பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 பிப்
2014
00:00

ஏன் எக்ஸ்பியை விட்டு விலக வேண்டும் என்ற காரணங்கள் அடங்கிய பதில் சும்மா நச் என்று உள்ளது. அவசியம் மாறித்தான் ஆக வேண்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து எழுதி வரும் தங்களின் பொறுப்புணர்வு பாராட்டத் தக்கது.
ஆர். மஞ்சுளா மோகன், மேட்டுப் பாளையம்.

எக்ஸெல் ஸ்பெல் செக்கர் டிப்ஸ் இதுவரை நான் அறியாதது. உடனே பயன்படுத்திப் பார்த்தேன். என் ஆசிரியரிடம் பாராட்டும் வாங்கினேன். மிக்க நன்றி, சார்.
ஏ.என்.கார்த்திக், மேலூர்.

தாங்கள் தந்துள்ள ஏவி டெஸ்ட் ஆய்வு முடிவுகள் சரியாக இருக்கின்றன. இதன் இணைய தளம் சென்று பார்த்த போது, எந்த அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதுவும் தெளிவாக்கப்பட்டுள்ளது. தங்களுடைய கட்டுரையிலும் தரப்பட்டுள்ள தகவல்கள் நமக்குத் தேவையானவையாய் உள்ளன.
என்.சுதர்சனம், பழநி.

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு வரிசையில், என்னப் பொறுத்தவரை மைக்ரோசாப்ட் தரும் பிட் டிபண்டர் சேவையும் நன்றாகவே உள்ளது. சிலவற்றை அந்த புரோகிராம் தான் கண்டு பிடிக்கிறது. மேலும், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் இயங்கும்போது, இதனையும் இயங்க வைப்பது பிரச்னை எதனையும் தரவில்லை.
பேரா. டாக்டர் எஸ். செல்வகுமார், புதுச்சேரி.

அதிகம் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்களாக இடம் பெற்றவற்றைப் பார்க்கையில், எப்படி பலர் இன்னும் சோம்பேறிகளாகவும், சிறிய விஷயத்தைக் கூட மனதில் தக்க வைக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
என். ஆர். மிருதுளா கணேஷ், மதுரை.

விண்டோஸ் ஸ்டோர் புரோகிராம் பெருக்கம், எப்படி, மற்ற நிறுவனங்களுடன் அனைத்து பிரிவுகளிலும், மைக்ரோசாப்ட் போட்டியில் இறங்கி உள்ளது என்ற விபரம் தெரிகிறது. இந்த ஸ்டோர் உதவியை முன்பே மைக்ரோசாப்ட் தொடங்கி இருக்கலாம்.
என்.கமலேஷ், கோவை.

இன்றைய டிஜிட்டல் உலகில் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல், உடனடி செய்திகள் அனுப்பு வதில், முதல் இடத்தை வாட்ஸ் அப் பிடித்துள்ளது என்றால், அதனைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். மேலும் அதன் எளிமையும் வேகமான டேட்டா பரிமாற்றமுமே இதன் புகழுக்குக் காரணமாகும். நீங்கள் இது குறித்தும் தனியாக தகவல் கட்டுரை அல்லது டிப்ஸ் தரவும்.
ஆர். காந்திராஜ், பெருங்களத்தூர்.

ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர் வசதி நமக்குக் கிடைத்த பெரும் பயன்பாடு ஆகும். மின்சாரம் அடிக்கடி நிற்கும் நிலையிலும், யு.பி.எஸ். சாதனங்கள் சரியாக இயங்காத போதும், நம் டாகுமெண்ட்களைக் காக்கும் சிறந்த நண்பனாக இது இயங்குகிறது. நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி.
ஜே.பாக்யராஜ், திருப்பூர்.

இணைய வழி வங்கிக் கணக்குப் புழக்கம் என்பதனை மீண்டும் எண்ணிப்பார்க்கும் வகையில், நெவர் க்வெஸ்ட் குறித்த கட்டுரை அமைந்துள்ளது. இதனை முறியடிக்கும் வழிகள் இருந்தாலும் உடனே அவ்வப்போது தெரிவிக்கவும்.
ஆர். பாலச்சந்திரன், தேனி.

நாம் டவுண்லோட் செய்திடும் ஒவ்வொரு பைலும், வெடிக்கக் கூடிய பாம் என்று எண்ணி பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வைரஸ் டோட்டல் சேவை இதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த தளம் அமைத்துத் தருபவர்களுக்கும், தகவலைத் தந்த உங்களுக்கும் நன்றி.
எஸ். முகுந்தராஜ், காரைக்கால்.

மொபைல் போன்களை வாங்குவோருக்கு வசதியாக அனைத்து விலை நிலைகளிலும் ஒரு போன் குறித்த தகவலுக்கு நன்றி. இவற்றின் பயன்பாட்டிற்கான டிப்ஸ்களையும் அவ்வப்போது தரவும்.
ஏ. அமிர்தம், சிவகாசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X