எல்.ஜி.எல் சீரிஸ் 3 மொபைல்கள் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 பிப்
2014
00:00

எல்..ஜி. மொபைல் போன் நிறுவனம், தன் எல் சிரீஸ் வரிசையில், புதியதாக மூன்று போன்கள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. L40, L70 மற்றும் L90 என இவை அழைக்கப் படுகின்றன. இவை ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இவை மூன்றிலும் முறையே 3.5 , 4.5 மற்றும் 4.7 அங்குல அகலத்தில் திரைகள் வெவ்வேறு டிஸ்பிளே தன்மையுடன் தரப்படுகின்றன. அனைத்திலும் 3ஜி தொழில் நுட்பம் இயங்கும். கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இவை கிடைக்கும். எல் 40 மாடலில், 1.2 டூயல் கோர் கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 3 எம்பி பின்புறக் கேமரா, 512 எம்பி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, இதனை 32 ஜிபிக்கு அதிகப்படுத்தும் வசதி, 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் கிடைக்கும். சந்தையில் கிடைப்பதைப் பொறுத்து, இதில் 1,700 அல்லது 1,540 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்படும். இதன் பரிமாணம் 109.4 x 59.0 x 11.9 மிமீ ஆக இருக்கும்.
எல் 70 மாடல் மொபைல் போனில், 4.5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், 8 அல்லது 5 எம்பி கேமரா, முன்புறமாக 0.3 எம்பி கேமரா, 1 ஜிபி ராம் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி தரப்படும். 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் வசதியைத் தரும். இதில் 2,100 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படும். இதன் பரிமாணம் 127.2 x 66.8 x 9.5 மிமீ ஆக இருக்கும்.
எல் 90 மாடல் போனில், 4.7 அங்குல திரை கெபாசிடிவ் டச் வசதியுடன் கூடியதாகத் தரப்படும். இதில் அதிக வேகத்துடன் இயங்கும் வகையில், 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர் இணைக்கப்படும். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 1.3 எம்பி திறன் கொண்ட முன்புறக் கேமரா இருக்கும். இதன் ராம் மெமரி திறன் 1 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். இயங்கும். இதில் 2,540 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்படும். இதன் பரிமாணம் 131.6 x 66.0 x 9.7 மிமீ ஆக இருக்கும்.
சந்தைக்கு வரும்போது இவற்றின் விலை தெரியப்படுத்தப்படும். இதே வசதிகளுடன் கூடிய மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களுடன் போட்டியிடும் வகையிலேயே விலை தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் போன்கள் எல்.ஜி. நிறுவனத்தின் தயாரிப்பு தான் வாங்குவேன் என விருப்பம் உள்ளவர்கள், இவை சந்தைக்கு வரும்வரை காத்திருக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X