வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2014
00:00

விரும்பிய வகையில் டெம்ப்ளேட்: என்னதான், மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பில், குறிப்பாக, வேர்ட் தொகுப்பில், டாகுமெண்ட்களின் பார்மட் ஆகப் பல டெம்ப்ளேட்கள் கொடுக்கப்பட்டாலும், நாமே உருவாக்கும் டெம்ப்ளேட்டுகளே, நம் பயன்பாட்டிற்கு எளிமையையும், வேகமான செயல்பாட்டினையும் கொடுக்கும். பல வேளைகளில் நாம் மிகப் பொறுப்புடன் டாகுமென்ட் ஒன்றைப் பலவகையான பார்மட்டிங் வழிகளுடன் அமைத்திருப்போம். அந்த பார்மட்டிங் வழி நமக்குப் பிடித்திருப்பதுடன் அந்த வகையிலேயே மற்ற டாகுமெண்ட்களை அமைக்க விரும்புவோம். இதற்கு ஒரே வழி இதனை ஒரு டெம்ப்ளேட்டாக அமைத்து பயன்படுத்துவதுதான். இதற்கு File மெனு சென்று Save As டயலாக் பாக்ஸை வரவழைக்க வேண்டும். அந்த பாக்ஸின் கீழாக வேர்ட் டாகுமெண்ட் என அமைக்காமல் Word Template என்பதனைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு பெயரும் வழங்க வேண்டும். இப்போது இது ஒரு டெம்ப்ளேட்டாக அமைந்துவிடும். இனி இந்த வகையில் டாகுமெண்ட் அமைக்க விரும்பினால் இந்த டெம்ப்ளேட்டினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கட்டங்களின் உள்ளாக டெக்ஸ்ட் மற்றும் படம்:
பொதுவாக டாகுமெண்ட்களில், அதனைப் படிப்பவரின் கவனத்தை ஈர்க்க, அல்லது பார்மட் வேலையில் எளிதாகச் செயல்பட, கட்டங்கள் அமைத்து அதனுள்ளாக டெக்ஸ்ட், படங்கள், வரை படங்கள், கிளிப் ஆர்ட் ஆகியவற்றை அமைப்போம். அப்போதுதான், அவற்றை நாம் விருப்பப்படும் இடத்தில், இழுத்து வைத்து அமைக்க எளிதாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின் உள்ள பிரிவில் 'Display gridlines on screen' என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கைவாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்.

வேர்டிலும் தகவல்களை வகைப்படுத்தலாம்: டாகுமெண்ட்டில் உள்ள டேபிள்களில் உள்ள டேட்டாவினை, நம் விருப்பப்படி வகைப்படுத்த, அவற்றை காப்பி செய்து, எக்ஸெல் ஒர்க் ஷீட் கொண்டு சென்று, Sorting செய்வது மட்டுமே வழி அல்ல. வேர்ட் தொகுப்பி லும் இதற்கான வழி உள்ளது. வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப்படுத்தலாம்.

மெனுவும் கர்சரும்: வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X