அசுர வளர்ச்சியில் இந்திய இணையம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2014
00:00

மொபைல் போன் வழியாக இணையத்தினை அணுகுபவர்களின் எண்ணிக் கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இணைய வாடிக்கையாளர்களின் வளர்ச்சி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிற்து. வரும் 2014 ஆம் ஆண்டில், இது 24 கோடியே 30 லட்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, Internet And Mobile Association of India (IAMAI) என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.
சென்ற 2013 ஜூன் மாதத்தில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 19 கோடியாக இருந்தது எனவும், இது 2013ல் மட்டும் 49% வளர்ச்சியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ல், இந்த எண்ணிக்கை 6 கோடியே 80 லட்சமாக இருந்தது. பின்னர் 92% வளர்ச்சி மேற்கொண்டு 2013ல், 13 கோடியாக உயர்ந்தது.
மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 18 கோடியே 50 லட்சமாக, 2014 ஜூனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையம் பால் அதிக மக்கள் செல்வது தொழில் வளர்ச்சிக்கும் அதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்கும் நல்ல வழி வகுக்கும். அத்துடன், டிஜிட்டல் விளம்பர சந்தை வேகமாக உயரும். கூடவே, இணைய வழி வர்த்தகமும் அதிகமாகும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பிரிவு வர்த்தகம், சென்ற 2007 ஆம் ஆண்டில் ரூ.8,146 கோடியாக இருந்து, 2012ல் ரூ. 47,349 கோடியாக உயர்ந்தது. 2013 ஆண்டின் முடிவில் இது ரூ. 62,967 கோடியாக இருந்தது. இதே போல வரும் மார்ச் மாதத்தில், டிஜிட்டல் வழி விளம்பரமும் உயர்ந்து ரூ.2,938 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X