சத்யா நாதெள்ளா சந்திக்கும் சிக்கல்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல இந்திய சாப்வேர் வல்லுநர்கள் ஆயிரக் கணக்கில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிறு வனத்தில் பல்வேறு பிரிவுகளில் தலைமைப்பொறுப் பேற்று பணிபுரிந்து வந்த, ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
46 வயதாகும் சத்யா நாதெள்ளா, பில் கேட்ஸ் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகியான ஸ்டீவ் பால்மருடன் இணைந்து பணியாற்றி யவர். 1992 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலில் பணியில் சேர்ந்து தொடர்ந்து 22 ஆண்டுகள் இங்கு பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னர், சன் மைக் ரோசிஸ்டத்தில் பணியாற்றினார். தேடல் தளமான பிங் மற்றும் க்ளவ்ட் இணைய சேவைப் பிரிவுகளைத் தலைமை ஏற்று நடத்தியவர் சத்யா நாதெள்ளா. க்ளவ்ட் பிரிவில் பணியாற்றிய போது, பல புதிய இலக்குகளை எட்டியவர். இவரின் முயற்சியால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Azure மற்றும் Office 365 ஆகியவற்றிற்கு பலத்த வரவேற்பு மக்களிடையே கிடைத்தது.
46 வயதாகும் சத்யா தன் 24 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டவர். இவருக்கு மூன்று குழந்தைகள்.எந்த சர்ச்சைக்கும் ஆளாக தவர் என்ற நல்ல பெயரையும், பல புதிய இலக்குகளை ஈட்டியவர் என்ற சாதனைப் பெயரையும் பெற்றவர் சத்யா நாதெள்ளா. தற்போது மொபைல் சாதனங்களில் தன் ஆழமான பார்வையை மைக்ரோசாப்ட் இறக்கி யுள்ளது. இந்த பிரிவினையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சாதகமாக வெற்றி பெற வைத்திடும் வகையில் சத்யா பணியாற்ற உறுதி எடுத்துள்ளார். ""இதற்கு முன்பு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் கம்ப்யூட்டர் பயன் பாட்டை அறிமுகப்படுத்தி, பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து, செயல்பட்டு அதனை வெற்றிகரமாக முடித்தோம். இனி, அடுத்த இலக்குகளை நிறைவேற்றுவோம்'' என தன் நிறுவன சகாக்களுக்கு சத்யா நாதெள்ளா தன் செய்தியாக அனுப்பி உள்ளார்.
சவால்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் இவர் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தான், இன்னும் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. ஆனால், அண்மையில் வெளியான விண்டோஸ் 8/8.1 ஆகியவை தங்கள் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்தினால், விண்டோஸ் பயனாளர்களைச் சற்று தள்ளி வைத்துள்ளன.
மேலும், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை யில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்கள் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் அதிக அளவில் இடம் பெற்று மக்களை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. விண்டோஸ் போன் புழக்கம் சற்று அதிகரித்து வந்தாலும், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வேகமாக அதிக இடத்தைப் பிடித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், சதயா நாதெள்ளா கீழ்க்காணும் செயல் பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும்.

1. விண்டோஸ் 9: கீ போர்ட் மற்றும் மவுஸ் இல்லாத சிஸ்டங்களை ஒதுக்க எண்ணி, பலர் விண்டோஸ் 7 உடன் நிலைத்துவிடுகின்றனர். விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து மாறத் திட்ட மிடும் நிறுவனங்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை மட்டுமே விரும்புகின்றனர். ஏற்கனவே Enterprise குரூப்பின் நிர்வாகத் தலைவராக இயங்கிய சத்யாவிற்கு, நிறுவனங்களின் இந்த தயக்கம் குறித்து நன்றாகவே உணர்ந்திருப்பார். வர இருக்கும் விண்டோஸ் 9, பழைய முறையில் டெஸ்க்டாப் நிலையிலேயே தொடங்கும் வகையில் அமைய இருப்பதாக வதந்திகள் கிடைத் துள்ளன. இதனைக் கூடுதல் வசதிகளுடன் அமைத்து, விரைவாக கொண்டு வந்தால், நிறுவனங்களின் தவிப்பு நின்று, விண்டோஸ் சிஸ்டத்திலேயே தொடர்வார்கள்.

2. விண்டோஸ் ஆர்.டி.: விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்தினை எந்த நம்பிக்கையில் மைக் ரோசாப்ட் கொண்டு வந்தது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. பொதுவாக, ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் ஒன்று வருகையில், அது பயனாளியை மையமாகக் கொண்டே அமைக்கப் பட்டிருக்கும். இதுவரை வந்த விண்டோஸ் இயக்கங்கள் அப்படியே அமைந்தன. இவற்றிற்கேற்ற சிப் செட்களை, இண்டெல் மற்றும் ஏ.எம்.டி. நிறுவனங்கள் தந்தன. ஆனால், விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டம், ARM ப்ராசசரை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது பிரச்னையைக் கொண்டு வந்தது. பயனாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ள சத்யா இந்த ஆர்.டி. சிஸ்டத்தினையே நீக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

3. விண்டோஸ் 8 சிஸ்டம்: வெளியாகி, ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதில் செயல் படும் வகையில் எம்.எஸ். ஆபீஸ் பதிப்பு வெளியாகவில்லை. பொதுவாக, விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் வல்லுநர் பிரிவுகள் இணைந்தே இயங்கும். விண்டோஸ் 8 உருவான போது, இந்த இணைந்த செயல்பாடு இல்லை. எனவே தான், இன்னும் விண்டோஸ் 8ல் இயங்கும் ஆபீஸ் தொகுப்பு கிடைக்க வில்லை. இதனை உணர்ந்து, இரண்டையும் இணைத்து செயல்படுத்துவது, சத்யாவின் தலையாய பணியாக இருக்கலாம்.

