கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
00:00

கேள்வி: என் நண்பர் எனக்கு கார்ட் மற்றும் போஸ்டர் டிசைன் செய்வதற்கான சாப்ட்வேர் சிடி ஒன்றைக் கொடுத்தார். பிளாஸ்டிக் பாக்ஸில் சீல் செய்து இருந்தது. இதனைக் கம்ப்யூட்டரில் போட்டு இன்ஸ்டால் செய்கையில் ப்ராடக்ட் கீ (product key) தரவும் என்று கேட்கிறது. இது எந்த கீயைக் குறிக்கிறது. சிடியைப் போட்டவுடன் எங்கு இது காட்டப்படும்?
சி.என். தனுஷ்கோடி, தென்காசி.
பதில்:
ப்ராடக்ட் கீ என்பது சிடி ஒன்றில் உள்ள சாப்ட்வேர் அப்ளிகேஷனை இயக்குவதற்கான திறவு கோல். இது எண்களாலும் எழுத்துக்களாலும் ஆன ஒரு டெக்ஸ்ட். பணம் செலுத்தி வாங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒவ்வொன்றிலும், குறிப்பிட்ட அந்த சிடிக்கான ப்ராடக்ட் கீ தரப்பட்டிருக்கும். நீங்கள் குறிப்பிடுவதனைப் பார்த்தால், சிடி இருந்த பிளாஸ்டிக் டப்பாவில், பின்புறம் அல்லது உட்பகுதியில் இந்த ப்ராடக்ட் கீ சிறிய தாளில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். அல்லது ஸ்டிக்கராகவே டப்பாவில் ஒட்டப்பட்டிருக்கலாம். எனவே, பாக்ஸின் அனைத்து பக்கமும் தேடிப் பார்த்து, அதனை ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு, இன்ஸ்டால் செய்திடுகையில் அமைக்கவும். வேறு ஒரு கம்ப்யூட்டரில் நீங்களே இந்த சிடியைப் பதிவு செய்து பயன்படுத்த எண்ணினால், ஏற்கனவே பதிந்த கம்ப்யூட்டரில், இந்த சிடியை, சிடி ராம் ட்ரைவில் இணைத்து, அன் இன்ஸ்டால் செய்த பின்னரே, இன்னொரு கம்ப்யூட்டரில், மீண்டும் ப்ராடக்ட் கீ கொடுத்து பதிந்து கொள்ள முடியும்.

கேள்வி: உங்களின் அவசர உதவி தேவைப்படுகிறது. என் குழந்தைகள் பெர்சனல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், குறிப்பிட்ட நேரம் கழித்து, அது தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் வகையில் செட் செய்திட விரும்புகிறேன். இதனை எப்படி மேற்கொள்வது? இணையத்தில் அவர்கள் அதிக நேரம் இருப்பதனைக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர இது உதவும். தயவு செய்து பதில் தரவும்.
சி. பெருமாள், மதுரை.
பதில்:
ஒரு தந்தையாக உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. இதோ பதில். நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துவதால், இதற்கெனப் பல வழிகள் உள்ளன. விண்டோஸ் 7ல் Start Menu செல்லவும். விண்டோஸ் 8 எனில், சார்ம்ஸ் பார் வழியாக, தேடல் வசதியைப் பெறவும். இதில் "Parental” என டைப் செய்திடவும். விண்டோஸ் 7 Parental Controls என்பதனைக் காட்டும். விண்டோஸ் 8 Family Safety என்பதனைக் காட்டும். இங்கு Windows Live Family Safety Account என்பதனைச் செட் செய்திட ஆப்ஷன் தரப்படும். இது ஓர் இலவச சேவை தான். இதில் Windows Live ID மூலம் லாக் இன் செய்திட வேண்டும். அல்லது Windows Live அக்கவுண்ட் ஒன்று ஏற்படுத்த வேண்டும். இங்கு இந்த அக்கவுண்ட் ஏற்படுத்த, விண்டோஸ் மிக அழகாக வழி நடத்தும். இதில் சில ஆப்ஷன்கள் தரப்படும். அவை:
Web Filtering: உங்கள் குழந்தைகள் எந்த தளங்களைப் பார்க்க வேண்டும் என அனுமதிக்கலாம்.
Time Limits: எப்போது, எவ்வளவு நேரம் உங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதை அமைக்கலாம்.
Windows Store and Game Restrictions: உங்கள் குழந்தைகள் விளையாடுவதனை வரையறை செய்திட.
App Restrictions: என்ன என்ன அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படலாம் என்பதை வரையறை செய்திட.
Windows Family Security என்ற பிரிவில் நமக்குப் பல வசதிகள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் இலவசம் என்பது இதன் சிறப்பு. குழந்தைகள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கூட பின் ஒரு நாளில் நீங்கள் தணிக்கை செய்து கொள்ளலாம். அவர்கள் எதற்காக இணையம் செல்கின்றனர் என்று நீங்கள் அறிய எண்ணினால், இதுதான் சிறந்த வழி.

கேள்வி: எச்.டி.எம்.எல். பிரிவாக சி எச்.டி.எம்.எல். என ஒன்று உண்டா? இது எதற்குப் பயன்படுகிறது?
கே.ஷோபனா, திண்டுக்கல்.
பதில்
: CHTML என்பது Compact HTML என்பதின் சுருக்கமாகும். இது எச்.டி.எம்.எல். டூலின் சிறிய வகையாகும். இது சிறிய டிஜிட்டல் சாதனங்களில் பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டாக, மொபைல் போன், பி.டி.ஏ. சாதனம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. எச்.டி. எம்.எல். டூலின் அடிப்படை செயல்பாடுகளுக்கான குறியீடுகள் மட்டுமே கொண்டதாக இது உள்ளதால், இதில் டேபிள்கள், படங்கள், மேப்கள், பலவகையான எழுத்துவகைகள், ஸ்டைலான எழுத்து வகைகள், பின்னணி வண்ணங் கள், பின்புல படங்கள்,ஜேபெக் படங்கள் ஆகியவற்றை இதில் கொண்டு வர முடியாது. மேலும் மோனோக்ரோம் டிஸ்பிளே மட்டுமே இதில் முடியும்.

