ஸ்கை ட்ரைவ் புதிய பெயர் ஒன் ட்ரைவ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2014
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கை ட்ரைவ், ஒன் ட்ரைவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வெகுகாலமாக, தன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் சேவையில், ஸ்கை ட்ரைவினை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்த மைக்ரோசாப்ட் அளித்து வந்தது. விண்டோ ஸ் 8.1 தொகுப்புடன், இது மாறா நிலையில் க்ளவ்ட் ஹார்ட் டிஸ்க்காக, பைல்களை சேவ் செய்திடும் நிலையில் அமைக்கப்பட்டது. மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களுக்கு 20 ஜிபி இடம் அளிக்கப்பட்டது.
ஆனால், ஸ்கை ட்ரைவ் என்பது தங்கள் நிறுவனத்தின் பெயரை ஒட்டி இருப்பதாகவும், இது காப்புரிமை மீறுவதாக உள்ளது என பிரிட்டனைச் சேர்ந்த Sky broadcasting corporation நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக, சென்ற ஜூலை மாதம் தீர்ப்பு வந்ததால், மைக்ரோசாப்ட் நிறுவனம், அதனை ஏற்றுக் கொண்டு, பெயரை மாற்றுவதாக அறிவித்தது. தற்போது அதன் பெயரை "OneDrive” என மாற்றியுள்ளது.
தொழில் நுட்பம், ட்ரைவ் அனைத்தும் அதே நிலையில் மாற்றப்படாமல் இயங்கும். பெயர் மட்டும் மாற்றம் பெற்றுள்ளது.
மைக்ரோசாப்ட் தன் டிஜிட்டல் படைப்புகளுக்குப் பெயர் மாற்றுவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன் விண்டோஸ் 8 தொகுப்பில் பயன்படுத்தப்பட்ட மெட்ரோ ("metro”) என்னும் பெயரினை மைக்ரோசாப்ட், இதே போன்ற பெயர் உரிமைப் பிரச்னையில் மாற்றியது. அப்போது ஜெர்மனியைச் சேர்ந்த Metro AG என்னும் நிறுவனம், மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடர்ந்தது.
ஸ்கை ட்ரைவ் செயல்பாடு அப்படியே தொடர்ந்து இயங்கும். ஆனால், அதன் இணைய தளம் இனி OneDrive.com என்ற பெயரில் இருக்கும். இதனைப் பயன்படுத்த விரும்புபவர்கள், இனி இந்த தளம் சென்று, தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால், மைக்ரோசாப்ட் இது குறித்துத் தந்துள்ள அறிவிப்பினைப் ("Get ready for an even better place to store and share your favorite things across all your favorite devices,”) பார்த்தால், இந்த ஒன் ட்ரைவில் பல புதிய வசதிகள் இணைக்கப்படும் என்று தெரிகிறது. "உங்கள் வாழ்க்கையின் அனைத்திற்கும் ஒரே ஒரு இடம்” ("One place for all of your photos and videos. One place for all of your documents,”) என மைக்ரோசாப்ட் இந்த ட்ரைவினை அழைத்துள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X