யானைக்கும் அடி சறுக்கும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2014
00:00

கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்ப கட்டமைப்பு உலகம் அறிந்ததே. ஒவ்வொரு சர்வருக்கும் பல நகல்களைக் கொண்டு தங்கள் சர்வர்களை கூகுள் அமைத்துள்ளது. எதில் பிரச்னை என்றாலும், அது தானாகவே சரி செய்து கொள்ளும் வகையிலும் அவை அமைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், இவையும் பிரச்னைக்குள்ளாகி, செயல் இழந்து நிற்கும் சூழ்நிலை சென்ற வாரம் ஏற்பட்டது. இதன் சர்வர்கள் சென்ற ஜனவரி 24 அன்று 18 நிமிடங்கள் செயல் இழந்து நின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 க்கு இவை செயல் இழந்தன. பல கோடி வாடிக்கையாளர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் அல்லது இணைய இணைப்பில் தான் கோளாறு என எண்ணி, எதை எதையோ மாற்றி மாற்றி அமைத்தனர். ஆனால், கூகுள் நிறுவனமே தன் சர்வர்களில் பிரச்னை இருப்பதனை அறிவித்து, சில நிமிடங்கள் கழித்து லாக் இன் செய்திடச் சொல்லி அறிவிப்பு கொடுத்தது. லாக் இன் செய்தவர்களுக்கெல்லாம் "We're sorry, but your Gmail account is temporarily unavailable. We apologize for the inconvenience and suggest trying again in a few minutes.” என அறிவிப்பு வழங்கப்பட்டது. கூகுள் மெயில் மட்டுமின்றி, Calendar, Talk, Drive, Docs, Sites, Groups, Voice மற்றும் Google+ Hangouts ஆகியவற்றிலும் பிரச்னை ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக இணைய தளங்களான ட்விட்டர் மற்றும் பிறவற்றில், இது குறித்து எழுதிக் குவித்தனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தியா, பிரிட்டன், மற்றும் அமெரிக்க நாட்டு வாடிக்கையாளர்களே. தன் எதிரிக்கு இழுக்கு நேர்ந்தால், உடனே அதனைப் படம் பிடித்துக் காட்டும் மோசமான மனப்பான்மை, யாஹூக்கு இருந்தது அப்போது தெரியவந்தது. கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, தன் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது.
ஜிமெயில் சேவையில் எங்கு தொழில் நுட்ப பிரச்னை ஏற்பட்டது என்பதனைக் கண்டறிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கூகுள் தன் "App Status" dashboard ல் தெரிவித்துள்ளது.
Google + social network மற்றும் Youtube video சேவைகளும் வழக்கம் போல் இல்லாமல், மிகவும் குறைவான வேகத்திலேயே இயங்கின. ஆனால், கூகுள் இது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X