கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்ட நேரம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2014
00:00

சில வாரங்களுக்கு முன் ஒரு வாசகர், கம்ப்யூட்டர் அப் டைம் குறித்து கேள்வி கேட்டதற்கு பதில் தந்திருந்தேன். பின்னர், இணையத்தில் உலா வந்த போது, பாய்ண்ட்ஸ்டோன் என்னும் தளத்தில் கிடைக்கும் PC Usage Viewer என்னும் புரோகிராம், மிகத் துல்லிதமாக, நம் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்ட காலத்தினை, நாள் வாரியாக, வார வாரியாக, மாதவாரியாகத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டதனை அறிந்தேன். இதோ அது குறித்த தகவல்கள்.
PC Usage Viewer என அழைக்கப்படும் இந்த புரோகிராம் முழுவதும் இலவசமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளத்தின் முகவரி http://www.pointstone.com/products/pcusageviewer/.விண்டோஸ் இயங்கிய நேரம் சார்ந்த (லாக் இன் / லாக் அவுட்) தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டு, அவை நாம் எளிதாகக் கண்டு அறியப்படும் பார்மட்களில் (visual format) தரப்படுகின்றன. எனவே, புரோகிராமினை இயக்கி, அதனை எப்போதும் பின்னணியில் இயங்க வைக்க தேவையில்லை.
தகவல்களைக் காண்பதிலும் மூன்று வகை பார்மட்கள் கிடைக்கின்றன. மாறா நிலையில் ஒரு தோற்றம், கிராப் வகை மற்றும் டெக்ஸ்ட் வகை என மூன்று நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் காணலாம். ஒவ்வொரு நாளிலும், எவ்வளவு நேரம் உங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது என்ற விபரங்களை நாம் அறியலாம். கம்ப்யூட்டரின் லாக் பைல்களை நீங்களாக நீக்காமல் இருக்கும் வரை, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, அதன் இயக்க நேரத்தை நாம் அறியலாம்.
இந்த புரோகிராம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய வகையில் தரப்படவில்லை என்பதனை இதன் குறையாகக் கூறலாம். விண்டோஸ் எக்ஸ்பி யிலிருந்து, இன்றைய விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டம் வரை அனைத்து விண்டோஸ் இயக்கங்களிலும் இது செயல்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X