பன்மொழித் திறனுடன் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 068 விலை ரூ. 6900
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
00:00

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தில், அதிகார பூர்வ அறிவிப்பில், அதன் புதிய ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இது Micromax Bolt A068 என அழைக்கப்படுகிறது. இந்த போனின் சிறப்பு இதன் பன்மொழித் திறன் ஆகும். இந்தியாவின் 20 மாநில மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட் டைப் செய்து அனுப்பலாம். ஆங்கில தட்டச்சு முறையில் டைப் செய்து, மாநில மொழிகளில் சொற்களைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எழுத்து வகைகளையும் பயனாளரே தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
இதில் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை டச் ஸ்கிரீன் கொண்டு 5 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 0.3 வெப் கேமராவும், 5 எம்.பி. வழக்கமான கேமராவும் இயங்குகின்றன. இதன் மூலம் போட்டோவையும் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்திடலாம்.
போனில், MT 6572M டூயல் கோர் ப்ராசசர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி தரப்பட்டு, அதனை அதிகப்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.எஸ்., 3ஜி, புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. இணைவு கிடைக்கிறது. இதில் தரப்பட்டும் லித்தியம் அயன் பேட்டரி 2,000 mAh திறனுடன் உள்ளது. ஸ்நாப் டீல் இணைய வர்த்தக தளத்தில் ரூ.6,900 என்று விலையிடப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X