விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
00:00

நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறீர்களா? முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தினை இதிலிருந்து பெற்று வருகிறீர்கள் என்பது உறுதி. முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுக்கும், இதற்குமான ஓர் அடிப்படை வேறுபாடு, இதன் டச் ஸ்கிரீன் இண்டர்பேஸ் தான். இதனை திரை தொடுதல் இன்றி, மவுஸ் மூலமாகவும் இயக்கலாம். இருப்பினும், இதுவரை முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் இயங்கிய செயல்பாடுகள் பல இதில் வேறாக இருக்கின்றன. இந்த சிஸ்டத்தில் பல ஷார்ட்கட் கீகள், இதன் செயல்பாட்டிற்கெனத் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு காட்டப்படுகின்றன.
விண்டோஸ் கீயுடனான சில ஷார்ட் கட்கீ செயல்பாட்டினை பார்க்கலாம்.
விண்டோஸ் கீயுடன்
+ D: நீங்கள் எந்த விண்டோவில் இருந்தாலும், இது டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் கீயினை மாற்றி மாற்றி அழுத்துகையில், அது விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் டெஸ்க் டாப்பிற்கு மாறி மாறி கொண்டு செல்லும்.
+ I: செட்டிங்ஸ் பேனல் (Settings Panel) திறக்கப்படும். இந்த ஷார்ட் கட் கீ , Control Panel, Personalization menu, Power menu (sleep, shut down, or restart) எனப் பல வசதிகளை உங்களுக்கு அளிக்கும்.
+ X: அட்வான்ஸ்டு விண்டோஸ் செட்டிங்ஸ் (Advanced Windows Settings) மெனு திறக்கப்படும். System, Device Manager, Command Prompt, மற்றும் பல வசதிகளை இதன் மூலம் பெறலாம்.
+ F: பைல்களைத் தேடும் வசதி கிடைக்கும். இந்த வசதி, குறிப்பாக பைல்களைத் தேடிப் பெறத் தரப்படுகிறது.
+ Period (“.”): அப்ளிகேஷன்களை ஒதுக்குகிறது. திரையின் வலது பக்கத்திற்கு அப்ளிகேஷன் ஒதுக்கப்படும். இதனால், மீதம் உள்ள விண்டோவின் இடத்தில், பல பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். Windows Key + Shift + Period அழுத்தினால், அப்ளிகேஷன் இடது புறம் ஒதுக்கப்படும்.
+ E: கம்ப்யூட்டர் திறக்கப்படும். உங்கள் பைல்களையும், அடிக்கடி நீங்கள் திறந்து பயன்படுத்தும் போல்டர்களையும் இதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.
+ L: ஸ்கிரீன் லாக் செய்யப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பணியிலிருந்து நீங்கள் உடனே விலகிச் செல்ல எண்ணினால், இந்த ஷார்ட் கட் கீ, ஸ்கிரீனில் உங்கள் செயல்பாடு லாக் செய்யப்படும். இதே கீயினை, பயனாளர் மாற்றிச் (switch users) செயல்படவும் பயன்படுத்தலாம்.
+ left arrow (and right arrow): அப்போதைய விண்டோவினை மூடும் அல்லது மாற்றும். இடது அம்புக் குறியுடன் செயல் படுத்தினால், அப்போதைய விண்டோ, திரையின் இடது புறமாக பெரிதாக்கப்படும். வலது அம்புக் குறி, வலது புறமாக இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும்.
+ 0 - 9: டாஸ்க் பாரில் உள்ள அப்ளிகேஷன் களையும் புரோகிராமினையும் இயக்கத் திற்குக் கொண்டு வரும். டாஸ்க் பாரில் ஏற்கனவே பின் அப் செய்யப்பட்ட புரோ கிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.இந்த எண், அவற்றின் வரிசை எண்ணைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 3 என்ற கீயுடன் செயல்படுத்தினால், மூன்றாவதாக உள்ள அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.
+ PrintScreen: ஸ்கிரீன் ஷாட் எடுக்க இதனைப் பயன்படுத்தலாம். இவ்வாறு எடுக்கப்படும் ஸ்கிரீன் ஷாட் படத்தினை, நீங்கள் தனியே பெயிண்ட் போன்ற ஒரு இமேஜ் புரோகிராமில் ஒட்டிப் பயன்படுத்த வேண்டியதில்லை. தானாகவே, அது Pictures என்னும் போல்டரில் சேவ் செய்யப்படும்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X