விண்டோஸ் 8.1 ஷார்ட்கட் கீகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2014
00:00

விண்டோஸ் 8 பயன்படுத்தும் பலர், விண்டோஸ் 8.1க்கு மாறிக் கொண்டு பல வசதிகளை அனுபவிப்பதாக எழுதி வருகின்றனர். இவர்களுக்கான சில ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்படுகின்றன. விண் 8.1ல் இவற்றைப் பயன்படுத்தி இன்னும் எளிதாகவும், விரைவாகவும் செயலாற்றலாம்.
1. விண்டோஸ் கீயுடன் D கீ அழுத்தினால், டெஸ்க்டாப் காட்டவும் மறைக்கவும் செய்யப்படும்.
2.விண்டோஸ் கீயுடன் X கீ அழுத்தினால், Quick Link மெனு கிடைக்கும்.
3.விண்டோஸ் கீயுடன் E கீ அழுத்தினால், File Explorer கிடைக்கும்.
4. டாஸ்க் மானேஜர் திறக்க Control, Shift and Esc ஆகிய கீகளை ஒரு சேர அழுத்தவும்.
5. Mobility Center திறக்க விண்டோஸ் கீயுடன் X கீ அழுத்தவும்.
6. Internet Explorer 11ல், CTRL மற்றும் T அழுத்த புதிய டேப் திறக்கப்படும்.
7. Internet Explorer 11ல், CTRL மற்றும் Tab கீ அழுத்த அனைத்து டேப்களுக்கிடையே செல்லலாம்.
8. CTRL அழுத்திக் கொண்டு மவுஸின் வீலை முன், பின்னாகச் சுழற்றினால், திரைக் காட்சி ஸூம் ஆகும், ஸூம் குறையும்.
9. விண்டோஸ் கீயை அழுத்தி தேட வேண்டியது எதனை வேண்டுமானாலும் டைப் செய்திடலாம். பைல், போல்டர், புரோகிராம் அல்லது மெனு என எதனையும் அதன் பெயரை டைப் செய்து தேடலாம்.
10. விண்டோஸ் கீயை அழுத்தியவாறே, கீழ் அம்புக் குறியை அழுத்தினால், புதிய யூசர் இண்டர்பேஸ் (Modern UI) அப்ளிகேஷன் மூடப்படும்.
11. விண்டோஸ் கீயை அழுத்தியவாறே, கூச்ஞ அழுத்தினால், புதிய யூசர் இண்டர்பேஸ் (Modern UI) அப்ளிகேஷன் மற்றும் பழைய டெஸ்க்டாப் யூசர் இண்டர்பேஸ் மாறி மாறிக் காணலாம்.
12. ஆல்ட் கீ அழுத்தியவாறு டேப் கீயை அழுத்தினால், மாடர்ன் யூசர் இண்டர்பேஸ் மற்றும் டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தப்படும் அனைத்திற்கும் அடுத்தடுத்து செல்லலாம்.
13. விண்டோஸ் கீ, ஷிப்ட் மற்றும் டேப் கீகளை ஒரு சேர அழுத்தினால், மாடர்ன் இண்டர்பேஸில் திறக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன்
களுக்கு இடையே முன், பின்னாகச் செல்லலாம்.
14. விண்டோஸ் கீ அழுத்தி க கீயை அழுத்தினால், display presentation நிலை கிடைக்கும்.
15. விண்டோஸ் கீயை அழுத்தியவாறே ஸ்பேஸ் பாரினை அழுத்தி, இன்னொரு மொழிக்கான கீ போர்ட் லே அவுட்டினைப் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X