4. விண்டோஸ் போன்: பல மாதங்கள் திட்டமிடுதலுக்குப் பின்னர், மொபைல் போன் பிரிவில், தனக்கென ஓர் இடம் பெறும் இலக்குடன், விண்டோஸ் போன் சிஸ்டத் தினை மைக்ரோசாப்ட் அமைத்து வெளி யிட்டது. ஆனால், இன்னும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஓ.எஸ். சிஸ்டங்களுக்கு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே விண்டோஸ் உள்ளது. நோக்கியாவை வாங்கியுள்ள மைக்ரோசாப்ட், அதன் கட்டமைப்பினைப் பயன்படுத்தி, விண்டோஸ் போன் சிஸ்டத்தினை பரவலாக்க வேண்டும்.

5. ஒரே சிஸ்டம் தரும் அனுபவம்: ஆப்பிள் நிறுவனம் தன் போன் மற்றும் கம்ப்யூட்டர் களில் முற்றிலும் வேறான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையே தந்து வருகிறது. ஆனால், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் சிஸ்டத் தினையே, பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், போன்களிலும் தருவதாக அறிவித்தது. இதனால், பயனாளர்களின் சிஸ்டம் அனுபவம் எளிமையானதாகவும், கூடுதல் வசதிகள் கொண்டதாகவும் இருக்கும் என தெரிவித்தது. ஆனால், நடைமுறையில், விண்டோஸ் 8.1, விண்டோஸ் ஆர்.டி. மற்றும் விண்டோஸ் போன் என மூன்று வகை இண்டர்பேஸ்களை மைக்ரோசாப்ட் தந்தது. இதனால், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக் கென அப்ளி கேஷன் சாப்ட்வேர் எழுதுபவர்கள், ஒரே வடிவமைப்பினை, கட்டமைப் பினை மூன்றுக் குமாகத் தர இயலவில்லை. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அமைக்க வேண்டியுள்ளது. எனவே, மைக்ரோசாப்ட் மூன்றுக்குமாக ஒரே விண்டோஸ் இடை முகத்தினை அமைத்தால், தொடர்ந்து அனைத்திலும் வெற்றி பெற முடியும்.

6. கூகுள் சப்போர்ட் பெற வேண்டும்: விண்டோஸ் மற்றும் விண்டோஸ் போன் ஸ்டோர்களில், பரவலாகப் பயன்படுத்தப்படும் பல அப்ளிகேஷன்கள் கிடைப்பதில்லை. ஆனால், கூகுள் ப்ளே ஸ்டோரில் அனைத்து வசதிகளுக்குமாகப் பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. ஐபோன் பயன்படுத்து பவர்கள், கூகுள் மேப்ஸ், ஜிமெயில் மற்றும் யு ட்யூப் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த முடிகிறது. ஆண்ட்ராய்ட் பயனாளர்களும், இவற்றுடன், குரோம் பிரவுசரையும் பயன் படுத்த முடிகிறது. ஆனால், விண்டோஸ் பயனாளர்கள் இவை எதுவும் இல்லாமல் ஏமாற்றமடைகின்றனர். புதிய பொறுப் பேற்றுள்ள சத்யா, கூகுள் நிறுவனத்தை அணுகி, விண்டோஸ் மற்றும் விண்டோஸ் போன் சிஸ்டங்களில் இயங்கும் அப்ளிகேஷன் களை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளலாம். மைக்ரோசாப்ட் தன் மெயில் சேவை, பிங் தேடல் சாதனம், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், தன் மியூசிக் சேவை ஆகியவற்றை வாடிக்கை யாளர்கள் பயன்படுத்த வேண்டும் என எண்ணினாலும், மக்கள் விண்டோஸ் திரைக் காட்சி மற்றும் இடைமுகத்தினை விரும் பினாலும், சேவை என்று வரும்போது கூகுள் தருவதனையே விரும்புகின்றனர். அதனால் தான், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், ஜிமெயில், குரோம் பிரவுசர் மற்றும் பிற கூகுள் சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனை உணர்ந்து, புதிய நிர்வாகி, கூகுள் நிறுவனத்தை அணுக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

7. செம்மைப் படுத்த வேண்டிய விண்டோஸ் 8.1 : விண்டோஸ் 8.1., விண்டோஸ் 8 சிஸ்டம் தந்த சில ஏமாற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக வந்துள்ளது என மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஸ்டார்ட் பட்டன் தரப்பட் டுள்ளது. ஆனாலும், இது மீண்டும் நம்மை டைல்ஸ்களுக்கே இழுத்துச் செல்கிறது. ஸ்டார்ட் மெனுக்கு நாம் செல்லாமல், ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கு செல் கிறோம். எனவே விண்டோஸ் 8.1 சிஸ்டத் திலும் ஸ்டார்ட் மெனு புதையுண்டே உள்ளது. ஆனால், அதே நேரத்தில், ஸ்டார்ட் மெனு தரும் வகையில் பல தர்ட் பார்ட்டி புரோ கிராம்கள், இணையத்தில் நிறைய கிடைக் கின்றன. மக்கள் அவற்றைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. எனவே, இதனை உணர்ந்து, உண்மையாகவே, மக்கள் எதிர்பார்க்கும் ஸ்டார்ட் மெனுவினைத் தரும் வகையில் விண்டோஸ் 8.1 க்கான அப்டேட் பைல் தரப்பட வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X