசர் ஏஜெண்ட் (User Agent): நீங்கள் ஒவ்வொருமுறை இணையத்தை நாடும் போதும், உங்கள் பிரவுசர், ஒரு யூசர் ஏஜெண்ட்டை அனுப்பு கிறது. இது நீங்கள் பார்க்கும் இணையதளங்களிடம், உங்கள் பிரவுசர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்களைத் தருகிறது. இவற்றை சேவ் செய்து வைத்துக் கொள்வதன் மூலம், உங்களுக்கு எத்தகைய விளம்பரங்கள் தேவை என்பது கண்டறியப்படுகிறது. இந்த யூசர் ஏஜெண்ட் குறித்து கூடுதல் தகவல்களைப் பெற http://www.howtogeek.com/114937/htgexplainswhatsabrowseruseragent/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X