கேள்வி: வை-பி இணைப்பு நகரங்களில் பல இடங்களில் கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் தேவைப்படாமலேயே இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில், விடுதி போன்றவற்றில், அவர்களாகவே ஒரு பாஸ்வேர்ட் தருகிறார்கள். இப்படிப்பட்ட வை-பி இணைப் பினைப் பயன்படுத்தலாமா?
எஸ். தரணி, தென்காசி.
பதில்:
அவசியம் எனில் பயன்படுத்தலாம். ஆனால், சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, பாஸ்வேர்ட் தேவைப்படாத வை-பி இணைப்பு எனில், அதிக எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், அத்தகையை இணைப்பில், நீங்கள் அனுப்பும் எதனையும் மற்றவர்கள் குறுக்கிட்டுக் காணும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் பார்க்கும் பைல், உங்கள் லாக் இன் பெயர், பாஸ்வேர்ட் என எதனையும் மற்றவர்கள் முயற்சித்தால் அறிந்து கொள்ளலாம். எனவே, இணைப்பைப் பயன்படுத்தும் முன் கீழ்க்காணும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.
1. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது சாதனத்தினை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கவும்.
2. உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், அன்றைய நாள் வரை அப்டேட் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
3. உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பும் அன்று வரை அப்டேட் செய்திருக்க வேண்டும்.
4. பயர்வால் பாதுகாப்பினை இயக்கவும். விண்டோஸ் சிஸ்டத்தில் ஒரு பயர்வால் டூல் உள்ளது. ஆனால், தர்ட் பார்ட்டி பயர்வால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
5. உங்கள் கம்ப்யூட்டரில் பைல் பகிர்ந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருந்தால், முதலில் அதனை மாற்றி அமைக்கவும்.
பொதுவாக, இது போன்ற பொது இணைய இணைப்புகளில், வங்கி நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளாதீர்கள். https:// என பாதுகாக்கப்பட்ட முன்னொட்டு உள்ள முகவரிகளைக் கொண்ட தளங்களை மட்டும் காண்பது நல்லது.

கேள்வி: விண்டோஸ் 8 பயன்படுத்துகிறேன். இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான், மாறா நிலையில் பிரவுசராக உள்ளது. அதனைப் பயன்படுத்துவதே நல்லது என எழுதி இருக்கிறீர்கள். என்னுடைய கம்ப்யூட்டர் மானிட்டரில் டச் ஸ்கிரீன் இல்லை. எனவே எந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினைப் பயன்படுத்த வேண்டும்?
சி. ஷோபனா தேவி, கோவை.
பதில்
: இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மெட்ரோ பதிப்பு, என ஒன்று கிடைக்கும். இது விண்டோஸ் 8 சிஸ்டத்தினை தொடு திரையில் இயக்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இதில் உள்ள பட்டன்கள் சற்றுப் பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான், நம் விரலால் சரியாகத் தொட்டு இயக்க முடியும். இந்த கட்டங்களும் வேறு வகையில் அமைக்கப் பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதனை தொடு உணர் திரை இல்லாத மானிட்டர்களிலும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தியவர்கள், மவுஸின் கர்சருக்கு இது சரியாகவும் விரைவாகவும் இயங்கவில்லை எனக் குறை கூறினார்கள். எனவே தான் மைக்ரோசாப்ட், மவுஸ் கொண்டு துல்லியமாக இயக்கும் வகையில், இன்னொரு பதிப்பினைக் கொண்டு வந்துள்ளது. உங்களுடைய மானிட்டருக்கேற்ற வகையில், அதனையே நீங்கள் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் இணையத்தில் தேடிப் பெறவும். கூகுளில் தேடினாலே, அவை இருக்கும் தளங்கள் கிடைக்கும்.

கேள்வி: விண் ஆம்ப் இனி இல்லை என சில மாதங்களுக்கு முன்னர் எழுதி இருந்தீர்கள். என்னிடம் இதன் இறுதி பதிப்பு விண் ஆம்ப் 5.66 உள்ளது. இதனை பதிந்து இயக்கலாமா? ஏதேனும் பிரச்னை வருமா?
என். ரஹோத்தமன், சிவகாசி.
பதில்:
தாராளமாக இயக்கலாம். எந்தப் பிரச்னையும் வராது. பலர் இன்னும் தங்களுக்குப் பிடித்த, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த விண் ஆம்ப் இசை பெட்டியை விட்டுவிட மனமில்லாமல் இருக்கின்றனர். இது அதன் சிறப்பையே காட்டுகிறது. இப்போதும் அதன் இணைய தளத்திலிருந்து (http://winamp.en.softonic.com/) இறுதியாக வெளியிடப்பட்ட விண் ஆம்ப் அப்ளிகேஷன் பைல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கேள்வி: இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் அதிகம் பேர் இருப்பது பெங்களூருவா? புனேயா?
எஸ். சிரஞ்சீவி, தாவண்கெரே.
பதில்:
இரண்டும் இல்லை. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை தான். இங்கு இணையத்தைப் பயன்படுத்துவோர் ஒரு கோடியே 21 லட்சம் என அண்மைத் தகவல் ஒன்று கூறுகிறது.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X